Home
News

Airtel SIM க்கு மாதம் ரூ.154 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்.. ப்ரீ ஹேலோ டியூன்ஸ்!

365 நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் ஹேலோ டியூன்ஸ் சலுகையை மாதத்துக்கு ரூ.154 செலவில் கொடுக்கிறது, ஏர்டெல் நிறுவனம். மலிவு விலைக்கு வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கொடுக்கும் திட்டமாக இருப்பதால், கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் சிம் ஆக்டிவ் ஆகிய மூன்று சலுகைகள் கொண்ட திட்டங்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் திட்டங்களை களமிறக்கின. பிஎஸ்என்எல் நிறுவனத்திடம், ஏற்கனவே இதுபோன்ற திட்டங்கள் இருக்கின்றன.

Airtel SIM க்கு மாதம் ரூ.154 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ்!

ஆகவே, இந்த திட்டங்களில் மினிமம் சலுகைகள் மட்டுமே கிடைப்பதால், டேட்டா சலுகையுடன் கிடைக்கும் திட்டங்களைவிட மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இதில் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1849 திட்டமானது, 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஒரு மாதத்துக்கு ரூ.154 மட்டுமே செலவாகுவதால், வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் சிம் ஆக்டிவ் கிடைக்கும். அதேபோல ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் சில கூடுதல் சலுகைகளும் இதில் கொடுக்கப்படும். ஆனால், டேட்டா சலுகை துளி கூட கிடைக்காது. வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களை ஆப்ஷனில் எடுக்கலாம். இதை தெரிந்து கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

ஏர்டெல் ரூ.1849 திட்ட விவரங்கள் (Airtel Rs 1849 Plan Details): 12 மாதங்களுக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) கொடுக்கும். ஆகவே, இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கும். இதில் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் அடங்கும்.

3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். இந்த சலுகைகள் திட்டத்துக்கு கிடைக்கும் சலுகைகளாக இருக்கின்றன. ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் சலுகைகளை பார்க்கையில், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை இருக்கிறது. 30 நாட்களுக்கு ஒரு டியூனை மாற்றி கொள்ளலாம். ஆகவே, 12 முறை மாற்றி கொள்ள முடியும்.

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு அண்மையில் சேர்க்கப்பட்ட அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சலுகையை இந்த திட்டமும் கொடுக்கிறது. 12 மாதங்களுக்கு இதை பயன்படுத்தலாம். மேலும், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் லைவ் அலெர்ட் சலுகையை கொடுத்து இருக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமே இதில் கிடைக்கும். டேட்டாவுக்கு வவுச்சர்களை பெற்று கொள்ளலாம்.

ரூ.33 முதல் டேட்டா வவுச்சர்கள் கிடைக்கின்றன. சில டேட்டா வவுச்சர்களில் ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. ரூ.33 விலைக்கு கிடைக்கும் டேட்டா வவுச்சரில் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு 1 நாள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ரூ.39 விலை கொண்ட டேட்டா வவுச்சரில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இதற்கு 3 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

ரூ.48 விலை கொண்ட டேட்டா வவுச்சரில் ஜியோஹாஸ்டார் மொபைல் (Jio Hotstar Mobile) சந்தா கிடைக்கும். இதை 1 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். டேட்டாவை பார்க்கையில் 1 ஜிபி மட்டுமே கிடைக்கும். 1 மாத வேலிடிட்டி கொடுக்கப்படும். ரூ.49 விலை கொண்ட டேட்டா வவுச்சரில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். ஆனால், 1 நாள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
365 Days Validity For Airtel Prepaid Customer With Voice Calls At Rs 1849 Check SIM Active Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X