Home
News

BSNL-க்கு ஜம்ப் அடிக்கும் இந்தியர்கள்.. வெறும் ரூ.100 செலவுல.. 35 நாட்களுக்கு ஓஹோன்னு நன்மைகள்.. யாரு விடுவா!

ரிலையன்ஸ் ஜியோவும், பார்தி ஏர்டெல்லும் எதோ அதிர்ஷடம் செய்து உள்ளன. நல்லவேளையாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது பான் இந்தியா அடிப்படையிலான 4ஜி சேவைகளை இன்னும் அறிமுகம் செய்யவில்லை. இல்லையென்றால் இந்நேரம் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவின் டப்பா டான்ஸ் ஆடியிருக்கும். அந்த அளவிற்கு இம்மூன்று நிறுவனங்களும் தத்தம் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தி உல்ளன. ஒருவேளை இந்நேரத்திற்கு பிஎஸ்என்எல் அதன் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்து இருந்தால்.. அத்தனை கஸ்டமர்களும் மலிவு விலையில் கிடைக்கும் பிஎஸ்என்எல் சேவைக்குள் ஜம்ப் அடித்து இருப்பார்கள்.

ஆனால் இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. ஜூலை 3, 4 ஆம் தேதிகளில் அமலுக்கு வந்த தனியார் டெலிகாம் நிறுவனங்களின் திடீர் விலை உயர்விற்கு பின்னர், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, நிறைய புதிய கஸ்டமர்கள் வரத்தொடங்கி உள்ளனர். ஒருவேளை உங்களுக்கும் இந்த யோசனை இருந்தால்.. அதாவது பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கும் யோசனை இருந்தால்.. ரூ.100 செலவில் 35 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் இந்த திட்டத்தை பற்றி கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது!

BSNL: வெறும் ரூ.100 செலவுல.. 35 நாட்களுக்கு ஓஹோன்னு நன்மைகள்!

அதென்ன திட்டம்? நாம் இங்கே பேசுவது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (பிஎஸ்என்எல்) ரூ.107 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பற்றித்தான். இந்த திட்டம் மற்ற நிறுவனங்களின் திட்டங்களை விட சிக்கனமான மற்றும் வசதியான திட்டமாகும். நீங்கள் மலிவான மற்றும் பயனுள்ள திட்டத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இந்த திட்டம் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

ரூ.107-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 35 நாட்கள் ஆகும். இதை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி அளவிலான மொத்த டேட்டா கிடைக்கும். குறிப்பிட்ட டேட்டா வரம்பு தீர்ந்த பின்னர், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

டேட்டாவை தவிர்த்து, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 200 நிமிட இலவச வாய்ஸ் கால்கள் நன்மையும் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டத்தில் 35 நாட்களுக்கான பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சேவையும் கிடைக்கும். இதன் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களை ரிங்டோன் ஆக செட் செய்ய முடியும்.

ஒட்டுமொத்தமாக, உங்களுடைய 2வது சிம் காரட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க இதைவிட சிறப்பான திட்டம் கிடைக்காது என்றே கூறலாம். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 200 நிமிட இலவச குரல் அழைப்பு சேவை உள்நாட்டு அழைப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது மற்ற திட்டங்கள் வழங்கும் வழக்கமான 30 நாட்கள் அல்லது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டிக்கு பதிலாக 35 நாட்கள் என்கிற அதிக வேலிடிட்டியை வழங்குகிறது.

பிஎஸ்என்எல்-ன் மான்சூன் டபுள் தமாகா ஆபர்: ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்களின் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை உயர்வால் அவதிப்படும் பிராட்பேண்ட் கஸ்டமர்களை தன்வசம் ஈர்க்கும் நோக்கத்தின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனம் மான்சூன் டபுள் தமாகா ஆபர் (Monsoon Double Bonanza Offer) என்கிற லிமிடெட்-டைம் ஆபரை அறிவித்துள்ளது.

இதன்கீழ் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் பேஸிக் திட்டமானது மாதத்திற்கு வெறும் ரூ.399 க்கு அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த திட்டத்தின் வழக்கமான விலை ரூ.499 ஆகும். அதாவது இந்த திட்டம் ரூ.100 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சலுகையின்கீழ் ஃபைபர் பேஸிக் பிளானிற்கானமுதல் மாதம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த லிமிடெட்-டைம் ஆபர் எப்போது முடிவடையும் என்கிற தேதியை பிஎஸ்என்எல் குறிப்பிடவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
35 Days Validity For Just Rs 107 Everyone needs to Know About This BSNL Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X