பார்ன் வெப்சைட்ஸ்க்கு இந்தியாவில் இனி தடை!!!

By Keerthi
|

இன்றைய காலகட்டத்தில் இணையம் நல்ல விசயங்களுக்கு பயன்பட்டாலும், கெட்டதுக்கே அதிகம் பயன்படுகின்ரது.

மேலும் இணைய தளங்கள் பொழுது போக்கு அம்சம் என்ற பெயரில் கலாசார சீரழிவுக்கு வித்திடுகிறது. சில இணைய தளங்கள் ஆபாச படங்களை வெளியிட்டு இளைய சமுதாயத்தை கெடுக்கிறது.

நல்ல விஷயங்களுக்காக இணைய தளத்தில் தேடினாலும் ஆபாசம் அங்கும் ஏதாவது ஒரு வகையில் வந்து புகுந்து விடுகிறது.

ஆபாச படங்களை பதவிறக்கம் செய்தும் இணைய தளங்கள் மூலம் பரவச் செய்கிறார்கள். இணைய தளத்தில் சென்றால் யார் வேண்டுமானாலும் ஆபாச படம் பார்க்கலாம் என்ற நிலை உள்ளது.

Click Here For New Gadgets Gallery

பார்ன் வெப்சைட்ஸ்க்கு இந்தியாவில் இனி தடை!!!

இதனால் இளைய சமுதாயம் சீரழியும் நிலை உருவாகி இருப்பதாக மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

ஆபாச படங்கள் வெளியிடும் இணைய தளங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடப்பட்டன. இது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது.

இணைய தள இணைப்புகள் தொலை தொடர்புத்துறை மூலம் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஆபாச படங்கள் வெளியிடும் இணைய தளங்களை தொலைத் தொடர்புத்துறை மூலம் முடக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

எந்தெந்த இணைய தளங்கள் ஆபாச படங்களை வெளியிடுகின்றன என்பதை தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையம் கண்காணித்தது. இதில் 39 இணைய தளங்கள் முறைகேடாக ஆபாச படங்களை வெளியிட்டு வருவது கண்டுபிடித்தது.

இது போன்ற ஒளிபரப்புகளை தடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா என்றும் ஆலோசிக்கப்பட்டு அதற்கான சட்ட விதிமுறைகளும் ஆலோசிக்கப்பட்டன. இதையடுத்து 39 இணைய தளங்கள் முடக்கப்படுகின்றன.

மேலும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் மத்திய அரசு அனைத்து வெப்சைட்களையும் எச்சரித்துள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X