தூள் கிளப்பும் பிளிப்கார்ட்.. ரூ.18499 பட்ஜெட்ல டால்பி ஆடியோ, 8ஜிபி மெமரி.. ஆஃபரில் Xiaomi டிவி.. எந்த மாடல்?
இந்தியாவில் சாம்சங், எல்ஜி, டிசிஎல் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை விட சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது மேம்பட்ட புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் சியோமி (Xiaomi) ஸ்மார்ட் டிவிகள் வெளிவருகின்றன. எனவே தான் இந்நிறுவனத்தின் டிவிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் 40 இன்ச் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது 40 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Xiaomi A series 40 inch Full HD LED Smart Google TV) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சியோமி டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே 40 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலை ரூ.18499 விலையில் வாங்கிவிட முடியும். இப்போது இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
40 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Xiaomi A Series Smart TV Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த சியோமி டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. அதேபோல் மெட்டல் பெசல்லெஸ் டிசைன் உடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டது.
குறிப்பாக விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle)போன்ற அம்சங்களும் இந்த டிவியில் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
அதாவது குவாட் கோர் ஏ35 (Quad Core A35 ) பிராசஸர் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 40 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே இந்த டிவியில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். இதுதவிர மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டு வெளிவந்தது இந்த டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.
8ஜிபி மெமரி மற்றும் 1.5ஜிபி ரேம் உடன் இந்த 40 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் சியோமி டிவி பிளஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.

தரமான டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 40 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவு இந்த டிவியில் உள்ளன.
டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ஈஆர்சி (eARC) , ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), யுஎஸ்பி போர்ட் (USB Ports), ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 40 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications