காதுகளில் ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் 3டி ஹெட்செட், இனி இது தான் எதிர்காலமாம்.!!

By Meganathan
|

சமீபத்தில் நடந்து முடிந்த தொழில்நுட்ப விழாக்களின் மூலம் இந்தாண்டு அதிகப்படியான விர்ச்சுவல் ரியால்டி எனப்படும் தோற்ற மெய்ம்மை தொழில்நுட்பங்களின் வரவு அதிகரிக்கும் என உறுதியாக நம்பப்படுகின்றது. கணினியில் உருவாக்கப்படும் தோற்றங்கள் மெய்யுருவாக காட்டப்படும் விர்ச்சுவல் ரியால்டி தொழில்நுட்பங்களை தொடர்ந்து மற்றும் ஓர் உன்னத தொழில்நுட்பம் மக்களை கவர காத்திருக்கின்றது.

காதுகளில் ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் 3டி ஹெட்செட்.!!

கடந்த ஆண்டுகளில் 3டி ப்ரின்டிங் எனும் முப்பறிமாண அச்சாக்கம் அதிக பிரபலமானதை தொடர்ந்து இந்த ஆண்டு 3டி ஆடியோ பிரபலமாகும் என 3டி சவுண்டு லேப் மற்றும் ஜாப்ரா நிறுவனங்கள் கூறி வருகின்றன. தற்சமயம் இவை 3டி சவுண்டு வழங்கும் ஹெட்போன்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

காதுகளில் ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் 3டி ஹெட்செட்.!!

உண்மையில் 3டி சவுண்டு என்பது பல்வேறு சென்சார்களின் உதவியோடு மனித தலையின் பல்வேறு பகுதிகளில் ஒலியை வழங்குவதாகும். இதன் மூலம் மிகவும் துல்லியமான ஒலியை அனுபவிக்க முடியும். இந்த வகை ஒலியை இசை மட்டுமில்லாது, விளையாட்டு உள்ளிட்டவைகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதுகளில் ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் 3டி ஹெட்செட்.!!

3டி சவுண்டு லேப்ஸ் எனும் பிரென்ச் நிறுவனம் தனது முதல் 3டி ஆடியோ ஹெட்செட் கருவிகளை விற்பனை செய்ய துவங்கி விட்டன. 3டி சவுண்டு ஒன் என்ற பெயரில் இந்த ஹெட்செட்கள் $299 இந்திய மதிப்பில் ரூ.20,265.46 விற்பனை செய்யப்படுகின்றது. இந்த வகை ஹெட்செட் ஜிபிஎஸ், கைரோஸ்கோப், காம்பஸ், அக்செல்லோமீட்டர் உள்ளிட்ட பல்வேறு சென்சார்களின் உதவியோடு வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றது.

காதுகளில் ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் 3டி ஹெட்செட்.!!

இதை தொடர்ந்து ப்ளூடூத் சார்ந்த கருவிகளுக்கு பெயர் போன் ஜப்ரா நிறுவனமும் 3டி ஆடியோ ஹெட்செட் ஒன்றை உருவாக்கி வருகின்றது. 'இன்டெலிஜென்ட் ஹெட்செட் டெவலப்பர் எடிஷன்' எனும் பெயரில் இந்த ஹெட்செட் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஹெட்செட் வகைகள் எங்கும் எடுத்து செல்ல கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதன் பயனர்கள் தாங்கள் பயணிக்கும் இடங்களில் 3டி ஆடியோவினை அனுபவிக்க முடியும். இது கிட்டத்தட்ட வீட்டில் பொருத்தப்படும் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களுக்கு நிகரானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
3D audio to be the next big thing in 2016. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X