இனி பிளான் கோவா-க்கு இல்ல., விண்வெளிக்கு போடுங்க- விண்வெளி சுற்றுலா சென்ற மூன்று பேர்., டிக்கெட் விலை இதோ!
விண்வெளி சுற்றுலாத் திட்டத்தில் நாசா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியோம் ஆகியவை இணைந்த செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 3 தொழிலதிபர்கள் சென்றிருக்கிறார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் அமெரிக்காவில் கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ராக்கெட்டில் ஒரு முன்னாள் விண்வெளி வீரர் உட்பட 3 தொழிலதிபர்கள் விண்ணுக்கு சென்றனர். இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றடைந்தது.

மூன்று தொழிலதிபர்கள் மேற்கொண்ட பயணம்
நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான லோபஸ் அலெக்ரியா இதில் சென்ற விண்வெளி வீரர் ஆவார். 63 வயதான இவர் சுமார் 22 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்திருக்கிறார். இவர் நான்கு முறை விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளார். தற்போது மூன்று தொழிலதிபர்கள் மேற்கொண்ட பயணத்தை லோபஸ் வழிநடத்துகிறார்.

மூன்று தொழிலதிபர்கள் விவரம்
இவர்களுடன் சென்ற மூன்று தொழிலதிபர்கள் குறித்து பார்க்கையில், இதில் லாரி கன்னோர் என்பவர் இடம்பெற்றுள்ளார். ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார். இவரது சொத்து மதிப்பு சுமார் 3.5 பில்லியன் டாலர்கள் ஆகும். அதேபோல் இரண்டாவதாக இருப்பவர் இஸ்ரேல் தொழிலதிபர் எஸ்டான் ஸ்டிபே ஆகும் இவர் முன்னாள் போர் விமானி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கனடா தொழிலதிபர் மார்க் பதி இருக்கிறார்.

நாசா, ஸ்பேஸ் எக்ஸ், ஆக்சியோம்
ஆக்சியோம் நிறுவனம் விண்வெளி சுற்றுலா திட்டத்தில் கடந்த சில வருடங்களாகவே ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து விண்வெளி சுற்றுலாத் திட்டத்தில் நாசா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியோம் ஆகியவை இணைந்து செயல்படுகிறது. சர்வதேச விண்வெளி மையத்தின் 10 நாட்கள் சுற்றுலாவுக்கு சுமார் 55 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் பயணம்
விண்வெளி சுற்றுலாவில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது மூன்று பணக்கார தொழிலதிபர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளது. விண்வெளி வீரர்களை நாசாவுக்கு ஏற்றிச் சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு பிறக ஸ்பேஸ்எக்ஸ் சுற்றுப்பாதை ஆய்வு மையத்திற்கு முதல் தனியார் பயணிகளை ஏற்றிச் சென்றிருக்கிறது.

சோயுஸ் எம்எஸ்-19 விண்கலம்
முன்னதாக விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஒரு படக் குழுவினர் சென்றனர் நடிகை யூலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிபென்கோ மற்றும் விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ் ஆகியோருடன் சோயுஸ் எம்எஸ்-19 விண்கலம் விண்வெளி நோக்கி பறந்தது. ரஷ்யாவின் புகழ் பெற்ற இயக்குனர்களில் ஒருவர் கிளிம் ஷிபென்கோ, இவர் தனது திரைப்படத்தை செட் ஏதும் போடாமல் நேரடியாக விண்வெளிக்கு சென்று படமாக்க இருக்கிறார். சுற்றுப்பாதையில் படமாக்கப்படும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்த படத்திற்கு தி சேலஞ்ச் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் கதை அம்சம் குறித்து பார்க்கையில் இது விண்வெளி ஏற்படும் மருத்துவ நெருக்கடியை மையமாக வைத்து இருக்கும் என கூறப்படுகிறது.
விண்வெளியில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்ட முதல் திரைப்படம்
ரஷ்ய நடிகையும் திரைப்பட இயக்குனரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 12 நாட்கள் தங்கியிருந்து அங்கு படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். விண்வெளியில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்ட முதல் திரைப்படம் இதுவாகும். இந்த படத்தில் இடம்பெறும் ஏணைய காட்சிகள் விண்வெளியில் தத்ரூபமாக படமாக்கப்பட்டது.
சிறிய புன்னகையுடன் திரும்பிய படக்குழு
இயக்குனர் ஷிபென்கோ கவலையாக இருப்பது போல் தோன்றினார். இருப்பினும் அவர் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் போது சிறிய புன்னகையுடன் இருந்தார். கேமராக்களுக்கு கையை அசைத்துபடி மருத்துவ பணியாளர்களால் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அதேபோல் இந்த திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் பெரெசில்ட், இவர் 3000 விண்ணப்பதாரர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காப்ஸ்யூலில் இருந்து கைதட்டல் மற்றும் பூங்கொத்துடன் வெளியே வந்தனர்.


Click it and Unblock the Notifications








