சுந்தர்னா சும்மாவா.. iPhone 16e மாடலை விட Pixel 9a ஏன் பெஸ்ட்? நச்சுனு 3 காரணங்கள்!
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 சீரீஸின் கீழ் பட்ஜெட் விலை ஐபோன் ஆக ஐபோன் 16இ மாடலை அறிமுகம் செய்ததும், கூகுள் நிறுவனம் இந்திய சந்தை உட்பட உலகளவில் பிக்சல் 9ஏ மாடலை அறிமுகப்படுத்தயது. இது கூகுளின் பிக்சல் 9 சீரிஸின் கீழ் வாங்க கிடைக்கும் மிகவும் மாடல் ஆகும். இந்த இடத்தில் இருந்து தான் போட்டி ஆரம்பிக்கிறது.
ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கும் பிக்சல் 9 மாடல் உடன் ஒப்பிடும் போது ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும் பிக்சல் 9ஏ மாடல் மலிவான விருப்பமாக தெரியலாம். இதேபோல ரூ.79,900 க்கு வாங்க கிடைக்கும் ஐபோன் 16 மாடல் உடன் ஒப்பிடும் போது ரூ.59,900 க்கு வாங்க கிடைக்கும் ஐபோன் 16ஏ மாடல் மலிவான விருப்பமாக தெரியலாம்.

ஆனால் ஐபோன் 16இ மற்றும் பிக்சல் 9ஏ ஆகிய இரண்டு "மலிவான விருப்பங்களில்" எதை வாங்கலாம்? இது தான் நாங்கள் மேலே குறிப்பிட்ட போட்டியாகும். ஐபோன் 16இ VS பிக்சல் 9ஏ - கதை அடிக்காமல் நேரடியாக விஷயத்திற்குள் வர வேண்டும் என்றால்.. பிக்சல் 9ஏ தான் வின்னர்! ஆப்பிள் ஐபோன் 16இ மாடலை விட பிக்சல் 9ஏ மாடலை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான 3 காரணங்களை எங்களால் முன்வைக்க முடியும்.
01. நாட்ச் இல்லாத 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே: ஐபோன் 16இ மாடல் உடன், நீங்கள் இன்னும் நாட்ச்சை பெறுகிறீர்கள். 2020 க்கு முன்பும், அதன் பிறகும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களில் நீங்கள் பார்த்த அதே நாட்ச் டிசைனை ஐபோன் 16இ கொண்டுள்ளது. ரூ.59,900 க்கு ஆப்பிள் நிறுவனம் நாட்ச்சிற்கு பதிலாக டைனமிக் ஐலேண்டை வழங்கியிருக்க வேண்டும்.
மறுகையில் உள்ள பிக்சல் 9ஏ மாடலை பெரிய பெசல் அளவுடன் ஒப்பீட்டளவில் பெஸ்ட் ஆக உள்ளது. இது கூகுள் ஆக்டுவா டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது ஆப்பிள் ஐபோன் 16ஏ உடன் ஒப்பிடும்போது சிறந்த பீக் ப்ரைட்னஸ்-ஐ கொண்டுள்ளது மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும் கூகுளின் டிஸ்பிளேவும் சற்று பெரியது - 6.1- இன்ச்!
02. கூகுளின் ஏஐ - ஆப்பிளுடன் ஒப்பிடும்போது சிறந்த நிலையில் உள்ளது! ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 18 வெர்ஷன்களுடன் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களை படிப்படியாக வெளியிடுவதாக உறுதியளித்தது. ஆனால் இதுவரை ஆப்பிள் நிறுவனத்தால் ஒரு சில அம்சங்களை மட்டுமே வழங்க முடிந்தது. மிக முக்கியமாக, புதுப்பிக்கப்பட்ட சிரி போன்ற முக்கியமானவை இன்னும் பைப்லைனிலேயே உள்ளன. இந்த இடத்தில் கூகுள் வெளிப்படையாகவே - ஒரு படி அல்ல, பல மேலே நிற்கிறது.
03. கேமரா பன்முகத்தன்மை: நிச்சயமாக ஆப்பிளின் சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமரா, அவுட்புட்க்களை வழங்கும். இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களை பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. ஆனால் டீபால்ட் ஆக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும்
ஆனால் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது: 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா. ஐபோன் 16இ உடன் ஒப்பிடும்போது பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் கேமராவில் அதிக பல்துறை திறன் உள்ளது. ஆக இந்த இடத்திலும் வெளிப்படையாகவே பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் வகிக்கிறது.
ஐபோன் 16இ மாடலின் விரிவான அம்சங்கள்: இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. கேமராவை ஸ்டார்ட் செய்வது அல்லது டிஎன்டி மோட்-ஐ ஆன் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுக, இந்த ஆக்ஷன் பட்டன் உதவும்.
கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது. இது விரைவான டேட்டா பரிமாற்றம் மற்றும் சார்ஜிங்கிற்காக லைட்னிங் போர்ட்டை மாற்றுகிறது. இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது ஐபோன் 16இ மாடல் ஆனது அதன் முன்னோடிகளை விட அதிக செயல்திறனை வழங்கும். ஏ18 சிப்பில் 6-கோர் சிபியு உள்ளது, இது ஐபோன் 11 மாடலில் உள்ள ஏ13 பயோனிக் சிப்பை விட 80 சதவிகிதம் வேகமானது என்று ஆப்பிள் கூறுகிறது.
மேலும் ஐபோன் 16இ மாடலில் 4-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை மெஷின் லேர்னிங் பணிகளை மிகவும் திறமையாக கையாளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, நியூரல் என்ஜின் ஏ13 -ஐ விட இது ஆறு மடங்கு வேகமாக ஏஐ மாடல்களை செயலாக்க முடியும். எல்லாவாற்றை விட முக்கியமாக ஐபோன் 16இ மாடல் ஆனது ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது.
ஜென்மோஜி, ரைட்டிங் டூல்ஸ் மற்றும் சாட்ஜிபிடி உடனான ஒருங்கிணைப்பு போன்ற டூல்கள் இதில் அடங்கும், இது பல்வேறு ஆப்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும். இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது. இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் எச்டிஆர் ஆகிய அம்சங்கள் உள்ளன முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது.
வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடல் ஆனது 4கே ரெக்கார்டிங்கை வினாடிக்கு 60 பிரேம்கள் வரை ஆதரிக்கிறது. இதிலுள்ள டால்பி விஷன் ஆனது மேம்பட்ட கலர்கள் மற்றும் காண்ட்ராஸ்ட் உடன் உயர்தர வீடியோவை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது. இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.
கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup)
- 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்.


Click it and Unblock the Notifications








