Subscribe to Gizbot

எக்ஸ்‌ட்ராடெரெஸ்ட்ரியல்ஸ் : வலுவான 3 புரிதல்கள்..!

Written By:

வேற்றுகிரக வாசிகள் என்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை 56% ஜெர்மானியர்கள், 54% அமெரிக்கர்கள், 52% பிரிட்டிஷ் மக்களுடன் சேர்த்து கால் பங்கு உலகவாசிகள் ஏலியன்களை நம்புகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இவ்வளவு பெரிய நம்பிக்கைக்கு எது காரணம்..? இந்த நம்பிக்கையானது வெறும் கண்மூடித்தனம் மட்டுமில்லை என்பதை பற்றியும் யோசிக்க வேண்டும்.

அப்படியாக, எக்ஸ்‌ட்ராடெரெஸ்ட்ரியல்ஸ் (Extraterrestrials - அதாவது வேற்றுகிரக வாசிகள்) பற்றி அறிந்துகொள்ள வேண்டிய வலுவான 3 புரிதல்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
புரிதல் 01 :

புரிதல் 01 :

அண்டம் ஆனது மிகவும் முடிவில்லாத மற்றும் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்கிறது.

ஒரு பங்கு கூட இல்லை :

ஒரு பங்கு கூட இல்லை :

இந்த அளவிற்க்கான அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும் கூட வானவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனம் இதுநாள் வரை கண்டுபிடித்தது ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை என்பது தான் நிதர்சனம். (எடுத்துக்காட்டுக்கு கடலின் தரைமட்டம் பற்றி இன்னும் பல கேள்விகளுக்கு பதிலே இல்லை போன்றவைகளை கூறலாம்)

பிளாக் ஹோல்கள் மற்றும் புவியீர்ப்புவிசை :

பிளாக் ஹோல்கள் மற்றும் புவியீர்ப்புவிசை :

இந்த கோட்பாடு தவறு என்று இன்னொரு கோட்பாடு அனுதினமும் வெளியாகி கொண்டிருக்கும் வண்ணம் இருந்தாலும் கூட நாம் தற்போது தான் பிளாக் ஹோல்கள் மற்றும் புவியீர்ப்புவிசை ஆகியவைகளின் அடிப்படையை தெளிவாக புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி நிலை இவ்வளவு தான் :

வளர்ச்சி நிலை இவ்வளவு தான் :

அண்டம் சார்ந்த விடயத்தில் மனித இனத்தின் வளர்ச்சி நிலை இவ்வளவு தான் என்கிற போது வேற்றுக்கிரகவாசம் எனப்படும் எக்ஸ்‌ட்ராடெரெஸ்ட்ரியல்ஸ் பற்றிய விளக்கத்தில், இல்லை என்ற முடிவோ அல்லது இருக்கிறது என்றோ நம்பிக்கையோ பற்றாது. துல்லியமான ஆதாரம் வேண்டும்.

ஆயிரமாயிரம் கோட்பாடுகள் :

ஆயிரமாயிரம் கோட்பாடுகள் :

ஆதாரம் கிடைத்தாலும் கூட அதை நாளுக்கு நாள் மேறுகேற்றும் ஆயிரமாயிரம் கோட்பாடுகள் திந்தினம் வெளியாகும் என்பதும், இந்த அண்டத்திற்கு முடிவே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புரிதல் 02 :

புரிதல் 02 :

விசில் புளோயர் - ஒரு தனி நபரின் அல்லது ஒரு நிறுவனத்தின் சட்டவிரோதமான அல்லது ஒழுக்கக்கேடான நடவடிக்கையை அம்பலப்படுத்தும் நபரை (விசில் புளோயர்) என்பார்கள். அப்படியாக, விடயம் சார்ந்த விசில் புளோயர்கள் பட்டியலில் பிராட்லி மானிங், எட்வார்ட் ஸ்னோவ்டென், ஜூலியன் அசாஞ்சை மற்றும் பால் ஹெல்யெர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

போலியான ஏலியன் கதை :

போலியான ஏலியன் கதை :

ஏற்கனவே உலகம் முழுக்க அறியப்படும் அறிவியலார்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் போலியான ஏலியன் கதைகளை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். அதனால் தான் இவர்கள் உண்மையை வெளிப்படுத்த விரும்பும் நோக்கத்தால் விசில் புளோயர் என்ற பெயர் வாங்குகிறார்கள்.

புரிதல் 03 :

புரிதல் 03 :

வரலாற்றில், நிலைப்பாட்டை விட்டு விலகிய ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டம் :

வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டம் :

இதுநாள் வரையாக எக்ஸ்‌ட்ராடெரெஸ்ட்ரியல்ஸ் பற்றிய விவரிக்க முடியாத குகை வரைபடங்கள், சுவர் கல்வெட்டுகள், வாய்வழி கதைகள் மற்றும் ஓவியங்கள் என கிட்டத்தட்ட வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்தில் இருந்தும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாண்டி :

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாண்டி :

குழப்பமான ஆதாரங்கள் மூலம் எந்த விதமான முடிவும் கிடைக்கப்பெறவில்லை என்பதையும், ஒரு விடயம் முழுக்க முழுக்க பொய்யாக கற்பனையாக இருந்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாண்டியும் அது நீட்டித்து இருக்காது என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பெர்முடா முக்கோணம் : அறிவியலும், தொழில்நுட்பமும் செயல் இழப்பது ஏன்..?


உறுதி : செயற்கை சூரியனை உருவாக்குகிறது சீனா..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
3 Strong Signs We’re Being Visited By Extraterrestrials. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot