Home
News

Jio கஸ்டமர்களின் கோபத்தை தணிக்க 3 புதிய திட்டங்கள் அறிமுகம்!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) 3 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 3 ப்ரீபெய்ட் திட்டங்களுமே டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் போன்ற வழக்கமான நன்மைகளுடன் சேர்த்து, கூடுதலாக ஓடிடி (ஓவர்-தி-டாப்) பலன்களையும் வழங்குகின்றன. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டண உயர்வுகளுக்கு பிறகு ஓடிடி உடன் தொகுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் ஜியோ சேவையின் கீழ் இருந்து நீக்கப்பட்டன. தற்போது "அவ்வகை திட்டங்கள்" புதிய விலைகளில் மீண்டும் (Jio's New Plans with OTT Benefits) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிதாக சேர்க்கப்பட்ட திட்டங்களின் - ரூ.329, ரூ.949 மற்றும் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகும். சுவாரசியமாக, சில நாட்களுக்கு முன்பு வரையிலாக ஜியோ நிறுவனத்தின் கீழ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் எந்த ப்ரீபெய்ட் திட்டமும் இல்லை. ஆனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த 3 திட்டங்களில் ஒன்று அதை வழங்குகிறது. அதென்ன திட்டம்? ரூ.329, ரூ.949 மற்றும் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகள் என்னென்ன? இதோ விவரங்கள்:

Jio கஸ்டமர்களின் கோபத்தை தணிக்க 3 புதிய திட்டங்கள் அறிமுகம்!

1. ரிலையன்ஸ் ஜியோ ரூ.329 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ஜியோவின் ரூ.329 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதலாக ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) நன்மையும் கிடைக்கும். உஇந்த திட்டத்தில் ஜியோவின் 5ஜி சலுகை எதுவும் இல்லை.

2. ரிலையன்ஸ் ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டம் தான் 90 நாட்கள் அல்லது 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது. மேலும் இந்த திட்டம் ஜியோவின் 5ஜி வெல்கம் ஆபரையும் வழங்கும்.

3. ரிலையன்ஸ் ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதலாக ஜியோடிவி மொபைல் ஆப்ஸ் மூலம் சோனிலிவ் மற்றும்ஜீ5 ஆகிய ஓடிடி சந்தாக்களும் கிடைக்கும். இந்த திட்டத்துடன் ஜியோ அன்லிமிட்ட் 5ஜி சலுகையும் தொகுக்கப்பட்டுள்ளது.

2024 ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த விலை உயர்விற்கு பின்னர்.. பேஸிக் பிளான் ஆன ரூ.179 திட்டமானது ரூ.199 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதே போல ரூ.455 ரீசார்ஜ் ரூ.509 ஆகவும், ரூ.1799 ரீசார்ஜ் ரூ.1999 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜியோவின் முக்கிய போட்டியாளர் ஆன பார்தி ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ் ரூ.449 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ்ரூ.449 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து ரூ.479 ரீசார்ஜ் ரூ.579 ஆகவும், ரூ.549 ரீசார்ஜ் ரூ.649 ஆகவும், ரூ.719 ரீசார்ஜ் ரூ.859 ஆகவும், ரூ.839 ரீசார்ஜ் ரூ.979 ஆகவும், ரூ.2999 ரீசார்ஜ் ரூ.3599 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், கடைசியாக ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 New Jio Plans Introduced Silently Price Rs 329 Rs 949 and Rs 1049
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X