அடடா., விண்வெளி வீரர்களோடு விண்ணுக்கு செல்லும் இட்லி, பிரியாணி, அல்வா என 30 வகை உணவுகள்: இஸ்ரோ

|

இஸ்ரோவின் கனவுத் திட்டமான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை விரைவில் செயல்படுத்து இஸ்ரோ நடவடிக்கை எடுத்து வருகிறது.

4 வீரர்கள் தேர்வு

4 வீரர்கள் தேர்வு

இதற்காக இந்திய விமானப்படையில் இருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி விரைவில் ரஷ்யாவில் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

வீரர்களுக்கான உணவு பட்டியல்

வீரர்களுக்கான உணவு பட்டியல்

இதற்கிடையே விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கான உணவு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் மைசூருவில் இயங்கும் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் இந்த பட்டியலை தயாரித்து உள்ளது. இதில் அல்வா, சிக்கன் பிரியாணி உள்பட 30 வகை உணவுகள் இடம் பெற்றுள்ளன. பழச்சாறு, எரிசக்தி பானங்கள், வழக்கமான இந்திய உணவு வகைகள் உள்ளன.

சுவையான ஆரோக்கியமான உணவு

சுவையான ஆரோக்கியமான உணவு

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை வழங்கும் வகையில் இட்லி, பிரியாணி, அல்வா உள்ளிட்ட 30 வகையான சுவையான உணவுகளை தயாரித்து அதை பாக்கெட்டுகளில் அடைத்து விண்வெளி வீரர்களுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான உணவை பாக்கெட்டுகளில் இருந்து எடுத்து சாப்பிடும் படி இந்த வகை உணவுகள் தயாரிக்கப்பட உள்ளன.

உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வக அதிகாரிகள்

உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வக அதிகாரிகள்

இது குறித்து உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வக அதிகாரிகள் கூறும்போது, இஸ்ரோ மற்றும் விண்வெளி வீரர்கள் எந்த வகையான உணவுகளை விரும்புகிறார்கள் என்பதை இறுதி செய்வோம். அதன்பின் அதில் மாற்றங்கள் கூட செய்வோம்.

ஆதார் பான் இணைப்பு காலக்கெடு நீட்டிப்பு: நீங்கள் இணைத்துவிட்டீர்களா என்பதை எப்படி அறிவது?ஆதார் பான் இணைப்பு காலக்கெடு நீட்டிப்பு: நீங்கள் இணைத்துவிட்டீர்களா என்பதை எப்படி அறிவது?

உணவுகளை சூடாக வழங்கும் தொழில் நுட்பம்

உணவுகளை சூடாக வழங்கும் தொழில் நுட்பம்

இந்த உணவுகளை தவிர உணவுகளை சூடாக வழங்கும் தொழில் நுட்பம், கழிவுகளை அகற்றும் கருவி உள்ளிட்டவற்றை வழங்க நாங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.உணவு பட்டியலில் சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, சுஜி அல்வா, சிக்கன் கறி, பாதாம், கீரை, பன்னீர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

புவிஈர்ப்பில் உணவுகள் தவறாமல் இருக்க நடவடிக்கை

புவிஈர்ப்பில் உணவுகள் தவறாமல் இருக்க நடவடிக்கை

புவிஈர்ப்பு இல்லாத விண்வெளியில் உணவுகளை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுக்கும் போது அது தவறி போகும் வாய்ப்பு உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்திய உணவு வகைகளை மனதில் வைத்து நடவடிக்கை

இந்திய உணவு வகைகளை மனதில் வைத்து நடவடிக்கை

விண்வெளி செல்லும் வீரர்களை கவனத்தில் கொண்டு நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. இந்திய உணவு வகைகளை மனதில் வைத்துக் கொண்டே ஆராய்ந்து வருகிறோம். இதில் இன்னும் சில உணவு வகைகள் தேவைப்படுகிறது. அதை விரைவில் ஆராய்வோம் என்றனர்.

2022 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தும் இஸ்ரோ

2022 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தும் இஸ்ரோ

ககன்யான் திட்டத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது. விண்வெளிக்கு செல்லவிருக்கும் வீரர்கள் விரைவில் ரஷ்யா சென்று பயிற்சி பெற இருக்கிறார்கள். இதற்கிடையில் விண்வெளி வீரர்களுக்கு தேவையான சில வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Jio vs Airtel vs Vodafone: ரூ.200-க்கு கீழ் போட்டிப்போட்டு திட்டங்கள் அறிமுகம்Jio vs Airtel vs Vodafone: ரூ.200-க்கு கீழ் போட்டிப்போட்டு திட்டங்கள் அறிமுகம்

இஸ்ரோ-டிஆர்டிஓ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இஸ்ரோ-டிஆர்டிஓ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

விண்வெளியில் வீரர்களுக்குத் தேவையான உணவு, அவர்களது உடல்நலத்தைக் கண்காணிக்கும் கருவிகள், அவசரக்கால உதவிக்குத் தேவையான பொருள்கள், பாராசூட் உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில் இஸ்ரோ-டிஆர்டிஓ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரோ பிரதிநிதிகளும், டிஆர்டிஓ பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்குத் தேவையானவற்றை இஸ்ரோவுக்கு டிஆர்டிஓ வழங்கவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
30 types of foods including briyani for astronauts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X