பிரமிக்க வைக்கும் கூகுள் லென்ஸ் ஐ/ஒ.!

இந்த லென்ஸ்கள் அருகிலுள்ள வணிகங்களின் முகவுரையை ஸ்கேன் செய்து, அந்த குறிப்பிட்ட இடத்தின் தகவல்களையும் மதிப்பீடுகளையும் பதிவு செய்ய முடியும்.!

By Prakash
|

இந்த லென்ஸ்கள் அருகிலுள்ள வணிகங்களின் முகவுரையை ஸ்கேன் செய்து, அந்த குறிப்பிட்ட இடத்தின் தகவல்களையும் மதிப்பீடுகளையும் பதிவு செய்ய முடியும்.!

கூகிள் மேம்பாட்டாளர் மாநாடு (கூகுள் லென்ஸ் ஐ/ஒ) என்பது கூகிள் நிறுவனத்தால் சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா யாவில் நடைபெற்ற வருடாந்திர மாநாடு ஆகும்.இந்த மாநாட்டில் இணைய மேம்பாடு, கூகிள் குரோம், ஆண்ட்ராய்டு இயங்குதளம், கூகிள் தேடல், செல்லிடத் தொலைபேசி போன்றவற்றின் மேம்பாடு பற்றி விவாதிக்கப்பட்டது.

புகைப்படம்:

புகைப்படம்:

கூகுளின் புகைப்பட செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி பதிவேற்றம் செய்யப்படும் 120 கோடி புகைப்படங்களில், நீங்கள் எடுக்கும் தன்னிச்சையான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து அந்த புகைப்படத்தில் உள்ள நபரை கண்டறிந்து அவருக்கு பகிரட்டுமா என்று கேட்கும் அளவுக்கு பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கூகுள்:

கூகுள்:

நம் அனைவரையும் வேறு உலகத்திற்கு அழைத்து செல்லும் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி ஆகியவற்றை மேம்படுத்துவதில் அடுத்த முயற்சி செய்துள்ளது கூகுள். எவ்வித மொபைலும், கேபிளும் இல்லாத அனைத்து சென்சாரும் உள்ளே பொருத்தப்பட்ட "கூகுள் ஸ்டாண்ட்அலோன்" என்னும் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பை ஹச்டிசி மற்றும் லெனோவா உடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

நுண்ணறிவுத் திறன்:

நுண்ணறிவுத் திறன்:

கூகுள் கிட்டத்தட்ட தான் அளிக்கும் அனைத்து சேவைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் திறனை பயன்படுத்தி, மிகச் சரியான பதிலை வேகமாக, தெளிவாக அளிக்கும் என்று கூறியுள்ளது.

லென்ஸ்கள் :

லென்ஸ்கள் :

இந்த லென்ஸ்கள் அருகிலுள்ள வணிகங்களின் முகவுரையை ஸ்கேன் செய்து, அந்த குறிப்பிட்ட இடத்தின் தகவல்களையும் மதிப்பீடுகளையும் பதிவு செய்ய முடியும். இது இடங்களின், புகைப்படங்கள் மற்றும் தெருக்களின் கூகிளின் விரிவான தரவுத்தளத்தை கொடுக்கும்படி அமைக்கப் பட்டடுள்ளது.

தகவல்கள்:

தகவல்கள்:

கூகுள் லென்ஸ் மூலம் நீங்கள் ஏதேனும் ஒரு புகைப்படத்தை காட்டினால் அதைப்பற்றிய முழு தகவல்களையும் உங்களுக்கு அளித்துவிடும். உதாரணமாக நீங்கள் செல்லும் வழியில் ஒரு மிருகத்தை பார்க்கிறீர்கள். அதைப்பற்றி கேட்க விரும்பினால் அதன் புகைப்படத்தை காட்டினாலே போது உங்களக்கு எல்லா தகவல்களையும் கூகுள் லென்ஸ் தெரிவித்து விடும்.

கூகிள் வேலை:

கூகிள் வேலை:

குறிப்பாக வேலை தேடுபவர்களுக்குப் பயனளிக்கும் கூகிள் வேலை மற்றும் சேவை என்ற கணினி மொழியில் செயலிகளை உருவாக்கும் வசதி, புற்றுநோய் மற்றும் மரபு ரீதியான நோய்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பங்கள், ஆக்மெண்ட்டட் ரியாலிட்டியைப் பயன்படுத்தி பள்ளிகளில் பாடம் கற்பித்தல் போன்ற பல புதிய தகவல்களையும் கூகுள் வெளியிட்டுள்ளது.

கூகுள் ஹோம்:

கூகுள் ஹோம்:

கூகுள் ஹோம் மூலம் நமது வீட்டின் மின்சாதனங்களை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். மேலும் நமக்கு தேவையான தகவல்களை தேடவும் உதவுகிறது. இனி நீங்கள் கூகுள் ஹோம் மூலம் இலசமாக கால் செய்ய முடியும்.

கூகுள் அசிஸ்டண்ட்கள்:

கூகுள் அசிஸ்டண்ட்கள்:

கூகுள் அசிஸ்டண்ட்கள் அனைத்து ஆண்டராய்டு மொபைல்களிலும், ஆங்கிலம் பிரேசில், போர்சுகீசியம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் உள்ளது. விரைவில் இத்தாலியன், கொரியன் ஸ்பானிஸ் மொழிகளிலும் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப வசதிகள்:

புதிய தொழில்நுட்ப வசதிகள்:

இனி உலகம் தொழில்நுட்பங்களை எதற்கெல்லாம் பயன்படுத்தும், எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஏனெனில் அந்த அளவுக்கு, புதிய தொழில்நுட்ப வசதிகளை வெளியிட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது கூகுள்.

மென்பொருள்;

மென்பொருள்;

இந்த லென்ஸ்கள் பொருத்தவரை அதிக மென்பொருள் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் அதிக பொருட்செலவில் இவை உருவாக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
3 reasons why Google Lens won I/O : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X