மீண்டும் நோக்கியா : தமிழ்நாட்டின் செல்லக்குட்டி.. இந்தியாவின் சிங்கக்குட்டி..!

Written By:

உங்களது கைகளில் தவழ்ந்த முதல் போன் - நோக்கியா என்றால் மேற்கொண்டு படியுங்கள். ஏனெனில் அனுபவிக்காதவர்களுக்கு நோக்கியா என்பது வெறும் ஒரு போன், ஏனையோர்களுக்கு நோக்கிய என்பது ஒரு உணர்வு. அந்த உணர்வை அனுபவித்த அனைவரும் நோக்கியாவின் மறுவருகைக்காக காத்துக் கிடக்கிறாரகள். அவர்களின் காத்திருப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே.!

அதாவது நோக்கியா பிராண்ட் அடுத்த ஆண்டு அதன் புதிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களின் வரிசையை எச்எம்டி க்ளோபல் கம்பெனி மூலம் தொடங்க திட்டமிட்டுள்ளது.

எச்எம்டி க்ளோபல் நிறுவனம், நோக்கியா ஸ்மார்ட்போன்களின் சந்தை வளர்ச்சிக்கு இந்திய சந்தை அதிகம் உதவும் என்றும் கூறியுள்ளது. எச்எம்டி க்ளோபல் நிறுவனம் தொலைபேசிகள் மற்றும் டேப்ளெட்கள் தொடங்க நோக்கியா வுடனான ஒரு 10 ஆண்டு பிராண்ட் உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் கொண்டு சந்தைக்குள் மறுவருகை புரியும் நோக்கியா நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இந்திய சந்தைக்கும் அப்படி என்னதான் தொடர்பு.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம்

எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம்

மிக வேகமாக ஸ்மார்ட்போன் சந்தையில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க புள்ளியாகும். நோக்கியா தனது மறுபிரவேசத்தின் போது போதுமான வளர்ச்சி அடைய இது மிகவும் முக்கியமானதாகவே இருக்கும் ஏனெனில் இந்தியா அனுதினமும் சந்தையில் வேகமாக வளர்ந்து நாடாக திகழ்கிறது. உடன் நாட்டில் ஒரு தசாப்தம் கழித்து நோக்கியா நிறுவனம் மீண்டும் உள்நுழைவதால் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம்.!

நல்ல வரவேற்பு உண்டு

நல்ல வரவேற்பு உண்டு

நாட்டினுள் ஸ்மார்ட்போன்கள் புகழ் அதிகமாகிக்கொண்டே போக பீச்சர் போன்களின் நிலை மோசமாகிக் கொண்டே போகின்றது. இந்த நிலையிலும் கூட நோக்கிய பீச்சர் போன்களுக்கு மக்களின் மத்திலும் சரி, மனதிலும் சரி நல்ல வரவேற்பு உண்டு. ஆக எச்எம்டி நிறுவனம் நோக்கியா பீச்சர் போன்களை அறிமுகம் செய்தால் கூட நிச்சயமாக வெற்றி அடையும் என்பதில் சந்தேகமேயில்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வந்த வேகத்தில் வியாபரம்

வந்த வேகத்தில் வியாபரம்

2008-இல், நோக்கியா நிறுவனம் இந்தியாவில் 70 சதவீதம் என்ற ஒரு குறிப்பிடத்தக்க சந்தை பங்களிப்பைக் கொண்டிருந்தது. ஆக வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் நோக்கியா பிராண்ட் சார்ந்த அதிர்வு இன்றும் உள்ளது ஆகா புதிய அறிமுகம் மற்றும் நம்பிக்கைகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. ஆக, சந்தைக்கு வந்த வேகத்தில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வியாபாரத்தை தொடங்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

நோக்கியா லீக்ஸ் கட்டுரைகள்

நோக்கியா லீக்ஸ் கட்டுரைகள்

எதிரிகளுக்கு 'நோ ரெஸ்ட்' சொல்லும் 'நெக்ஸ்ட்' நோக்கியா இது தான்.!?
இணையத்தில் லீக் ஆன புதிய நோக்கியா போன் : இது செம்ம ஹாட் மச்சி..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
3 Reasons Why India is a Key Market for Nokia's Growth. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot