BSNL சூப்பர் ஹிட் பிளான்.. இதைவிட கம்மி விலைக்கு 35 நாட்கள் வேலிடிட்டி கொடுத்தா.. லைஃப் டைம் செட்டில்மென்ட்!
நாம் இங்கே விரிவாக பார்க்கவுள்ளது, பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL Rs.107 Prepaid Recharge Plan) பற்றித்தான். வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் தேவைக்கு ஏற்ப, மிகவும் மலிவான திட்டங்களுக்கு பெயர் பெற்ற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சூப்பர்ஹிட் பிளான்களில் இதுவும் ஒன்றாகும்.
ரூ.107 திட்டமானது, தினமும் வெறும் ரூ.3 என்கிற செலவில் 35 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. பிஎஸ்என்எல்-ஐ போலவே ஏர்டெல் நிறுவனமும் கூட 35 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. ஆனால் அதன் விலை ரூ.289 ஆகும். அதாவது பிஎஸ்என்எல்-ஐ விட கிட்டத்தட்ட 2 மடங்கு (ரூ.182) விலை அதிகமாகும்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிடம் 35 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. பெரும்பாலும் ஜியோவின் கீழ் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களே உள்ளன. இருப்பினும் ஜியோவிடம் ரூ.296-க்கு ஃப்ரீடம் பிளான் ஒன்று உள்ளது. இது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது. இதுவும் பிஎஸ்என்எல்-ஐ விட மிகவும் விலை அதிகமான திட்டமாக உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.107 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? 35 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தின் கீழ் 3ஜிபி டேட்டா கிடைக்கும். வழங்கப்பட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு ரூ.107 திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 200 நிமிடங்களுக்கு லோக்கல் மற்றும் நேஷனல் காலிங்கும் கிடைக்கும். கடைசியாக ரூ.107 உடன் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் (BSNL Tunes) சேவையும் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக தங்களுடைய சிம் காரட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க, மிகவும் மலிவான திட்டத்தை தேடும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு இதுவொரு தவிர்க்க முடியாத திட்டமாகும்!
ரூ.107-க்கு அடுத்தபடியாக வேறு என்னென்ன திட்டங்கள் உள்ளன? பிஎஸ்என்எல் ரூ.107 ரீசார்ஜ்ஜிற்கு அடுத்தபடியாக எஃப்ஆர்சி ரூ.108 உள்ளது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இதற்கு அடுத்ததாக 26 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் பிவி ரூ.153 உள்ளது.

பின்னர் 70 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் பிவி ரூ.197 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் பிவி ரூ.199 மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் பிவி ரூ.201 என பிஎஸ்என்எல்-ன் எக்ஸ்டென்ஷன் மற்றும் மைக்ரேஷன் தொகுப்பின் (BSNL Extension And Migration Plan Vouchers) கீழ் பல திட்டங்கள் உள்ளன.
ஏர்டெல்லின் ரூ.289 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது 35 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 இலவச எஸ்எம்எஸ்கள், மொத்தம் 4ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இதன் கீழ் அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சந்தா கிடைக்கும்.
ஜியோவின் ரூ.296 ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், மொத்தம் 25ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இதன் கீழ் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட்டிற்கான அணுகல்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications