அம்பானி சாம்பிராஜ்யம் சரியுது.. Jio கதை க்ளோஸ்.. Airtel ஏறுமுகம்.. இந்த 3 திட்டங்களுக்காக குவியும் கஸ்டமர்கள்!
ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்விற்கு பின்னர், இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களின் அநியாய விலை உயர்வின் விளைவாக அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு புதிய கஸ்டமர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இதன் விளைவாக தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி உச்சகட்டத்தை எட்டியு உள்ளது. குறிப்பாக சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் மற்றும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி - தீயாக உள்ளது!
இவ்விரு நிறுவனங்களுமே.. பல்வேறு வகையான பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தின் கீழ் தனித்துவமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. அவைகளில் மிகவும் முக்கியமான ஒரு பிரிவு என்றால் அது கேலண்டர்-மன்த் வேலிடிட்டியை (Calendar-month validity) வழங்கும் பிரிவு தான். அதாவது முழுதாக ஒரு மாத கால (30 நாட்கள் என்கிற) வேலிடிட்டி உடன் வரும் திட்டங்கள். பெரும்பாலான மக்கள் இவ்வகை திட்டங்களையே ரீசார்ஜ் செய்கின்றன.

நம்பினால் நம்புங்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் ஒரே ஒரு திட்டம் மட்டுமே கேலண்டர்-மன்த் வேலிடிட்டியை வழங்குகிறது . ஆனால் ஏர்டெல் நிறுவனத்திடம் கேலண்டர்-மன்த் வேலிடிட்டியை வழங்கும் 3 திட்டங்கள் உள்ளன. அதாவது ஜியோ சிம் கார்ட்டை பயன்படுத்துபவர்களை விட ஏர்டெல் சிம் காரட்டை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு தேர்வு செய்ய அதிக விருப்பங்கள் உள்ளன. ஆக இந்த போட்டியில் ஏர்டெல் நிறுவனம் அசால்ட் ஆக ஜியோவை தோற்கடிக்கிறது.
கேலண்டர்-மன்த் வேலிடிட்டி உடன் வரும் 3 ஏர்டெல் திட்டங்களின் விலை மற்றும் நன்மைகள்: முதல் திட்டம் ரூ.379 ரீசார்ஜ் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற நன்மைகள் கிடைக்கும். இது ரீசார்ஜ் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும்.
இரண்டாவது திட்டம் ரூ.429 ரீசார்ஜ் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ரூ.5 டால்க் டைம், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற நன்மைகள் கிடைக்கும். இதுவும் ரீசார்ஜ் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும்
மூன்றாவது திட்டம் ரூ.609 ரீசார்ஜ் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 60ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகள் கிடைக்கும். இதுவும் ரீசார்ஜ் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். இந்த திட்டங்களுமே வெவ்வேறு பயன்பாட்டு தேவைகளை கொண்ட பயனர்களை ஈர்க்கும் வகையிலான நன்மைகளை வழங்குகின்றன. அதே நேரத்தில் பயனர் விருப்பங்களுடன் ஒத்துப்போகும் மாதாந்திர செல்லுபடியையும் உறுதி செய்கின்றன.
ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் காலண்டர்-மன்த வேலிடிட்டி பிளானின் விலை மற்றும் நன்மைகள்: ஏர்டெல்லுக்கு நேர்மாறாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, காலண்டர்-மன்த் வேலிடிட்டியுடன் வரும் ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே தன்வசம் கொண்டுள்ளது. அது ரூ.319 ப்ரீபெய்ட் திட்டமாகும். இது டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை 30 நாட்களுக்கு வழங்குகிறது.
முன்னதாக ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைத்த ரூ.296 மற்றும் ரூ.259 ஆகிய திட்டங்கள் கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திட்டங்களாக கருதப்பட்டன. இவ்விரு திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டதால், தற்போது பெரும்பாலான ஜியோ கஸ்டமர்களின் விருப்பமான தேர்வாக ரூ.319 திட்டம் உருமாறியுள்ளது . இதேபோன்ற மேலதிக திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்யாத பட்சத்தில், இந்த பிரிவில் ஏர்டெல் தான் ராஜாவாக இருக்கும்!


Click it and Unblock the Notifications








