உஷார்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்: இந்தியாவில் 300 முக்கிய புள்ளிகளை வேவுபார்த்த நிறுவனம்!

|

இஸ்ரேலை தளமாகக் கொண்ட என்.எஸ்.ஓ நிறுவனத்தின் சாஃப்ட்வேர் மூலம் ஹேக்கிங் நடைபெறுவதாக எழுந்த புகார் அடிப்படையில் உலகளாவிய ஊடக கூட்டமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.

PEGASUS என்ற சாஃப்ட்வேர்

PEGASUS என்ற சாஃப்ட்வேர்

இஸ்ரேலை தளமாகக் கொண்ட என்எஸ்ஓ நிறுவனத்தின் PEGASUS என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்தி ஏணைய நாடுகளை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் செல்போன் புகைப்படங்கள், உரையாடல்கள், பகிர்வு என அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதில் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இதையடுத்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Forbidden Stories என்ற செய்தி நிறுவனத்துடன் இந்தியா உட்பட பல நாடுகளின் பத்திரிக்கை நிறுவனங்கள் இணைந்து ஆய்வு நடத்தின. இந்தியாவை சேர்ந்த The Wire உட்பட பிற நாடுகளை சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் இணைந்து ஆய்வுகளை நடத்தின. இந்த ஆய்வின் முடிவில் பல தகவல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

சுமார் 50,000-த்துக்கும் மேற்பட்ட மொபைல் எண்கள்

சுமார் 50,000-த்துக்கும் மேற்பட்ட மொபைல் எண்கள்

இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் உளவு பார்ப்பதற்காக சுமார் 50,000-த்துக்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ நிறுவனம் என்பது ஹேக்கர்களை மையமாக கொண்டு செயல்படும் அமைப்பாகும். இதில் 50 நாடுகளை சேர்ந்த 1000-த்துக்கும் மேற்பட்ட நபர்களை அடையாளம் காண முடிந்தது. இதில் 189 ஊடகவியலாளர்கள், 600-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட 65 வணிக நிர்வாகிகள், 85 மனித உரிமை ஆர்வலர்கள், பல அரசியல் தலைவர்கள் இருப்பதாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் என்று பார்க்கையில் அசோசியேட்டட் பிரஸ், ராய்ட்டர்ஸ், சிஎன்என், தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், லு மொன்ட் மற்றும் தி பைனான்சியல் டைம்ஸ் உள்ளிட்ட பல செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

300-க்கும் மேற்பட்ட செல்போன்கள்

300-க்கும் மேற்பட்ட செல்போன்கள்

இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரசு எமிரேட்ஸ், மெக்சிகோ, பெஹ்ரைன், கஜகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த நபர்கள் இடம்பெற்றுள்ளதாக The Wire தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட செல்போன்கள் உள்ளதாகவும் 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்கட்சி தலைவர்கள், நீதிபதி, 40-க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் எண்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போதுமான ஆதாரங்கள் இல்லை

போதுமான ஆதாரங்கள் இல்லை

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட இந்தியாவின் பல்வேறு சமூக ஆர்வலர்கள் எண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களுக்கு முன்னதாக அதாவது 2018-2019 ஆம் ஆண்டுக்கு இடையில் பெரும்பாலான பெயர்கள் குறிவைக்கப்பட்டன என The Wire பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இருப்பினும் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றே கூறப்படுகிறது.

தரவு எங்கள் சேவையகங்களில் இல்லை

தரவு எங்கள் சேவையகங்களில் இல்லை

இதுபோன்ற தரவு எங்கள் சேவையகங்களில் இல்லை என என்எஸ்ஓ மறுப்பு தெரிவிக்கிறது. வெளியாகும் உண்மைகள் தவறான அனுமானங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத கோட்பாடுகள் நிறைந்தவை என என்எஸ்ஓ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பயங்கரவாதிகள் மற்றும் பெரிய குற்றவாளிகளை கண்காணித்து அந்த தகவல்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு விற்கப்படுகிறது என நிறுவனம் குறிப்பிடுகிறது.

வாடிக்கையாளர்கள் தகவலை வெளியிடவில்லை

வாடிக்கையாளர்கள் தகவலை வெளியிடவில்லை

என்எஸ்ஓ குழுமம் தனது வாடிக்கையாளர்கள் தகவலை வெளியிடவில்லை எனவும் பயங்கரவாதிகள், பாலியல் விவகாரங்கள், போதைப் பொருள் கடத்தல் போன்ற விவகாரங்களை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காண்காணித்து இஸ்ரேலிய அரசுக்கு விற்கப்படுவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதன் ஸ்பைவேர் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிராக வடிவமைக்கவோ உரிமம் பெறவோ இல்லை என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான உயர்களை காப்பாற்ற இந்த நிறுவனம் உதவியுள்ளது என தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
300 Verified Indian Mobile Numbers Hacked Including Indian Journalists, Politicians: Reports Said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X