எனக்குன்னே வருவீங்களா.. Apple பரிதாபங்கள்.. ஒன்றுகூடி வேட்டு வைத்த 3 சீன நிறுவனங்கள்.. என்னாச்சு?
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்த வேகத்தில் 3 சீன நிறுவனங்கள் தத்தம் புதிய டேப்லெட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. அவைகள் - ஒப்போ (Oppo), விவோ (Vivo) மற்றும் ஷாவ்மீ (Xiaomi) ஆகிய நிறுவனங்கள் ஆகும்.
டிப்ஸ்டர் எக்ஸ்பிரீயன்ஸ் மோர் (Tipster Experience More) வழியாக கிடைத்த லேட்டஸ்ட் தகவலின் படி, இந்த மூன்று சீன நிறுவனங்களும் தத்தம் புதிய டேப்லெட்டுகளை அடுத்த மாதம், அதாவது 2025 ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளன. அறிமுகத்திற்கு முன்னதாக, இந்த மூன்று டேப்லெட்களின் முக்கிய அம்சங்களும் லீக் ஆகியுள்ளன.

டிப்ஸ்டர் எக்ஸ்பிரீயன்ஸ் மோர் வழியாக கிடைத்த தகவலின்படி ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ பேட் 4 ப்ரோ (Oppo Pad 4 Pro) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இது 13.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் எலைட் சிப்செட் மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 12,000mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கும்.
ஒப்போவின் இந்த லேட்டஸ்ட் டேப்லெட் ஆனது ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (Find X8 Ultra), ஒப்போ பைண்ட் எக்ஸ்8எஸ் (Find X8S) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 மினி (Find X8 Mini) ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ நிறுவனம் விவோ பேட் 4 ப்ரோ (Vivo Pad 4 Pro) மாடலை அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. இது வருகிற ஏப்ரல் மாதத்தில் விவோ எக்ஸ்200 அல்ட்ரா, எக்ஸ்200எஸ் மற்றும் விவோ வாட்ச் 5 உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 12.95-இன்ச் எல்சிடி பேனல், டைமன்சிட்டி 9400 சிப் மற்றும் 66W ரேபிட் சார்ஜிங் ஆதரவுடன் 12,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.
கடைசியாக, ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ பேட் 7எஸ் ப்ரோ (Xiaomi Pad 7s Pro) மாடலை 2025 ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது 14-இன்ச் ஓஎல்இடி பேனல் மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட 3 மாடல்களுமே முதலில் சீனாவில் அறிமுகமாகும்; இந்திய அறிமுகங்கள் குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். புதிதாக அறிமுகமான ஆப்பிள் ஐபேட் மாடல்களின் விலை விவரங்கள் இதோ:
ஆப்பிள் ஐபேட் ஏர் 11-இன்ச் (வைஃபை ஒன்லி) வேரியண்ட்டின் விலை விவரங்கள் :
128 ஜிபி - ரூ.59,900
256 ஜிபி - ரூ.69,900
512 ஜிபி - ரூ.89,900
1 டிபி - ரூ.1,09,900
ஆப்பிள் ஐபேட் ஏர் 11-இன்ச் (வைஃபை + செல்லுலார்) வேரியண்ட்டின் விலை விவரங்கள்:
128 ஜிபி - ரூ.74,900
256 ஜிபி - ரூ.84,900
512 ஜிபி - ரூ.1,04,900
1டிபி - ரூ.1,24,900
ஆப்பிள் ஐபேட் ஏர் 13-இன்ச் (வைஃபை ஒன்லி) வேரியண்ட்டின் விலை விவரங்கள்:
128 ஜிபி - ரூ.79,900
256 ஜிபி - ரூ.89,900
512 ஜிபி - ரூ.1,09,900
1டிபி - ரூ.1,29,900
ஆப்பிள் ஐபேட் ஏர் 13-இன்ச் (வைஃபை + செல்லுலார்) வேரியண்ட்டின் விலை விவரங்கள்:
128 ஜிபி - ரூ.94,900
256 ஜிபி - ரூ.1,04,900
512 ஜிபி - ரூ.1,24,900
1டிபி - ரூ.1,44,900
ஏ16 சிப் உடனான ஆப்பிள் ஐபேட் மாடலின் வைஃபை ஒன்லி வேரியண்ட்டின் விலை:
128 ஜிபி - ரூ.34,900
256 ஜிபி - ரூ.44,900
512 ஜிபி - ரூ.64,900
ஏ16 சிப் உடனான ஆப்பிள் ஐபேட் மாடலின் வைஃபை + செல்லுலார் வேரியண்ட்டின் விலை:
128 ஜிபி - ரூ.49,900
256 ஜிபி - ரூ.59,900
512 ஜிபி - ரூ.79,900


Click it and Unblock the Notifications








