Home
News

30 நிமிடங்கள் போதும்.. 350 கி.மீ. பயணிக்கலாம்.. தூள் கிளப்பிய சென்னை ஐஐடி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு..

டிஜிட்டல் உலகம் இப்போது விரிவடைந்துள்ளது என்று தான் கூறவேண்டும். அதேபோல் இந்த டிஜிட்டல் உலகில் இருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் மக்களின் தினசரி வேலைகள் எளிமையாகி உள்ளது என்பது தான் உன்மை. இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களின் ஆராய்ச்சி திட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்த ஹைபர்லூப் ஆனது மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைபர்லூப் வாகனத்தில் மணிக்கு 1200 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விரிவான தகவலை இப்போது பார்க்கலாம்.

தூள் கிளப்பிய சென்னை ஐஐடி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு..

தற்போது அதிவேக போக்குவரத்துக்கு விமானம் தான் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனால் இதற்கான செலவு மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே இப்போது மெட்ரோ ரயில் உள்நகரப் போக்குவரத்துக்கு எவ்வளவு பயனுள்ள வகையில் இருக்கிறதோ அதேபோன்று நீண்ட தூரம் கொண்ட நகரங்களை இணைக்கும் வகையில் ஹைபர் லூப் எனும் ரயில்களை அறிமுகம் செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த ஹைபர் லூப் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் விமானச் சேவைக்கு மிகப்பெரிய போட்டியாக அமையும். அதாவது அனைத்து மக்களும் குறைந்த செலவில் நீண்டதூர நகரங்களுக்கு வேகமாகப் போகமுடியும். இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களின் புதிய ஆராய்ச்சி உலக மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அதாவது ஒரு வெற்றிடக் குழாய் பாதை வழியாக 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 30 நிமிடங்களில் கடப்பதற்கான ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தைச் சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த தொழில்நுட்பம் மட்டும் நடைமுறைக்கு வந்தால் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 25 நிமிடங்களுக்குள் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது சென்னை ஐஐடி மாணவர்கள் குழு உருவாக்கியுள்ள அவிஷ்கர் ஹைப்பர்லூப் என்ற இந்த ஆராய்ச்சித் திட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் நடத்திய ஹைப்பர்லூப் போட்டியில் ஐஐடி மெட்ராஸ் குழு இறுதிப் போட்டி வரை முன்னேறியது. பின்பு எடின்பரோவில் நடைபெற்ற நிகழ்வில் தங்கள் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்காக விருதையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் போக்குவரத்துத் துறையில் எதிர்காலம் இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் தான் என்று கூறப்படுகிறது. பொதுவாக ஹைப்பர்லூப் மூலம் அதிவேகத்தில் பயணிக்கலாம். இதுதவிர அதிக ஒலிமாசு, காற்று மாசு ஏற்படுத்தாது இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பம். மேலும் விமான நிலையங்கள் போல பெரிய உள்கட்டமைப்புகள் வசதிகளும் இதற்குத் தேவைப்படாது.

தூள் கிளப்பிய சென்னை ஐஐடி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு..

சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய அவிஷ்கர் ஹைப்பர்லூப் திட்டம் வெற்றிடக் குழாய்களில் சோதனை செய்யப்பட்டு தற்போது வெற்றி அடைந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மாணவர் குழுத் தலைவரான மேதா கொம்மாஜோஸ்யுலா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நாங்கள் இப்போது செல்லும் இதே வேகத்தில் தொடர்ந்து வேலை செய்தால் அடுத்த 10 ஆண்டுகளில் முதல் ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்க முடியும் என்று கூறியிருந்தார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தான் முதலில் இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தார். அவரது நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட ஹைபர்லூப் மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் செல்லும். ஆனால் சென்னை ஐஐடி மாணவர்களின் ஹைபர்லூப் மூலம் 1200 கி.மீ வேகத்தில் செல்லலாம். குறிப்பாக சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
350 km in 30 minutes via vacuum-powered pod: IIT Chennai students achieve feat: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X