Home
News

Redmi 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க சரியான நேரம் இதுதான்: 37 சதவீதம் தள்ளுபடி அறிவிப்பு.!

ரெட்மி நிறுவனம் இந்திய சந்தையில் அசத்தலான ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் சாதனங்களை அறிமுகம் செய்கிறது ரெட்மி.

37 சதவீதம் தள்ளுபடி

இந்நிலையில் ரெட்மி நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அமேசான் தளத்தில் ரெட்மி 43-இன்ச் ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி (L43M6-RA/L43M7-RA) மாடலுக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ரூ.34,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Redmi 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க சரியான நேரம் இதுதான்.!

தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பின் மூலம் இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.21,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அட்டகாசமான அம்சங்கள்

இந்த ரெட்மி 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920x1080 பிக்சல்ஸ், 178 Degree wide viewing angle, 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் மென்பொருள் வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

Redmi 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க சரியான நேரம் இதுதான்.!

அதாவது சக்திவாய்ந்த குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

ரெட்மி 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எனவே நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை இதில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவுடன் இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Redmi 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க சரியான நேரம் இதுதான்.!

தரமான ஆடியோ

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு இந்த ரெட்மி 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு Vivid Picture Engine ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

Redmi 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க சரியான நேரம் இதுதான்.!

கனெக்டிவிட்டி

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூட்யூப் உள்ளட்ட பல்வேறு செயலிகளை இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் புளூடூத் 5.0, வைஃபை, யுஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இந்த ஆண்டு ரெட்மி நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
37 percent off on Redmi 43-inch Android 11 Series Smart TV on Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X