படு 'வீக்"கான பாஸ்வேர்டு இதுதான்! உங்களுடையது இந்த லிஸ்ட்ல இருக்கா? உஷார் மக்களே.!
பாஸ்வோர்டுகளை நினைவில் கொள்வது எளிதானது அல்ல, இந்த நாட்களில் அதிகமானஆப் பயன்பாடுகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் மொபைல் சாதனங்களை நாம் பயன்படுத்துகிறோம், இதனால் இப்பொழுது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாஸ்வோர்டுகள் பல உள்ளது. எனவே அத்தனையும் கவனமாகவும், பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக ஸ்மார்ட்போன் லாக்குகள், ஸ்மார்ட்போன் ஆப்கள், சமூக வலைத்தளங்கள் என அனைத்துக்குமே கட்டாயம் பாஸ்வேர்டு தேவைப்படுகிறது. பல பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது என்பதற்காக மிகவும் எளிதான பாஸ்வேர்டுகளை பயனாளர்கள் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

எனவே இதுபோன்ற வீக் பாஸ்வேர்டுகள், இணைய மோசடி செய்யும் ஹேக்கர்களுக்கு எளிமையான வேலையாக போய்விடுகிறது. பணபரிவத்தனை போன்ற முக்கிய ஆப்களுக்கு எளிதான பாஸ்வேர்டு போடுவதால் பண மோசடியும் ஏற்படுகின்றன, பின்பு நமது முக்கிய கோப்புகளுக்கும் ஆபத்து வருகிறது.

அதன்படி மக்கள் பயன்படுத்தும் பொதுவான எளிதான பாஸ்வேர்டு விவரங்கள் வெளியாகியுள்ளன. நீங்களும் இந்த லிஸ்டில் ஏதாவது பாஸ்வேர்டு வைத்திருந்தால் அதனை உடனடியாக மாற்றி சற்று பாதுகாப்பான பாஸ்வேர்டாக மாற்றிக்கொள்ளலாம்.

#1
123456
123456789
picture1
password
12345678
111111
123123

#2
12345
1234567890
senha
1234567
qwerty
abc123
Million2

#3
000000
1234
iloveyou
aaron431
password1
qqww1122
123

#4
omgpop
123321
654321
qwertyuiop
iloveyou
pokemon
unknown
monkey
princess
superman
soccer
letmein
666666
asdfghjkl

மேலும் ஒருபோதும் கிரெடிட் / டெபிட் கார்டுகளின் PIN எண்களை கடவுச்சொற்களாக பயன்படுத்த வேண்டாம். அதேபோல், உங்களின் தொலைப்பேசி எண்களையும் பயன்படுத்த வேண்டாம்.
அதேபோல் ஒரே கடவுச்சொல்லைப் பல தளங்களில் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கணக்குகளில் ஒன்றை ஹேக் செய்ய யாராவது நிர்வகித்தால், அவர்கள் அதே கடவுச்சொல்லை மற்ற கணக்குகளிலும் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.

பழைய கடவுச்சொல்லை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். பெரும்பாலான தளங்கள் இப்போது பயன்படுத்தப்பட்ட கடவுச்சொல்லை ஏற்பதில்லை, ஆனால் சில தளங்களில் பழமையான கடவுச்சொல்லை அனுமதிக்கிறது, இதை முற்றிலுமாக தவிர்க்கவும். காலாவதியான கடவுச்சொற்களின் பட்டியல்களை டார்க் வெப் அல்லது ஹேக்கர் தரவுத்தளங்களில் நீங்கள் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications