Home
News

போட்டாரு பாருங்க.. ரூ.895-க்கு இறக்கிய 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனத்தின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும், ஒரேவொரு வருடாந்திர திட்டத்தில் (Yearly Plan) ஒட்டுமொத்த கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி அடிமட்ட விலைக்கு அன்லிமிடெ் வாய்ஸ் கால்கள், மாதாந்திர டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கிறது. 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ஜியோ மலிவான வருடாந்திர திட்டம் (Jio Cheapest Yearly Plan) எந்தெந்த சலுகைகளை கொடுக்கிறது? இவ்வளவு மலிவான விலைக்கு எப்படி கிடைக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் 4ஜி டேட்டா கிடைக்கும். ஆகவே, ஒட்டுமொத்த 4ஜி கஸ்டமர்களுக்கும் பொருந்தும். ஆனால், ஜியோபோன் (JioPhone) கஸ்டமர்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இதனாலேயே இந்த அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. சொல்லப்போனால், ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டாலும் 4ஜி திட்டங்களிலேயே மிகவும் கம்மியான விலைக்கு இந்த திட்டம் மட்டுமே கிடைக்கிறது.

போட்டாரு பாருங்க.. ரூ.895-க்கு இறக்கிய 336 நாட்கள் வேலிடிட்டி திட்டம்!

ஜியோ ரூ 895 திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டி (Jio Rs 895 Plan 336 Days Validity): இந்த ஜியோபோன் வருடாந்திர திட்டத்தில் (JioPhone Yearly Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), மாதாந்திர டேட்டா (Monthly Data) மற்றும் மாதாந்திர எஸ்எம்எஸ் (Monthly SMS) மட்டுமல்லாமல், ஜியோ நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு மேற்கண்ட சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, 12 மாதங்களிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பெற்று கொள்ள முடியும். ஆனால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை அப்படி எதிர்பார்க்க முடியாது.

அதாவது, மாதாந்திர கணக்கில் (28 நாட்கள் வீதம்) டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். இந்த நாட்களில் 2 ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் சலுகைகளை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளை 28 நாட்களுக்கு முன்பாகவே முழுவதும் பயன்படுத்திவிட்டால், டேட்டாவானது 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு குறைக்கப்படும். எஸ்எம்எஸ்களுக்கு கட்டணம் இருக்கும்.

ஆனால், அடுத்த 28 நாட்கள் தொடங்கிவிட்டால், மீண்டும் 2 ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைத்துவிடும். இப்படி வாய்ஸ் கால்களை தவிர மற்ற சலுகைகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளும்படி மாதாந்திர கணக்கில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளுக்கு பிறகு வழக்கமான ஜியோ நிறுவனத்தின் சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, ஜியோசினிமா (JioCinema) ஆப் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

மேலும், ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை வேறு எந்த நிறுவனங்களும் கொடுக்க முடியாத விலைக்கு ஜியோபோன் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இது வருடாந்திர வேலிடிட்டி கணக்கில் கிடைக்கும் திட்டமாகும். அதுவே, 28 நாட்களுக்கு தினசரி டேட்டாவுடன் திட்டம் வேண்டுமானால், ரூ. 223 மதிப்பில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.

இந்த மாதாந்திர திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. ஆனால், தினசரிக்கு டேட்டா கிடைக்கும். ஆகவே, 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். எஸ்எம்எஸ் சலுகையும் அப்படித்தான். தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ஜியோ சினிமா, ஜியோடிவி போன்ற ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
336 Days Validity Unlimited Voice Calls 2GB Data For Rs 895 Check Jio Cheapest Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X