Home
News

ஆளுக்கு 2 வாங்கலாம்.. வெறும் ரூ.9,000க்கு ஆண்ட்ராய்டு டிவி.. பிளிப்கார்ட்டில் ஆர்டர் குவியுது.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) தள்ளுபடியில் வெறும் ரூ.9,000 விலைக்கு எல்இடி டிஸ்பிளே, 1 ஜிபி ரேம், 20W ஸ்பீக்கர்கள், நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்மார்ட் ரிமோட் போன்ற அனைத்து அம்சங்களுடன் எம்ஐ 4ஏ டிவி (Mi 4A TV) விற்பனைக்கு வந்துள்ளது.

எம்ஐ 4ஏ டிவி அம்சங்கள் (Mi 4A TV Specifications): இந்த டிவி 32 இன்ச் (1366×768 பிக்சல்கள்) எச்டி எல்இடி (HD LED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 178 டிகிரி வியூ ஆங்கிள் (View Angle), 6.5எம்எஸ் டைனாமிக் ரெஸ்பான்ஸ் (Dynamic Response) மற்றும் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

வெறும் ரூ.9,000க்கு ஆண்ட்ராய்டு டிவி! பிளிப்கார்ட்டில் குவியும் ஆர்டர்

இந்த டிவியில் டைனாமிக் நாய்ஸ் ரெடக்ஷன் (Dynamic Noise Reduction), கலர் டெம்பரேச்சர் கன்ட்ரோல் (Color Temperature Control) ஆகிய வீடியோ அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு ஸ்டாண்டர்ட் (Standard), மூவி (Movie), விவிட் (Vivid), ஸ்போர்ட் (Sport) மற்றும் கஸ்டம் (Custom) ஆகிய 5 பிக்சர் மோட்கள் வருகின்றன.

ஆண்ட்ராய்டு பேட்ச்வால் (Android PatchWall) சப்போர்ட் கொண்ட குவாட் கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் ஏ53 (Quad Core Amlogic Cortex A53 ) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி-450 எம்பி3 ஜிபியு (Mali-450 MP3 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த டிவியில் 1 ஜிபி ரேம் + 8 மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிவியின் ஆடியோ அம்சங்களை பொறுத்தவரை 20W அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த ஸ்பீக்கர்களில் டிடிஎஸ் (DTS), ஸ்டீரியோ (Stereo), 5 பேண்ட் இக்குவலைசர் (5 Band Equilizer) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வருகிறது.

ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube), சோனிலிவ் (Sony LIV) உள்ளிட்ட அனைத்து ஓடிடி ஆப்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த டிவியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மொழிகள் சப்போர்ட் உள்ளது.

இந்த எம்ஐ டிவியில் வயர்லெஸ் எல்ஏஎன் அடாப்டர் (Wireless LAN Adapter), ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi), ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு குரோம்காஸ்ட் (Chromecast) சப்போர்ட் வருகிறது. மேலும் 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், ஒரு ஆர்ஜிபி போர்ட், ஆடியோ வீடியோ போர்ட், ஹெட்போன் ஜாக் மற்றும் அனலாக் ஆடியோ இன்புட் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிவிக்கு ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote)வருகிறது. இதில் இன்டர்நெட் அக்சஸ் (Internet Access) சப்போர்ட் இருக்கிறது. அதோடு கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் ( Google Voice Assistant) மற்றும் வாய்ஸ் சர்ச் (Voice Search) அம்சம் வருகிறது. இந்த டிவி மொத்தமாக 3.9 கிலோ எடை கொண்டுள்ளது.

இந்த டிவிக்கு 1 வருட வாரண்ட்டி வருகிறது. இந்த டிவியை ஆர்டர் செய்தால் டேபிள் மவுண்ட்டிங், வால் மவுண்ட்டிங் கிட்கள் கொடுக்கப்படும். பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு வருகிறது. இந்த எம்பி 4ஏ 32 இன்ச் டிவி ரூ.14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விலையில் 36 சதவீதம் தள்ளுபடியை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதாவது, ரூ.14,999 மதிப்புள்ள இந்த டிவியை 36 சதவீத ஆஃபர் போக ரூ.9,499க்கு வாங்கலாம். இந்த விலையிலும், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.475 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ.9,024 விலையில் இந்த டிவியை வாங்கிக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
36 Percentage Discount on Mi 4A 32 inch LED Smart Android TV in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X