Home
News

உடனே Settings-ல் செக் பண்ணுங்க.. 2 OnePlus போன்களில் மட்டும்.. சைலன்ட் ஆக சேர்க்கப்பட்ட 3 புதிய AI அம்சங்கள்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது முதல் ஏஐ அம்சமான ஏஐ ஏரேசரை (AI Eraser) கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இது புகைப்படங்களில் உள்ள தேவையில்லாத பொருட்கள் அல்லது நபர்கள் அல்லது விஷயங்களை ஏஐ உதவியுடன் "இருந்த இடம் தெரியாமல்" அகற்ற உதவும் மிகவும் பயனுள்ள ஒரு அம்சமாகும். இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனம் மேலும் 3 புதிய ஏஐ அம்சங்களை "சைலன்ட் ஆக" அறிமுகம் செய்துள்ளது. அதென்ன அம்சங்கள்? அவைகள் எந்தெந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அணுக கிடைக்கும்? அவைகள் செட்டிங்ஸ் வழியாக அணுகுவது எப்படி? இதோ விவரங்கள்:

அதென்ன அம்சங்கள்? ஒன்பிளஸ் நிறுவனம் மிகவும் அமைதியான முறையில், ஒரு கம்யூனிட்டி போஸ்ட் (Community post) வழியாக, வெறும் 2 ஸ்மார்ட்போன்களில் மட்டும் 3 புதிய ஏஐ அம்சங்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த அம்சங்கள் - ஏஐ ஸ்பீக் (AI Speak), ஏஐ சம்மரி (AI Summary), ஏஐ ரைட்டர் (AI Writer) ஆகும்.

2 OnePlus போன்களில் மட்டும் சேர்க்கப்பட்ட 3 புதிய AI அம்சங்கள்!

பெயர்களை வைத்தே இந்த ஏஐ அம்சங்களின் பயன்களை மிகவும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். ஏஐ ஸ்பீட் என்பது ப்ரவுஸர்ககள் மற்றும் கூகுள் நியூஸ் போன்ற ஆப்களில் உள்ள கட்டுரைகளை வாசித்து காட்டும் ஒரு அம்சமாகும். இதன்கீழ் பிளேபேக் ஸ்பீடை சரிசெய்வது, வாக்கியங்களை மாற்றுவது, ரீப்ளே போன்ற செயல்பாடுகளும் அணுக கிடைக்கும். கூடவே ஆண் மற்றும் பெண் குரல்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்யும் விருப்பமும் இருக்கும்.

அடுத்ததாக உள்ள ஏஐ சம்மரி ஆனது இணையத்தில் அணுக கிடைக்கும் மிகவும் நீளமான தகவல்களின் சுருக்கங்களை உருவாக்கும் அம்சமாகும். உங்களுக்கு கிடைக்கும் ரிசல்ட்டை காப்பி செய்வது, ஷேர் செய்வது, சேவ் செய்வது போன்ற விருப்பங்களும் கிடைக்கும். இதுதவிர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்-ஐ ஃபைல் டாக்கில் சேமிக்கவும் முடியும்.

கடைசியாக உள்ள ஏஐ ரைட்டர் ஆனது இமெயில்கள், சமூக ஊடக போஸ்ட்கள் மற்றும் ரிவ்யூக்கள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு டெக்ஸ்ட்-ஐ உருவாக்க உதவும் ஒரு அம்சமாகும். இந்த ஏஐ அம்சமானது, டெக்ஸ்ட் எழுதக்கூடிய ஆதரவு கொண்ட ஆப்களுக்குள் தானாகவே அணுக கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ஏஐ சம்மரி மற்றும் ஏஐ ரைட்டர் வழங்கும் ரிசல்களில் திருப்தி அடையவில்லை என்றால், அதை ரிஜெனரேட்டும் செய்யலாம்.

இந்த மூன்று ஏஐ புதிய அம்சங்களையும் அணுகுவது எப்படி? ஏஐ ஸ்பீக், ஏஐ சம்மரி மற்றும் ஏஐ ரைட்டர் ஆகிய 3 அம்சங்களும் சைட்பாரில் நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஏஐ டூல்கிட்டில் அணுக கிடைக்கின்றன. இந்த அம்சங்களை அணுகுவதற்கு, செட்டிங்ஸ் > அக்ஸசபிலிட்டி & கன்வீனியன்ஸ் (Settings > Accessibility & Convenience) என்பதில் காணக்கூடிய ஸ்க்ரீன் ரிகக்னைசேஷனை எனேபிள் செய்ய வேண்டும் என்று ஒன்பிளஸ் கூறுகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 ஒன்பிளஸ் ஏஐ அம்சங்களும் எந்தெந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும்? முன்னரே குறிப்பிட்டப்படி இந்த 3 புதிய அம்சங்களும் 2 ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒன்று - இந்தியா, ஆசியா-பசிபிக், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா, தெற்காசியா, ரஷ்யா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் கிடைக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போன்.

இரண்டாவது - இந்தியாவில் மட்டுமே பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) ஸ்மார்ட்போன். ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் உரிமையாளர்கள் புதிய ஏஐ டூல்களை பெறுவதில் இருந்து ஏன் விலக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி எந்த விவரங்களும் இல்லை. இது சோதனை கட்டமாக இருக்கலாம்; ஒன்பிளஸ் நிறுவனம் அதன் மிட்ரேன்ஜ் மாடல்களில் புதிய அம்சங்களை சோதிக்கும் சாத்தியமும் உள்ளது. விரைவில் இந்த அம்சங்கள் ஒரு பரந்த வெளியீட்டை காணலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 New AI Features AI Speak AI Summary AI Writer Silently Added in 2 OnePlus Nord Smartphone Settings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X