மண்டை மேலே இருந்த கொண்டை.. 3 காரணங்கள்.. ZOHO Arattai ஆப் செங்குத்தாக சரிந்தது ஏன்?
ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை ஆப் (ZOHO Arattai App) ஆனது கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) ஆகிய இரண்டிலுமே இந்தியாவின் டாப் 100 ஆப்களின் (India's top 100 apps) பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.
இதே ஆப் ஒரு மாதத்திற்கு முன்னர் நம்பர் 1 இடத்தில் இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக ஜோஹோவின் அரட்டை ஆப் செங்குத்தாக கீழ்நோக்கிய சரிவை கண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் தளங்களுக்காக, தேசிய அளவில் எழுந்த ஆதரவு அலைக்கு மத்தியில் கடந்த 2025 அக்டோபர் மாத நடுப்பகுதியில், அரட்டை ஆப் ஆனது உச்சத்தை அடைந்தது.

தற்போது (ஆப் ஸ்டோர் தரவரிசைகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் மணிகண்ட்ரோல் வெளியிட்ட அறிக்கையின்படி) அரட்டை ஆப்பின் பதிவிறக்கங்களும், ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்துள்ளது. தொழில்துறை மதிப்பீடுகளின்படி, அரட்டை ஆப்பின் பதிவிறக்கங்கள் கடந்த செப்டம்பரில் சுமார் 2.6 மில்லியனிலிருந்து அக்டோபரில் கிட்டத்தட்ட 13.8 மில்லியனாக உயர்ந்தன.
பின்னர் நவம்பர் தொடக்கத்தில் 200,000 க்கும் குறைவாக குறைந்தன. இதேபோல மாதாந்திர அடிப்படையில ஆக்டிவ் ஆக உள்ள பயனர்களும் (Monthly Active Users) கிட்டத்தட்ட 4 மில்லியனாக குறைந்துள்ளனர். இது அதிக அளவிலான "ஆரம்ப கால ஆர்வம்" இருந்தபோதிலும் பலவீனமான "தக்கவைப்பை" குறிக்கிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சமீபத்திய அறிக்கையின்படி, தொழில்நுட்ப வல்லுநர்களும், தொழில்துறை ஆய்வாளர்களும் இந்த சரிவிற்கான 3 முக்கியமான காரணங்களை முன் வைக்கின்றனர்.
1. தனியுரிமை கவலைகள் (privacy concerns)
2. வேறுபாடு இல்லாமை (lack of differentiation)
3. தீவிர போட்டி (intense competition)
மும்பையைச் சேர்ந்த ஒரு மூத்த தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு மூலோபாய நிபுணர், "மெசேஜிங் பிளாட்பார்ம்கள் யூஸர் நெட்வொர்க்குகளை பெரிதும் சார்ந்துள்ளன. மேலும் பெரும்பாலான இந்திய பயனர்கள் பெர்சனல் மற்றும் பிஸ்னஸ் கம்யூனிகேஷனில் ஆதிக்கம் செலுத்தும் வாட்ஸ்அப்பின் சுற்றுச்சூழல் அமைப்பில் ஆழமாக வேரூன்றி உள்ளனர். காண்டாக்ட்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாமல், புதிதாக வந்த ஆப்பிள் வலுவான ஆரம்ப இழுவையை பெற்ற பிறகும் கூட ஈடுபாட்டை தக்கவைக்க போராடுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
தொழில்நுட்ப ஆப்கள் மற்றும் கருவிகளை மதிப்பாய்வு செய்யும் ஒரு பிளாக்கர், எந்தவொரு மெசேஜிங் ஆப்பிற்கும் தனியுரிமை மற்றும் நம்பிக்கை முக்கியம், அங்கு மில்லியன் கணக்கான பயனர்களின் தரவு சேமிக்கப்பட்டு பரிமாறிக்கொள்ளப்படுகிறது. எனவே, தேசபக்தி சார்ந்த பரிசீலனைகளை பொருட்படுத்தாமல், பயனர்களின் முதன்மையான முன்னுரிமை ஆனது எப்போதும் அவர்களின் தரவின் ரகசியத்தன்மை மீதும், பாதுகாப்பின் மீதும் தான் இருக்கும் - ஜோஹோவால் முழுமையாக உறுதியளிக்க முடியாத ஒன்று" என்று கூறியுள்ளார்.
அரட்டை ஆப்பின் ஆரம்பகால உந்துதல் ஆனது பெரும்பாலும் தேசபக்தி உணர்வு மற்றும் உள்நாட்டு டிஜிட்டல் கருவிகளுக்கான ஆத்மநிர்பர் பாரத் உந்துதலால் நடந்து இருக்கலாம். இருப்பினும் இந்த எழுச்சியின் போது ஆப்பை பதிவிறக்கிய பயனர்கள் "புதுமை மறைந்தவுடன்" தங்களுக்கு விருப்பமான தளங்களுக்கு திரும்பியதாக தெரிகிறது.
முழுமையான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இல்லாதது மற்றும் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் உடன் ஒப்பிடக்கூடிய மேம்பட்ட அம்சங்கள் இல்லாதது அரட்டை ஆப்பின் நம்பகத்தன்மை மற்றும் பயன்பாட்டினை குறைமதிப்பிற்கு உட்படுத்தி உள்ளது. ஆகையால் அரட்டை ஆப் ஆனது சில வலுவான தனியுரிமை அம்சங்களை எவ்வளவு விரைவாக வெளியிடுகிறதோ அவ்வளவு வேகமாக இழந்ததை பெறலாம்.


Click it and Unblock the Notifications








