Home
News

21 நொடிகளில் விற்று தீர்ந்த ஸ்மார்ட்போன்.!!

By Meganathan

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான கூல்பேட் நேற்று சுமார் 30,000 கூல்பேட் நோட் 3 லைட் ஸ்மார்ட்போன்களை சுமார் 21 நொடிகளில் விற்றிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்ட இந்த கருவி ப்ளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் ரூ.6,999க்கு விற்பனை செய்யப்படும் கூல்பேட் நோட் 3 லைட் கருவியின் சிறப்பம்சங்கள் மற்றும் அடுத்த ப்ளாஷ் விற்பனை குறித்த தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

செவ்வக வடிவில் வழங்கப்பட்டிருக்கும் கைரேகை ஸ்கேனர் ப்ரைமரி கேமராவின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட் என்றாலும் இந்த கைரைகை ஸ்கேனர் வேகமாக இயங்குகின்றது என்றே கூற வேண்டும்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

கையில் இருந்து நழுவாமல் இருக்கும் படி பின்புறம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவியின் ஓரங்களில் தங்க நிற பேனல் கருவியை மேலும் அழகாக காண்பிக்கின்றது.

திரை

திரை

கூல்பேட் நோட் 3 கருவியில் முந்தைய கருவியை விட குறைந்த அளவு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கின்றது.

வேகம்

வேகம்

சீராக இயங்க ஏதுவாக கூல்பேட் நோட் 3 லைட் கருவியானது 64-பிட் மீடியாடெக் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் எம்டி6735 குவாட்கோர் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. 64-பிட் சிப்செட் என்பதால் இந்த கருவியின் வேகம் சீராக இருக்கும்.

ரேம்

ரேம்

நோட் 3 லைட் கருவியின் மற்றொரு சிறப்பம்சமாக இருப்பது தான் 3ஜிபி ரேம். இத்தகைய குறைந்த விலையில் 3ஜிபி ரேம் கொண்ட முதல் கருவி இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை கூல்பேட் நோட் 3 கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேரா ஆட்டோஃபோகஸ், ப்ளாஷ்லைட் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான கேமரா கொண்ட கருவியை வாங்க நினைப்போருக்கு இந்த கருவி கச்சிதமாக இருக்கும் என்றே கூற வேண்டும்.

மென்பொருள்

மென்பொருள்

மென்பொருள் தரப்பில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப், மற்றும் கூல்பேட் நிறுவனத்தின் கூல் யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

பட்ஜெட் விலை என்ற போதும் கூல் பேட் நோட் 3 லைட் கருவியில் 4ஜி எல்டிஈ வழங்கப்பட்டுள்ளது.

ப்ளாஷ் விற்பனை

ப்ளாஷ் விற்பனை

முதல் விற்பனையில் சுமார் 6 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்றும் இந்த கருவிக்கான அடுத்த ப்ளாஷ் விற்பனை பிப்ரவரி 4ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
30,000 Coolpad Note 3 Lite units sold in 21 seconds Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X