Jio SIM-க்கு பெரிய கும்பிடு.. மாதம் ரூ.150 கூட இல்ல.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
ஜியோ 4ஜி பீச்சர் போன் (Jio 4G Feature Phone) வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு மாதம் ரூ.150 செலவு கூட வைக்காமல், 336 நாட்களுக்கு வேலிடிட்டியை ஜியோ ரூ.1234 திட்டம் (Jio Rs 1234 Plan) கொடுத்துள்ளது. வாய்ஸ் கால்கள் வருகிறது. டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட வழக்கமாக கிடைக்கும் சலுகைகளும் வருகின்றன.
ஜியோ சிம் கார்டை மட்டுமே பயன்படுத்தக் கூடிய 4ஜி பீச்சர் போன்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. இதற்காக பிரத்யேக 4ஜி திட்டங்களையும் ஜியோ நிறுவனம் கொடுத்துள்ளது. இதில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தின் சலுகைகள் ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.

அதாவது, ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் கஸ்டமர்கள் வருடம் முழுவதும் டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், ரூ.3,599 திட்டத்துக்கு செல்ல வேண்டும். ஆகவே, மாதத்துக்கு ரூ.300 செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது. ஆனால், இதைவிட 2 மடங்கு விலை கம்மியாக ஜியோ 4ஜி பீச்சர் போனுக்கு வருடாந்திர திட்டம் கிடைக்கிறது.
ஜியோ ரூ.1234 திட்ட விவரங்கள்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. டெலிகாம் நிறுவனங்களின் கணக்கின்படி 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த வேலிடிட்டி நாட்கள் முழுவதும் 0.5 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
12 மாதங்கள் முழுவதும் 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி இருக்க முடியும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அதாவது, தினசரிக்கு 100 கணக்கு போல மாதத்துக்கு 300 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம்,
ஜியோ டிவி மற்றும் ஜியோ சாவன் சந்தா கொண்ட திட்டமாகவும் இது இருக்கிறது. இந்த திட்டத்துக்கு மாதத்துக்கு ரூ.150 கூட செலவு இருக்காது. வெறும் ரூ.102 மாத செலவில் (28 நாட்களுக்கு) கிடைக்கிறது. இதுவே ஸ்மார்ட்போனை வைத்திருந்து, வருடாந்திர திட்டத்தை பெற வேண்டுமானால், ஜியோ ரூ.3,599 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
ஜியோ ரூ.3,599 திட்ட விவரங்கள்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 28 நாட்கள் கணக்கு இதற்கு பொருந்தாது. வருடம் முழுவதும் வேலிடிட்டி மற்றும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கொடுக்கும். இந்த டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தலாம். இது முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) சலுகையையும் இந்த திட்டம் கொடுக்கும். ஆகவே, வருடம் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். டேட்டா போக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் வருடம் முழுவதும் கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு கிடைக்கிறது.
இந்த சலுகைகளுடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவையும் இந்த வருடாந்திர திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 3 மாதங்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் சலுகையும் கிடைக்கிறது. 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். இப்படி ஜியோ 4ஜி பீச்சர் போன் திட்டத்துக்கும், ஸ்மார்ட்போன் திட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications