இரவோடு இரவாக WhatsApp-ல் 3 முக்கிய மாற்றங்கள்.. இனி 32 பேர்.. கூடவே ஸ்பீக்கர் ஸ்பாட்லைட். மிரட்டும் மார்க்!
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அதன் பிளாட்ஃபார்ம் முழுவதும், அதாவது வார்ஸ்அப் ஆதரவை வழங்கும் அனைத்து டிவைஸ்களிலும் 3 மூன்று முக்கிய அப்டேட்களை (3 Major Updates) கொண்டு வருகிறது. சுவாரசியமாக இந்த 3 அப்டேட்களுமே வாட்ஸ்அப் கால் (WhatsApp Call) தொடர்பான மேம்படுத்தல்களாக உள்ளன. வாட்ஸ்அப் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த அப்டேட்கள் வாட்ஸ்அப் கால்களை "இன்னும் பெரியதாகவும், சிறந்ததாகவும்" உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன மற்றும் அனைத்து அப்டேட்களுமே அடுத்த சில வாரங்களில் பரந்த அளவில் வெளியிடப்படவுள்ளன.
மேலும் "2015 ஆம் ஆண்டு வாட்ஸ்அப்பில் காலிங் வசதியை கொண்டு வந்ததில் இருந்து, க்ரூப் கால்கள் (Group Calls), வீடியோ கால்கள் (Video Calls) மற்றும் மல்டி-பிளாட்ஃபார்ம் ஆதரவின் (Multi-Platform Support) அறிமுகத்துடன், வாட்ஸ்அப் கால் வசதியை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். அந்த வரிசையில் மேலும் 3 அப்டேட்களை சேர்க்கிறோம்; இவைகள் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும்" என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1. ஆடியோவுடன் ஸ்கிரீன் ஷேரிங் (Video Sharing With Audio): இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வீடியோக்களை பார்ப்பதற்கு உதவும் ஒரு அம்சமாகும். மேலும் தற்போது இது பயனர்கள் தங்கள் ஸ்க்ரீனை ஷேர் செய்யும் போது ஆடியோவையும் சேர்த்தே ஷேர் செய்யலாம்.
2. வீடியோ காலில் அதிக பங்கேற்பாளர்கள் (More Participants in a Video Call): இப்போது 32 பேர் வரை ஒரு வீடியோ காலில் கலந்துகொள்ளலாம் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது. இந்த ஆதரவு ஐபோன்கள், ஆண்ட்ராய்டு, வெப் வெர்ஷன் மற்றும் பிசிக்கள் என எந்த டிவைஸ்களையும் பொருட்படுத்தாமல் அணுக கிடைக்கும்.
3. ஸ்பீக்கர் ஸ்பாட்லைட் (Speaker Spotlight): இது யார் பேசுகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் ஒரு அம்சமாகும். ஒரு வீடியோ காலில் அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யார் பேசுகிறார்கள் என்பதை கண்டறிவது சில நேரங்களில் சிக்கலாக இருக்கும். இந்த அப்டேட் அந்த சிக்கலை காணாமல் அடிக்கும்; யார் பேசுகிறார்கள் என்பதை கண்டறிய தாங்கவே ஸ்பீக்கரை ஹைலைட் செய்து அதை ஸ்க்ரீனிலும் காட்சிப்படுத்தும்.
முன்னரே குறிப்பிட்டபடி, வாட்ஸ்அப் கொண்டுவரும் இந்த 3 முக்கிய அப்டேட்களுமே ஐபோன்கள், ஆண்ட்ராய்டு, வெப் மற்றும் பிசிக்கள் என வாட்ஸ்அப் ஆதரவை கொண்ட அனைத்து டிவைஸ்களுக்கும் அணுக கிடைக்கும். "வாட்ஸ்அப்பில் அழைப்பதை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம், எனவே நீங்கள் உலகில் எங்கிருந்தாலும் சிறந்த தரமான, தனிப்பட்ட அழைப்புகளைச் செய்யலாம்" என்றும் வாட்ஸ்அப் உறுதி அளித்துள்ளது.
ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் (Status updates) பிரிவில் ப்ரைவேட்லி டேக் காண்டாக்ஸ் (Privately tag contacts) என்கிற அம்சம், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோக்களை எடிட்டிங் செய்யும் அம்சம், கேமராவிற்கான புதிய ஜூம் கண்ட்ரோல் அம்சம் என தொடர்ச்சியான முறையில் வாட்ஸ்அப் பிளாட்பாரம் ஆனது அப்கிரேட் ஆகிக்கொண்டே போகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதற்கும் முன்பாக காண்டாக்ட் லிஸ்ட்டில் யாரெல்லாம் சமீபத்தில் ஆன்லைனுக்கு வந்து சென்றனர் (Contacts Were Online Recently) என்கிற பட்டியலை வெளிப்படுத்தும் புதிய அம்சமும் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டது. அதாவது வாட்ஸ்அப் பிளாட்ஃபார்மில் மிகவும் சமீபத்தில் யார் எல்லாம் ஆக்டிவ் ஆக இருந்தார்கள் என்பதை நீங்கள் சரிபார்க்க விரும்பினால் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications