Home
News

இந்தியா சொல்பேச்சு கேட்டு நடப்போம்.. வரிசை கட்டும் தடைசெய்யப்பட்ட சீன Apps-கள்.. TikTok அண்ணே வந்துட்டாரா?

இந்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டில் சீன மொபில் ஆப்ஸ்களை தடை (banned Chinese mobile apps) செய்தது. ஆண்ட்ராய்டு (Android) மற்றும் iOS தளங்கள் என்று இரண்டு தளங்களிலும் இயங்கும் 200-க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸ்களை இந்திய அரசாங்கம் தடை (Indian government banned 200 apps in 2020) செய்தது. இப்போது, தடைசெய்ய 200 ஆப்ஸ்களில் இருந்து 36 ஆப்ஸ்கள் மீண்டும் இந்தியாவிற்குள் தடைகளை உடைத்தெறிந்து (36 Chinese apps re-enters India) மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.

இந்திய அரசாங்கத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சீன மொபைல் ஆப்ஸ்களில் இருந்து தற்போது 36 ஆப்ஸ்கள் மீண்டும் இந்தியாவில் பயன்படுத்த (36 banned apps re-enters India) கிடைத்துள்ளன. இவற்றில், மிகவும் பிரபலமான மொபைல் ஆப்ஸ்களான எக்ஸெண்டர் (Xender), மேங்கோ டிவி (MangoTV), யூக்கு (Youku), டைபாவ் (Taobao) போன்ற ஆப்ஸ்கள் இந்தியாவிற்குள் மீண்டும் நுழைந்துள்ளன.

இந்தியா சொல்பேச்சு கேட்டு நடப்போம்.. வரிசை கட்டும் சீன ஆப்ஸ்கள்..

இந்தியா சொல்பேச்சு கேட்டு நடப்போம்.. இந்தியாவிற்குள் வரிசை கட்டும் தடைசெய்யப்பட்ட சீன Apps-கள்:

இந்தியர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்திய டிக்டாக் (TikTok) தளமும் இந்தியாவில் இப்போது பயன்படுத்த கிடைக்கிறதா என்று சிலர் ஆர்வமுள்ள டிக்டாக் பிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 36 ஆப்ஸ்களுக்குள் TikTok பயன்பாடும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என்று கேள்விவுக்கு பதில் என்ன என்பது இங்கே.

5 வருடங்களுக்கு முன்பு இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு, நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட சீன ஆப்ஸ்களில் 36 ஆப்ஸ்கள் மீண்டும் இந்தியாவிற்குள் பயன்படுத்த கிடைக்கின்றன. இந்த மொபைல் செயலிகள் கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரில் (Apple App Store) பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன. சில செயலிகள் சிறிய மாற்றங்களுடன் திரும்பி வந்துள்ளன. சில ஆப்ஸ்கள் அவற்றின் பிராண்ட் பெயர்களை மாற்றம் செய்து இந்தியாவிற்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளன.

தடை செய்யப்பட்ட 36 ஆப்ஸ்கள் மீண்டும் இந்தியாவிற்குள் கிடைக்கிறது:

இன்னும் சில நிறுவனங்களில் மொபைல் ஆப்ஸ்கள் அவர்களின் உரிமையாளர் விபரங்களை மாற்றம் செய்து, இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த பிறகு, சட்டப்பூர்வமாக இந்தியாவிற்குள் (banned Chinese apps legally enters into India) இயக்க அனுமதியை பெற்ற பிறகு இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இருப்பினும், 2020 ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்ட பிரபலமான ஷார்ட் வீடியோஸ் மொபைல் ஆப்ஸ் ஆன டிக்டாக் (TikTok) இந்த 36 ஆப்ஸ்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Xender: File Share, Share Music என்ற பெயரில் Apple இன் App Store இல் மீண்டும் வந்துள்ளது. இருப்பினும், இது இன்னும் Google Play Store இல் கிடைக்கவில்லை. இது தவிர, டேட்டிங் செயலி அதன் பெயரை "TanTan - Asian Dating App" என்று மாற்றம் செய்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டு தளங்களிலும் தற்போது கிடைக்க துவங்கியுள்ளது.

பிரபலமான சீன ஆப்ஸ்கள் எப்படி மீண்டும் இந்தியாவிற்குள் வந்தன:

அதேபோல், Alibaba Group இன் Taobao ஆப்ஸ் எந்தவித மாற்றமும் இல்லாமல் இரண்டு தளங்களிலும் கிடைக்கிறது.சீன ஸ்ட்ரீமிங் தளமான MangoTV எந்த மாற்றங்களும் இல்லாமல் அதே பெயருடன் நேரடியாக இந்தியாவிற்குள் திரும்பியுள்ளன. இது தவிர, YouTube போலவே கருதப்படும் சீனாவின் பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான Youku ஆப்ஸ் கூட இப்போது இந்தியாவில் மீண்டும் கிடைக்க துவங்கியுள்ளது.

ஃபேஷன் ஷாப்பிங் தலமான Sherin ஆப்ஸ் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தக் கூட்டாண்மை, அதன் தரவு இந்தியாவில் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. 2020 இல் தடைசெய்யப்பட்ட PUBG மொபைல், தென் கொரியாவின் கிராஃப்டன் (Krafton) நிறுவனத்தின் கீழ் Battlegrounds Mobile India (BGMI) ஆகத் திரும்பியது. இருப்பினும், 2022 இல் BGMI மீண்டும் தடைசெய்யப்பட்டது. 2023 ஆம் ஆண்டிற்கு பிறகு, இது இப்போது வரை இந்தியாவில் பயன்படுத்த கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
36 Chinese Mobile Apps Re-Enters Into India After 5 Years To Work Legally Under Indian Government Rules and Norms
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X