36 மில்லியன் ஆண்டு பழைமையான ராட்சஸ திமிங்கிலம்.. இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்படாத முதல் பொக்கிஷம்..
பெருவியன் பாலைவனத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 36 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த பழங்கால ராட்சஸ திமிங்கிலத்தின் புதை படிவ எச்சங்களை புதை படிவ ஆராய்ச்சியாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டனர். பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத முதல் உயிரினத்தின் எலும்பு படிமம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 36 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த இந்த ராட்சஸ திமிங்கிலத்தின் வாழ்க்கை முறை மற்றும் அன்றைய காலகட்டத்தில் இருந்த பூமியின் சூழ்நிலையை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கணித்துள்ளனர்.

பூமியில் வாழ்ந்த ராட்சஸ திமிங்கிலம் பாசிலோசரஸ் (basilosaurus)
நேற்று வெளி உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ராட்சஸ திமிங்கிலத்தின் நிகழ்வின் போது ஆராய்ச்சியாளர் கூறுகையில், "புதிய பெருவியன் பாசிலோசரஸை (basilosaurus) நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம், இது 36 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தொன்மையான திமிங்கிலத்தின் முழுமையான மண்டை ஓடு" என்று எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்த குழுவின் தலைவரான பழங்கால ஆராய்ச்சியாளர் மரியோ உர்பினா ஊடகத்திடம் கூறியுள்ளார்.

பாலைவனத்தில் கிடைத்த ராட்சஸ கடல் திமிங்கிலத்தின் புதைபடிமம்
லிமாவுக்கு தெற்கே சுமார் 350 கிலோமீட்டர் (215 மைல்) தொலைவில் உள்ள இகா டிபார்ட்மென்ட்டில் உள்ள ஒக்குகேஜ் பாலைவனத்தில் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த பாசிலோசொரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக உர்பினா கூறினார். இந்த பாழடைந்த நிலப்பரப்பு பல மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடலாக இருந்தது என்றும் அவர் கூறினார். மேலும், அதன் குன்றுகள் அதிக எண்ணிக்கையிலான பழமையான கடல் பாலூட்டி எச்சங்களை அளித்துள்ளது.

55 அடி நீளம் கொண்ட அக்குகஜே பிரிடேட்டர்
இதற்கு ஆராய்ச்சியாளர்கள் "அக்குகஜே பிரிடேட்டர் (Ocucaje Predator)" என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். இது சுமார் 17 மீட்டர் நீளம் கொண்டது. அதாவது 55 அடி நீளம் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பாரிய, சக்திவாய்ந்த பற்களைப் பயன்படுத்தி இந்த ராட்சஸ திமிங்கிலம் டுனா மீன்கள், சுறாக்கள் மற்றும் மத்தி மீன்களை உணவாக உண்டு உயிர்வாழ்ந்துள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மிக பெரிய கடல் உயிரினம் இது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை இதுபோன்ற ஒன்றைப் பூமியில் யாரும் கண்டுபிடிக்கவில்லையா?
"இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் உலகில் வேறு எந்த மாதிரிகளும் இதுபோன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை," என்று லிமாவில் உள்ள சான் மார்கோஸ் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் உர்பினா கூறியுள்ளார். குழு உறுப்பினர் Rodolfo Salas-Gismondi, பாசிலோசொரஸ் மற்ற அறியப்பட்ட பண்டைய திமிங்கில வகைகளிலிருந்து அதன் அளவு மற்றும் அதன் பற்களின் வளர்ச்சியால் வேறுபடுகிறது என்று விளக்கினார். இவை இரண்டும் இந்த கடல் விலங்கு உணவுச் சங்கிலியின் உச்சியில் இருந்து என்பதைக் குறிக்கிறது.

பெருவியன் கடலின் வரலாற்றை நாம் புனரமைக்க முடியும்
"இது ஒரு அசாதாரண கண்டுபிடிப்பு, ஏனெனில் அதன் சிறந்த நிலை பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது," என்று அவர் கூறியுள்ளார். இந்த விலங்கு அதன் காலத்தின் மிகப்பெரிய வேட்டையாடுபவர்களில் ஒன்றாகத் திகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் பெருவியன் கடல் சூடாக இருந்தது என்றும், லிமாவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் முதுகெலும்பு பழங்காலவியல் துறையின் தலைவரான சலாஸ்-கிஸ்மோண்டி கூறினார். இந்த வகை புதைபடிமத்திற்கு நன்றி, பெருவியன் கடலின் வரலாற்றை நாம் புனரமைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 மில்லியன் ஆண்டுகள் மதிப்புள்ள பரிணாம ஆதாரங்கள்
பாசிலோசரஸ் போன்ற முதல் செட்டேசியன்கள் சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நில விலங்குகளிலிருந்து உருவாகின. ஈசீன் காலத்தின் பிற்பகுதியில் 56 மில்லியன் முதல் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செட்டேசியன்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு முழுமையாகத் தழுவியிருந்தன.
திமிங்கிலங்கள் இன்னும் உருவாகவில்லை, மேலும் கிட்டத்தட்ட அனைத்து செட்டேசியன்களும் கடல் மேக்ரோபிரேடேட்டர்கள் என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. Ocucaje பாலைவனம் புதைபடிமங்கள் நிறைந்ததாக உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் 42 மில்லியன் ஆண்டுகள் மதிப்புள்ள பரிணாம ஆதாரங்களை விஞ்ஞானிகளுக்கு வழங்குகிறார்கள்.


Click it and Unblock the Notifications