நடிக்க வாய்ப்பு தருகிறேன்.,ஆபாச புகைப்படத்தை அனுப்பு: நம்பி அனுப்பிய பெண்- அதிர்ச்சி சம்பவம்!?

|

டெல்லியில் பெண்களின் பெயரில் சமூகவலைதளத்தில் போலி கணக்கு தொடங்கி பல்வேறு பெண்களை நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி வந்த நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

வெப் சீரிஸ்கள் மீதான ஆர்வம்

வெப் சீரிஸ்கள் மீதான ஆர்வம்

வெப் சீரிஸ்கள் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வெப் சீரிஸ் மிகவும் பிரபலமடைந்துள்ளது என்றே கூறலாம். திரைப்படத்திற்கு இணையான வரவேற்பு தற்போது வெப் சீரிஸ்-களுக்கு கிடைத்து வருகிறது.

வெப் சீரிஸ்-ல் கவனம்

வெப் சீரிஸ்-ல் கவனம்

திரைப்படத்தில் பிரபலமடைந்த பலரும், மார்க்கெட் இழந்த நடிகைகளும் வெப் சீரிஸ்-ல் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றனர். நடிக்க வாய்ப்புத் தேடும் பலரும் வெப் சீரிஸ்-ல் ஆர்வம் காட்டி வாய்ப்புத் தேடி வருகின்றனர்.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராஷி கோயெல் என்ற பெண் ஒருவரின் சமூகவலைதள பக்கத்தில் இருந்து தனக்கு குறுஞ்செய்தி வந்ததாகவும், அதில் அவர் வெப்சீரிஸில் நடிக்க தனக்கு வாய்ப்பு தருவதாக தெரிவித்தார்.

வருடம் முழுவதும் தினசரி டேட்டா சலுகை:ஏர்டெல், ஜியோ, வீ வாடிக்கையாளர்களே!வருடம் முழுவதும் தினசரி டேட்டா சலுகை:ஏர்டெல், ஜியோ, வீ வாடிக்கையாளர்களே!

நிர்வாண புகைப்படங்களை கேட்டு தொந்தரவு

நிர்வாண புகைப்படங்களை கேட்டு தொந்தரவு

வெப் சீரிஸ் நடிப்பதற்கு தனது சாதாரண புகைப்படங்கள் மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்த தானும் அனுப்பினேன். பின் நிர்வாண புகைப்படங்களை கேட்டு ராஷி கோயல் என்ற பெண் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார். இதையடுத்து அவரது மொபைல் எண்ணை பிளாக் செய்துவிட்டேன்.

இரண்டு பேர் கால் செய்து மிரட்டல்

இரண்டு பேர் கால் செய்து மிரட்டல்

இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு இரண்டு பேர் கால் செய்து, தாங்கள் கூறியதை செய்யவில்லை என்றால் நான் அனுப்பிய அனைத்து புகைப்படங்களையும் இணையத்தில் வைரலாக்கி விடுவேன் என மிரட்டுகின்றனர் என அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

நான்கு போலி கணக்குகள்

நான்கு போலி கணக்குகள்

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ராஷி கோயெல் என்ற சமூகவலைதள ஆய்வு சோதனை செய்தனர். அப்போது அந்த கணக்கை வைத்திருப்பவர் பெண் இல்லை ஒரு ஆண் என்பது தெரியவந்தது. மம் சந்த் என்ற ஒரு ஆண், பெண்களின் பெயரில் நான்கு போலி கணக்குகளை வைத்து நடிக்க வாய்ப்பு தருவதாக பல பெண்களை ஏமாற்றி மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.

நான்கு சிம்கார்டுகள், மூன்று செல்போன்கள்

நான்கு சிம்கார்டுகள், மூன்று செல்போன்கள்

இதையடுத்து மம் சந்தின் நான்கு சிம்கார்டுகள், மூன்று செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸார், அவரது போனில் பல பெண்களின் புகைப்படங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து மம் சந்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

File Images

Source: timesnownews.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
37 Year Old Man Arrested For Cheating and Blackmailing Aspiring Models on SocialMedia

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X