Home
News

அனல் பறக்கும் ஏசி விற்பனை.. 3 ஸ்டார்.. 5 ஸ்டார்.. எந்த AC மாடலை வாங்கலாம்? இதோ முழு விவரம்..

நாளுக்கு நாள் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் ஏசி, ஏர் கூலர், மினி ஏசி போன்ற சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் ஏசி விற்பனை 100 சதவீதம் அதிகரித்து உள்ளது.

அதாவது தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு வெப்ப அலை மற்றும் அனல் காற்று அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெப்ப அலை அதிகரித்த வண்ணம் உள்ளதால் பொதுமக்கள் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று அரசும் அறிவுறுத்தி உள்ளது.

3 ஸ்டார்.. 5 ஸ்டார்.. எந்த AC மாடலை வாங்கலாம்?  இதோ முழு விவரம்..

அதேபோல் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஏசி சாதனங்களின் விற்பனை 100 சதவீதம் கூடுதலாகி உள்ளது என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். அதுவும் 5 ஸ்டார், 3 ஸ்டார் கொண்ட ஏசி மாடல்களை வாங்கத் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஏசிக்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன? இதில் எது சிறந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம் என்பது ஒரு சாதனம் எந்தளவுக்கு மின்சாரத்தைச் செலவிடுகிறது என்பதைக் காட்டப் பயன்படும் ஒரு ரேங்கிங் சிஸ்டம் ஆகும். குறிப்பாக பியூரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) என்ற அமைப்பு தான் இந்தியாவில் உள்ள மின்சாதன பொருட்களுக்கு இந்த ஸ்டார் ரேட்டிங் மதிப்பை வழங்குகிறது.

3 ஸ்டார்.. 5 ஸ்டார்.. எந்த AC மாடலை வாங்கலாம்?  இதோ முழு விவரம்..

அதுவும் 1 ஸ்டார் முதல் 5 ஸ்டார் வரை மின் சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக ஒரு சாதனத்திற்கு 1 ஸ்டார் தான் கிடைக்கும் என்றால் மின்சாரத்தை அதிகம் இழுக்கும். அதே 5ஜி ஸ்டார் என்றால் குறைவான மின்சாரமே போதும். அனைத்து மக்களும் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதுபோன்ற ஒரு சிஸ்டத்தை உருவாக்கி உள்ளனர்.

ஆனாலும் ஏசி சாதனங்களைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமான விஷயங்களை கருத்தில் கொண்டு ஸ்டார் ரேட்டிங்கை கொடுப்பார்கள். முதலில் குளிரூட்டும் திறன் இரண்டாவது குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை பயன்படுத்தி எந்தளவுக்கு அறையைக் குளிர்விக்க முடியும் என்பதாகும். இவற்றைக் கருத்தில் கொண்டு தான் ஸ்டார் ரேட்டிங் வழங்குவார்கள்.

அதேபோல் அவசர அவசரமாக ஏசி சாதனங்களை வாங்க கூடாது. நல்ல பிராண்ட் மற்றும் ஸ்டார் ரேட்டிங் வைத்து தான் வாங்க வேண்டும். இது ஒரு முறை மட்டும் வரும் செலவு இல்லை. அதாவது ஏசியால் மாதாமாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டும். அதுவும் நமது நாட்டில் ஏசி அதிக தேவைப்படும். எனவே கவனமாக ஸ்டார் ரேட்டிங்கை பார்த்து வாங்க வேண்டும்.

3 ஸ்டார்.. 5 ஸ்டார்.. எந்த AC மாடலை வாங்கலாம்?  இதோ முழு விவரம்..

சரி இப்போது 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஏசி மாடல்களுக்கு என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம். அதாவது 1.5 டன் கொண்ட 3 ஸ்டார் ஏசி ஒரு மணி நேரம் ஓடினால் 1.1 யூனிட் மின்சாரம் தேவைப்படும் என்றால், 5ஸ்டார் ஏசி ஓடினால் 0.84 யூனிட் மின்சாரம் மட்டுமே தேவைப்படும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 3 ஸ்டார் பயன்படுத்தும் போது ரூ.580 செலவாகிறது என்றால், 5 ஸ்டார் ஏசியை பயன்படுத்தினால் ரூ.500 செலவாகும் அவ்வளவு தான்.

குறிப்பாக 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஏசி மாடல்களுக்கும் 7000 முதல் 8000 ரூபாய் வரை வித்தியாசம் இருக்கும். வீட்டில் அதிக காலம் ஏசி தேவைப்படும் என்றால் 5 ஸ்டார் ஏசி மாடலை வாங்குவது நல்லது. ஆனால் அதிக வெயில் காலங்களில் மட்டும் தான் ஏசி போடுவேன், மற்ற காலங்களில் ஃபேன் போதும் என்று நினைப்பவர்கள் 3 ஸ்டார் ஏசி மாடலை வாங்குவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 star vs 5 star ac power consumption difference : check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X