Home
News

இனி கேபிள் டிவி படாதபாடு.. 350 டிவி சேனல்.. 22 ஓடிடி சந்தா.. 30எம்பிபிஎஸ் டேட்டா.. Airtel-க்கு ரூ.599 போதும்!

கேபிள் டிவி கஸ்டமர்களை தூக்கி சாப்பிடும்படியான அடிமட்ட விலைக்கு ஏர்டெல் (Airtel) நிறுவனம், ஏர்ஃபைபர் திட்டங்களை (Airfiber Plans) களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டங்களில் எச்டி டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களின் சந்தாவும், வை-பை மூலம் டேட்டாவும் கிடைக்கிறது. 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் கஸ்டமர்களை தட்டித் தூக்குகிறது.

வெறும் ரூ.599 விலைக்கு எல்லாமே கிடைத்தால், ஒரு கல்லுல மூனு மாங்க கதைத்தான் இங்கும் நடக்கிறது. ஏர்டெல் ஏர்ஃபைபர் திட்டங்களில் மலிவான விலைக்கு கேபிள் டிவிக்கு மாற்றாக கிடைக்கும் இந்த ரூ.599 மதிப்பிலான திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இனி கேபிள் டிவி படாதபாடு.. 350 டிவி சேனல்.. 22 ஓடிடி சந்தா.. ரூ.599ல்!

ஏர்டெல் ஏர்ஃபைபர் ரூ.599 திட்டம் (Airtel Airfiber Rs.599 Plan): இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் கொடுக்கப்படும். இந்த பாக்ஸ் மூலம் 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இந்த டிவி சேனல்களில் எச்டி சேனல்களும் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் 22 ஓடிடி (22 OTT) ஆப்களும் வருகிறது.

ஆகவே, கேபிள் டிவிக்கு மாற்றாக லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், முன்னணி ஓடிடி ஆப்களையும் கஸ்டமர்களால் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த ஓடிடி ஆப்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ( Disney+ Hotstar) சந்தாவும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தா வாயிலாக சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix), ஈராஸ் நவ் (Eros Now), எபிக் ஆன் (Epic On), கிளிக் (Klikk), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV) மற்றும் டாலிவுட்பிளே (Dollywood Play) ஆப்களை பெற முடியும்.

இதுபோக ஷீமாரூமீ (Shemaroome), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), டாகுபே (Docubay), மனோரமா மேக்ஸ் (Manorama Max), டிவோ (DIVO), ஹங்கமா (Hungama), அல்ட்ரா (Ultra), சோஷியல் ஸ்வாக் (Social Swag), ஹோய்சோய் (HoiChoi) மற்றும் சாவ்பால் (Chaupal) போன்ற ஓடிடி ஆப்களும் பயன்படுத்த கிடைக்கின்றன.

கிரிக்கெட் பிரியர்களுக்கு பிரத்யேகமாக ஃபேன் கோட் (Fan Code) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களுக்கு அடுத்தப்படியாக வை-பை டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த ஏர்ஃபைபர் திட்டமானது, பேசிக் விலையில் கிடைப்பதால், 40 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது.

இந்த வை-பை டேட்டாவுக்கான ரூட்டரும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, முன்பு பார்த்த 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் வை-பை ரூட்டர் ஆகிய டிவைஸ்கள் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இது மலிவு விலைக்கு கிடைப்பதால், குறைந்தது 3 மாதங்களுக்கான பணத்தை அட்வான்ஸ் முறையில் கொடுக்க வேண்டும்.

இந்த தொகையுடன் கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் கொடுக்க வேண்டி இருக்கும். இதை செலுத்திய பிறகு எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல், டிவி சேனல்களுக்காக இலவச 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ரிமோட் கிடைக்கும். இந்த அட்வான்ஸ் கட்டணம் முதல்முதலாக ஏர்ஃபைபர் திட்டங்களை பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதற்கு பிறகு மாதம் ரூ.599 கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும், டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள் மற்றும் வை-பை டேட்டா சலுகைகளை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கு ஒரு மாதம் வேலிடிட்டி கிடைக்கிறது. வை-பை டேட்டாவுடன் டிவி சேனல்கள் வேண்டுமானால், இந்த ஏர்ஃபைபருக்கு செல்லுங்கள். இது மிகவும் லாபகரமாக இருக்கும். வெறும் டிவி சேனல்களுக்கு பொருந்தாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
350 TV Channels 22 OTT 40Mbps Data For Rs 599 Airtel Airfiber Plan Alternative To Cable TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X