ரூ.8,000-க்கு கீழ் விற்பனைக்கு வந்த 32-இன்ச் Infinix ஸ்மார்ட் டிவி.! டாப் கிளாஸ் அம்சங்கள் எல்லாமே இருக்கு..
பிளிப்கார்ட் தளத்தில் Big Saving Days Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரபலமான ஸ்மார்ட் டிவிக்கு கூட தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 32-இன்ச் இன்பினிக்ஸ் Y1 எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி(Infinix Y1 HD Ready LED Smart Linux TV) மாடலுக்கு தான் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த 32-இன்ச் இன்பினிக்ஸ் Y1 எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி ரூ.8,499-க்கு வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த டிவியை ரூ.8000-க்கு கீழ் வாங்க இதுதான் சரியான நேரம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த இன்பினிக்ஸ் Y1 ஸ்மார்ட் டிவி ஆனது 1366 x 768 பிக்சல்ஸ், எச்டி ரெசல்யூசன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பெசல்-லெஸ் ஃப்ரேம் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த டிவி 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், 1200:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் Y1 எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் 4ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட் டிவியில் யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ 5, சோனி LIV, ஈரோஸ் நவ், ஹங்காமா, ப்ளெக்ஸ், YuppTV போன்ற ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்கள் உள்ளன. எனவே உங்களுக்குப் பிடித்த புதிய திரைப்படங்களை எளிமையாகப் பார்க்க முடியும். அதேபோல் லினக்ஸ் ஓஎஸ் (இயங்குதளம்) மூலம் இயங்குகிறது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் Y1 ஸ்மார்ட் டிவி.

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவியின் ரிமோட் கண்ட்ரோல் ஆனது யூடியூப் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற OTT இயங்குதளங்களின் ஹாட்கீகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டால்பி ஆடியோ ஆதரவுடன் 20W ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
வைஃபை, 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், லேன், ஆப்டிகல், MiraCast போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது 32-இன்ச் இன்பினிக்ஸ் Y1 எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி மாடல். குறிப்பாக கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களையும் வழங்குகிறது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications