Home
News

பச்சை துரோகம்.. 36 Google ஊழியர்களை வைத்து சுந்தர் பிச்சை முதுகில் குத்திய Tim Cook.. Apple-ன் சீக்ரெட் லேப்!

என் ஆளுங்கள வச்சி எனக்கே விபூதி அடிச்சுட்ட இல்ல என்று கூகுள் நிறுவனம் கேட்கும்படியாக ஆப்பிள் நிறுவனம் ஒரு சீக்ரெட் ஆன வேலையை பார்த்துள்ளது. அதுவும் "இன்றோ நேற்றோ" அல்ல.. கடந்த 2018 முதல் "மெல்ல மெல்ல" மிகவும் ரகசியமாய் பார்த்து வருகிறது.

ஆப்பிள் அப்படி என்ன செய்தது? ஃபைனான்சியல் டைம்ஸின் சமீபத்திய அறிக்கையானது ஆப்பிள் நிறுவனத்தின் சீக்ரெட் லேப் (Apple's Secret Lab) பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சீக்ரெட் லேப்-ஐ உருவாக்குவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கூகுள் (Google) நிறுவனத்தில் வேலை பார்த்த 36 வல்லுநர்களை ஆப்பிள் நிறுவனம் தன்வசம் "ஈர்த்துள்ளது".

36 Google ஊழியர்களை வைத்து சுந்தர் பிச்சை முதுகில் குத்திய Tim Cook!

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கூகுளில் இருந்து ஆப்பிளுக்கு 'ஜம்ப்' அடித்த 36 ஊழியர்களுமே ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் துறையில் கில்லாடிகள் ஆவார்கள். இந்த குழு ஏஐ மாடல்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதற்காக ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வான டிம் குக் தலைமையிலான இந்த சீக்ரெட் லேப்பிற்கு கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களில் ஒருவரான ஜான் ஜியானன்ட்ரியா தான் உயர் ஏஐ நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். வெளியான அறிக்கையின்படி. இந்த சீக்ரெட் லேப் ஆனது சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் இருக்கிறது.

36 Google ஊழியர்களை வைத்து சுந்தர் பிச்சை முதுகில் குத்திய Tim Cook!

ஆப்பிள் நிறுவனமானது, அதன் ஏஐ மற்றும் மெஷின் லேங்குவேஜ் குழுக்களை உலகளவில் விரிவுபடுத்துவதற்காக செய்யும் பல முயற்சிகளில், இந்த சீக்ரெட் லேப் ஆனது மிகவும் தந்திரமான ஒரு முயற்சியாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இது ஆப்பிள் நிறுவனத்தின் கையாளாகாத தனத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்துகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது சீக்ரெட் லேப்பிற்காக கடந்த 2018 இல் ஜான் கியானாட்ரியாவை பணியமர்த்தியது, பின்னர் ஒரு வருடம் கழித்து, கூகுள் மற்றும் ஓப்பன் ஏஐ ஆகிய இரண்டிலும் பணிபுரிந்த மிகவும் முக்கியமான வல்லுனர்களில் ஒருவரான இயன் குட்ஃபெலோவை பணியமர்த்தியது. இப்படியாக ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 36 ஏஐ நிபுணர்களை பணியமர்த்தியுள்ளது.

36 Google ஊழியர்களை வைத்து சுந்தர் பிச்சை முதுகில் குத்திய Tim Cook!

சமீபத்தில், அதன் ஐபோன் 16 சீரிஸில் (iPhone 16 Series) ஏஐ அம்சங்களை சேர்ப்பதற்காக ஆப்பிள் நிறுவனமானது ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்ப நிறுவனமான ஓப்பன்ஏஐ உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்விரு நிறுவனங்களும் ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை பற்றி விவாதிக்க தொடங்கியுள்ளன.

இதன்மூலம் ஆப்பிளின் அடுத்த ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 18-ல் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சில ஏஐ அம்சங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த கூட்டணி கூகுள் உடன் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த மாதம், ஆப்பிள் நிறுவனமானது தனது புதிய ஐபோன்களில் ஏஐ அம்சங்களை கொண்டு வருவதற்காக கூகுள் நிறுவனத்தின் ஜெமினி சாட்பாட்-ஐ பயன்படுத்துவதற்கான உரிமம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் தற்போது அதே பேச்சுவார்த்தை ஓப்பன்ஏஐ-க்கு மாறியுள்ளதால்.. கூகுள் நிறுவனமானது ஆப்பிளுடன் ஒற்றுபோகவில்லை என்பது போல் தெரிகிறது.செப்டம்பர் மாதத்திற்கு (ஐபோன் 16 சீரீஸ் வெளியீட்டிற்கு) இன்னும் 4 மாதங்களே உள்ள நிலைப்பாட்டில் கூட எந்த நிறுவனத்துடன் கூட்டு சேர வேண்டும் என்கிற இறுதி முடிவிற்கு ஆப்பிள் இன்னும் வரவில்லை என்பது போல் தெரிகிறது.

மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, ஜெனரேட்டிவ் ஏஐ விஷயத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆமை வேகத்தில் பணியாற்றுகிறது என்றே நினைக்கப்பட்டது. ஆனால் சீக்ரெட் லேப் பற்றிய தகவல் வெளியான பின்னர்.. குறிப்பாக அதில் 36 முன்னாள் கூகுள் ஊழியர்கள் உள்ளார்கள் என்கிற தகவல் வெளியான பின்னர்.. ஆப்பிள் மெதுவாக வேலை செய்யவில்லை, மாறாக புத்திசாலித்தனமாக வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
36 AI Specialists From Google Company Hired By Apple Since 2018 to Create A Secret Lab Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X