கேபிள் டிவி, DTH-க்கு குட்பை.. மாசத்துக்கு ரூ.133 போதும்.. 20 ஓடிடி, 300 லைவ் TV சேனல்கள்.. Dor Play அறிமுகம்!
உங்களுடைய வீட்டில் "எரிச்சலூட்டும்" கேபிள் டிவி கனெக்ஷன் (Cable TV Connection) இருந்தால், அதை எப்போது 'கட்' செய்யலாம் என்கிற எண்ணத்தில் நீங்கள் இருந்தால்.. இதுவே அதற்கான சரியான நேரமாக இருக்கலாம். ஏனென்றால், ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்காக டோர் பிளே ஆப் (Dor Play App) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டோர் பிளே ஆப்பின் கீழ் 20-க்கும் மேற்பட்ட ஓடிடி இயங்குதளங்கள் (20+ OTT platforms) மற்றும் 300-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களுக்கான (300+ Live TV channels) அணுகல் கிடைக்கிறது. அதாவது பயனர்கள் ஒவ்வொரு ஸ்ட்ரீமிங் சேவை (Streaming Service) அல்லது சேனலுக்கும் (Channel) தனித்தனியாக ரிஜிஸ்டர் செய்து அல்லது சந்தா செலுத்துவதற்கு பதிலாக.. மாதம் ரூ140 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் டோர் பிளே சேவையில் இணையலாம்.

டோர் பிளே ஆப்பின் விலை விவரங்கள் (Dor Play App Subscription Price Details): இந்தியாவில் டோர் பிளே ஆப்பின் சந்தாவானது மூன்று மாத சுழற்சி (Three month cycle.) கட்டணத்தின் கீழ் கிடைக்கிறது. அதாவது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ரூ.399 கட்டணம் செலுத்த வேண்டும். இதை மூன்றாக பிரித்தால், அதாவது ஒரு மாத கட்டணமாக பிரித்தால், நீங்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.133 கட்டணம் செலுத்துவத்துவதற்கு சமம்.
இந்த ஆப் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பிரத்தியேகமாக அணுகக்கூடியதாக இருக்கும். ஐஓஎஸ் பயனர்கள் இதை ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) வழியாகவும், ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play store) வழியாகவும் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
டோர் பிளே ஆப்பிற்கான சந்தா, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) வழியாக கிடைக்கிறது. இதங்கீழ் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட கூப்பன் குறியீட்டை (Unique coupon code) பெறுவார்கள். உங்கள் ஸ்மார்ட்போனில் டோர் பிளே ஆப்பை இன்ஸ்டால் செய்து உங்களுடைய தனிப்பட்ட மொபைல் நம்பரை (Personal Mobile Number) கொண்டு ரிஜிஸ்டர் செய்யும் போது, உங்களுக்கு கொடுக்கப்பட்ட தனிப்பட்ட கூப்பன் குறியீடு தேவைப்படும்.
முன்னரே குறிப்பிட்டபடி, டோர் பிளே ஆப்பின் கீழ் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play), ஜியோ டிவி (JioTV,) டாடா பிளே பிங்கே (Tata Play Binge) உட்பட மொத்தம் 20 க்கும் மேற்பட்ட ஓடிடி இயங்குதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும் 300 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களுக்கான அணுகல்களும் நுகர்வோருக்குக் கிடைக்கும்.
டோர் பிளே ஆப்பில் யுனிவர்சல் சேர்ச் (Universal Search) அம்சம் உள்ளது. இது கன்டென்ட்-ஐ கண்டறிவதை எளிதாக்குவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் பயனர்களை ஒரே இடத்தில் இருந்தபடியே பல தளங்களில் உள்ள கன்டென்ட்களை தேட அனுமதிக்கிறது. டோர் பிளே ஆப்பில் உள்ள டிரெண்டிங் & அப்கம்மிங் பிரிவுகள் (Trending & Upcoming Sections) சமீபத்திய மற்றும் மிகவும் பிரபலமான கன்டென்ட்-ஐ பற்றி பயனர்களுக்கு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்திற்காக, டோர் பிளே ஆப்பில் ஸ்மார்ட் ஃபில்டர்ஸ்-ம் (Smart Filters) உள்ளன. இது மகிழ்ச்சி, ஏக்கம், சாகச உணர்வு மற்றும் பலவற்றின் அடிப்படையில் கன்டென்ட்களை கண்டறிய உதவுகிறது. மனநிலை அடிப்படையிலான இந்த ஃபில்டர்ஸ் மூலம், பயனர்களின் விருப்பமான மனநிலைக்கு ஏற்ற கன்டென்ட்-ஐ டோர் பிளே ஆப் பரிந்துரைக்கலாம். பயனர்கள் தங்கள் விருப்பங்களை இன்னும் துல்லியமாக தெரிவிக்க, தங்களுக்கு பிடித்த வகை அல்லது தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மூலம் கன்டென்ட்-ஐ ஃபில்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








