சீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

|

சீனாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சீனாவில் பல நகரங்கள் வெள்ளக்காடாய் காட்சியளித்தது என்று தான் கூறவேண்டும். அதாவது உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

பல்வேறு நாடுகளில் காலநிலை மாற்றம்

குறிப்பாக பல்வேறு நாடுகளில் காலநிலை மாற்றம் காரணமாக மொத்தமாக பருவங்கள் மாறி, மழை, புயல், வெள்ளம் என இயற்கை பேரிடர்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. அதேபோல் ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் வெப்பநிலை காரணமாக உருகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

பெய்ததில்லை

மேலும் சீனாவிலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. சீன ஊடகங்கள் தெரிவித்த தகவலின்படி, 1000 வருடத்தில் இந்த அளவுக்கு மழை பெய்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளன.

ஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா?ஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா?

லும் தெற்கு சீனாவில் பல்வேறு பகுதிகளில்

அதிலும் தெற்கு சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் சீனாவில் பிரமாண்ட மணற்புயல் (Sandstorm) எழுந்த வீடியோ ஒன்று இணையத்தில் அதிக வைரலாகியுள்ளது.

விளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3!விளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3!

ன்பு சுமார் 300 அடி உயரத்துக்கு ம

அதாவது சீனாவின் வடமேற்கு மாகாணமாக கன்சுவில் இருக்கும் கோபி பாலைவன எல்லையில் டன்ஹூவாங் (Dunhuang) நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 300 அடி உயரத்துக்கு மணற்புயல் ஏற்பட்டது.

குருநாதா இங்கயும் வந்துட்டிங்களா?-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்!குருநாதா இங்கயும் வந்துட்டிங்களா?-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்!

எனவே இந்த மணற்புயல் ஆபத்தை உண்டாக்கும் என முன்னெச்சரிக்கையாக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பின்பு விபத்துக்களை தவிர்க்க சாலையில் வாகனம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

பெற்றோர்களே உஷார்: 59.2% குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் சாட்டிங்- அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தகவல்!பெற்றோர்களே உஷார்: 59.2% குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் சாட்டிங்- அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தகவல்!

மணற்புயலால் உயிர்சேதம் ஏதும்

இந்த மணற்புயலால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த மணற்புயல் வீடியோ சமூக
வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. வீடியோவின்படி, குறிப்பிட்ட சில நமிடங்களில் மொத்த நகரத்தையும் மணற்புயல் சூழந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் அதிக வைரலாகியுள்ளது.

Nokia XR20 ஸ்மார்ட்போன் ரக்டு வடிவமைப்புடன் அறிமுகம்.. கீழே விழுந்தாலும் ஒன்னும் ஆகாது.. இனி நோ-டென்ஷன்Nokia XR20 ஸ்மார்ட்போன் ரக்டு வடிவமைப்புடன் அறிமுகம்.. கீழே விழுந்தாலும் ஒன்னும் ஆகாது.. இனி நோ-டென்ஷன்

சீனாவில் வரலாறு காணாத கனமழையால்

மேலும் சீனாவில் வரலாறு காணாத கனமழையால் ஜெங்ஜவ், ஜிங்ஜியாங்,எனியாங் மற்றும் ஹெபி ஆகிய 4 நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளன எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு நகரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
300-feet-high sandstorm in northwest China: Video goes viral on the Internet!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X