Home
News

கேபிள் டிவிக்கு டாட்டா காட்டி அனுப்பிய Airtel.. 350 TV சேனல், 22 OTT, 1000GB டேட்டா, 5ஜி.. எந்த திட்டத்தில்?

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதன் ஏர்ஃபைபர் சேவையை நேரலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனம், ஏர்ஃபைபர் செயல்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் 5ஜி எஸ்ஏ (ஸ்டேண்ட் அலோன் ) சேவையையும் நிறுவி வருகிறது.

உங்கள் பகுதியில் ஃபைபர் இணைப்பு இருந்தால், ஃபைபர் இணைப்பையே தேர்வு செய்யுமாறு ஏர்டெல் பரிந்துரைக்கிறது என்பது ஒருபக்கம் இருக்க ஃபைபர் இணைப்பானது அடிப்படையில் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தது. அதுவே இன்னும் வேகமான இண்டர்நெட் ஸ்பீட் கிடைப்பதை உறுதி செய்ய பயனர்கள் ஏர்ஃபைபர் சேவைக்கு செல்லலாம். ஏனென்றால் தற்போது இது 5ஜி நெட்வொர்க்கால் இயக்கப்படுகிறது.

கேபிள் டிவிக்கு டாட்டா காட்டி அனுப்பிய Airtel.. 350 TV சேனல், 22 OTT!

ஏர்ஃபைபர் இணைப்புகளுடன் வழங்கப்படும் டேட்டாவின் அளவு, ஃபைபர் இணைப்புகளுடன் வழங்கப்படும் டேட்டாவை விட குறைவாக இருக்கும். ஆனால் இங்கே ஸ்பீட் தான் எல்லாமே. அப்படியாக இங்கே ஏர்டெல்லின் மலிவான ஏர்ஃபைபர் திட்டத்தை பற்றி விரிவான பார்ப்போம். இந்த திட்டத்தின் மாத கட்டணம் ரூ.699 ஆகும்.

ஆனால் இறுதி பில்லிங்கின் போது வரிகளும் இதில் அடங்கும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, நீங்கள் இந்த திட்டத்தை பெற நினைத்தால், இறுதியில் நீங்கள் தோராயமாக ரூ. 699 + 18% ஜிஎஸ்டி = ரூ.825 செலுத்த வேண்டியிருக்கும். இந்த திட்டம் உங்களுக்கு பயனுள்ளதா இல்லையா என்பதை புரிந்துகொள்ள, அதன் நன்மைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

பார்தி ஏர்டெல் ரூ.699 ஏர்ஃபைபர் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்: பார்தி ஏர்டெல்லின் ரூ.699 ஏர்ஃபைபர் திட்டம் 40 எம்பிபிஎஸ் ஸ்பீட் உடன் வருகிறது. இந்த ஏர்ஃபைபர் திட்டத்தின் மூலம் பயனர்கள் மாதத்திற்கு 1டிபி டேட்டாவை பெறுவார்கள். இருப்பினும், ஒரு ஃபைபர் திட்டத்தில், இது பொதுவாக 3.3டிபி ஆக இருக்கும். இது நுகர்வோருக்கு ஒரு பெரிய வித்தியாசமாகும்.

உண்மையில், இதைவிட மலிவான ஃபைபர் திட்டங்களும் உள்ளன. இருப்பினும், இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் வேறு சில மிக சிறந்த ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகளையும் பெறுகிறார்கள். இந்த ஓடிடி நன்மைகளில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலிவ், சன்என்எக்ஸ்டி, ஆஹா, ஈரோஸ்நவ், சௌபால் மற்றும் பல அடங்கும்.

கூடவே 350-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. உங்களுக்கு இன்னும் அதிக வேகம் தேவைப்பட்டால், மாதம் ரூ.799 க்கு கிடைக்கும் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம், இது 100 எம்பிபிஎஸ் வேகத்துடன் வருகிறது. இருப்பினும், ரூ.799 திட்டத்தில் பயனர்களுக்கு ஓடிடி சலுகைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. அதற்கு, நீங்கள் மாதம் ரூ.899 திட்டத்தை பெற வேண்டும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் கூடுதலாக ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் போஸ்ட்பெய்ட் சேவையின் கீழும் இப்படி ஓடிடி நன்மைகளை அள்ளி அள்ளி வழங்கும் ஒரு திட்டம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனித்துவமான திட்டமாகும். டெலிகாம் துறையில் நெட்பிளிக்ஸ் அணுகலை வழங்கும் திட்டங்கள் அதிகம் இல்லை. ஆனால் இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம் அதை வழங்குகிறது. மேலும், இது நெட்பிளிக்ஸை அணுகலை மட்டுமல்ல, பிரைம் வீடியோ போன்ற பிற ஓடிடி (ஓவர்-தி-டாப்) தளங்க்ளுக்கான அனுகலையும் வழங்குகிறது

அது ஜியோவின் ரூ.749 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் இறுதி பில்லிங்கின் போது, ​​பில்லில் ஜிஎஸ்டி சேர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே உங்கள் இறுதி தொகை ரூ. 749-ஐ விட சற்று அதிகமாக இருக்கும். நிச்சயமாக இது ஒரு மலிவு விலை திட்டம் அல்ல. ஆனாலும் இது நெட்பிளிக்ஸ் + ப்ரைம் வீடியோ + அன்லிமிடெட் 5ஜி ஆகிய 3 முக்கிய நன்மைகளை கூட்டாக வழங்குவதால் மிகவும் கவனிக்கத்தக்க திட்டமாக உள்ளது.

இதன்கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரைம் , ரிலையன்ஸ் ஜியோ ரூ.749 போஸ்ட்பெய்ட் திட்டமானது - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 1 மாதத்திற்கு 100ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும். அதன் பிறகு, பயனர்கள் ஒரு ஜிபிக்கு ரூ.10 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 3 பேமிலி சிம் கார்டுகள் வரை பெறலாம். கூடுதல் சிம் கார்டுக்கு மாதத்திற்கு ரூ.150 வசூலிக்கப்படும். நெட்ஃபிக்ஸ் பேஸிக், அமேசான் பிரைம் லைட், ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
350 TV Channels 22 OTT 1GB Data All You Need to Know About Airtel Rs 699 AirFiber Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X