Home
News

OnePlus TV வச்சி இருப்பவர்களின் தலையில் இடி.. வாரண்டிக்கு வேட்டு.. கடை க்ளோஸ்.. புதுசாவும் வாங்க வேண்டாம்!

32-இன்ச் முதல் 65-இன்ச் வரையிலாக.. உங்களிடம் எந்தவொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி இருந்தாலும் சரி.. மனதை தேற்றிக்கொள்ளவும். ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனம் அப்படி ஒரு வேலையைத்தான் பார்த்துள்ளது. மேலும், புதிய ஒன்பிளஸ் டிவி ஒன்றை வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தாலும்.. அதை அப்படியே கைவிட்டு விடவும்.

ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனம், இனிமேல் தனது ஸ்மார்ட் டிவிகளை இந்திய சந்தையில் விற்பனை செய்யபோவது இல்லை. இதை உறுதிப்படுத்தும் வண்ணம், ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (OnePlus Official Website) இருந்த ஸ்மார்ட் டிவிகள் பிரிவு (Smart TV Section) மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது.

OnePlus TV வச்சி இருப்பவர்களின் தலையில் இடி.. வாரண்டிக்கு வேட்டு!

சில நாட்களுக்கு முன்பாக, ஒன்பிளஸ் வலைத்தளத்தில் உள்ள ஸ்மார்ட் டிவிகள் பிரிவிற்குள் நுழைய முடிந்தது மற்றும் அங்குள்ள டிவி மாடல்களை பார்க்க முடிந்தது. ஆனால் 'பை' பட்டனை (Buy Button) கிளிக் செய்த போது "404: இந்த பக்கம் கிடைக்கவில்லை" என்று சொல்லும் வெற்றுப் பக்கத்திற்கு திருப்பிவிடப்பட்டது. ஆனால் தற்போது ஒன்பிளஸ் வலைதளத்தில் ஸ்மார்ட் டிவிகள் பிரிவையே பார்க்க முடியவில்லை.

இருப்பினும் அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) போன்ற இ-காமர்ஸ் வலைத்தளங்களின் வழியாக ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளானது, தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்பது போல் தெரிகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக இனிமேல் வாங்க கிடைக்காது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கை குறித்து சரியான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

OnePlus TV வச்சி இருப்பவர்களின் தலையில் இடி.. வாரண்டிக்கு வேட்டு!

பிளிப்கார்ட், அமேசான் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒன்பிளஸ் டிவிகள் மற்றும் பேனல்களுக்கு இன்னமும் ஒரு வருட உத்தரவாதம் உண்டு என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.எனவே புதிய ஸ்மார்ட் டிவியை வாங்கும் தேடலில் உள்ள எவரும் ஒன்பிளஸ் மாடலை வாங்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறோம்.

கடந்த அக்டோபர் 2023 இல், ஸ்மார்ட் டிவி பிரிவில் இருந்து பின்வாங்கவும், உற்பத்தியை நிறுத்தவும் ஒன்பிளஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக பல அறிக்கைகள் வெளியாகியன; தற்போது அந்த அறிக்கைகள் உண்மையாகியுள்ளன. ஒன்பிளஸ் மட்டுமல்ல, ரியல்மி (Realme) நிறுவனமும் கூடஇந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவி விற்பனையை நிறுத்திவிட்டது, இந்நிறுவனமும் கூட தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஸ்மார்ட் டிவி பிரிவை நீக்கியுள்ளது.

OnePlus TV வச்சி இருப்பவர்களின் தலையில் இடி.. வாரண்டிக்கு வேட்டு!

ஒன்பிளஸ் நிறுவனமானது எச்டி ரெடி ரெசல்யூஷன் கொண்ட 32-இன்ச் என்ட்ரி-லெவல் மாடல்களில் இருந்து 65-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிகள் வரையிலாக ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மூலம் இயக்கப்படும் பல வகையான ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் ஒய், யு மற்றும் க்யூ சீரீஸின் கீழ் வெளியானது.

ஒய் சீரீஸ் என்பது ஒன்பிளஸ் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ஸ்மார்ட் டிவி சீரிஸ் ஆகும். யு சீரிஸ் என்பது மிட்ரேன்ஜ் பட்ஜெட் விலை சீரீஸ் ஆகும் மற்றும் கடைசியாக உள்ள க்யூ சீரீஸ் ஆனது பிரீமியம் ரேன்ஜ் டிவி மாடல்களுக்கான சீரீஸ் ஆகும்.

முன்னதாக சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் இருந்து கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) அம்சம் மெல்ல மெல்ல அகற்றப்படும் என்கிற தகவலும் வெளியானது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (Android Smart TV) பயனர்களிடையே மிகவும் பிரபலமான கூகுள் அசிஸ்டெண்ட் அம்சம், சாம்சங் டிவிகளில் இருந்து அகற்றப்படும் என்கிற தகவல் பயனர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில், சாம்சங்கின் இந்த முடிவிற்கு, கூகுள் நிறுவனத்தின் புதிய கொள்கையே காரணமாகும் என்றும். கூகுளின் சமீபத்திய கொள்கை மாற்றத்தை (Google Policy Change) தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் கூகுள் அசிஸ்டண்ட் அம்சம் அணுக கிடைக்காது என்றும் சாம்சங் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் அதன்பின்னர் இதுகுறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 inch to 65 inch Do not buy any OnePlus Smart TV Models Why and What Happened
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X