Home
News

3 ப்ரீபெய்ட் திட்டங்களில் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுத்து சலுகைகளை அள்ளி வீசும் BSNL.!

பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மற்ற நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதிக டேட்டா நன்மை

அதிக டேட்டா நன்மை

குறிப்பாக ஜியோ நிறுவனம் கூட ரூ.300 பட்ஜெட்டில் அதிக நன்மைகளை வழங்குவதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.300 பட்ஜெட்டில் அதிக டேட்டா மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக டேட்டா நன்மையுடன் கூடுதல் சலுகைகளை வழங்கியுள்ளது. இப்போது அந்த 3 திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா நன்மை முடிந்ததும் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைகிறது.

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது மொத்தம் 30 நாட்கள் செல்லுபடி, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் 100 நாட்கள் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் ட்யூன்களும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், சேலஞ்சஸ் அரீனா, லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் சர்வீஸ், லோக்துன் மற்றும் ஜிங் போன்ற பல சலுகைகள் இதில் கிடைக்கிறது.

 பிஎஸ்என்எல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளன. அதேபோல் 30 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனம்

அதேபோல் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி-ஐ குறைத்துள்ளது. அதாவது TelecomTalk வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் இப்போது வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.

 ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 3ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகளை வழங்கியது. அதேபோல் இதன் வேலிடிட்டி 90 நாட்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது...

வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது...

தற்போது பிஎஸ்என்எல் ரூ.94 திட்டத்தில் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது நீங்கள் இந்த ரூ.94 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி, 3ஜிபி டேட்டா மற்றும் 200 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குரல் அழைப்பு பலன் 100 நிமிடங்களிலிருந்து 200 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. ஆனால் வேலிடிட்டி 90 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைந்து விட்டது. குறிப்பாக இது கட்டண உயர்வை அமல்படுத்த பிஎஸ்என்எல் மேற்கொண்டுள்ள மறைமுக நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
3 Prepaid BSNL Prepaid plans with 30 days validity offer multiple benefits: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X