வெறும் ரூ.151 க்கு.. 3 மாசத்துக்கு மஜா.. ஓயாமல் OTT-ல் படம் பார்க்கலாம்.. Vodafone-ன் 3 அசத்தல் திட்டங்கள்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) என்கிற 2 ஜாம்பவான்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு தத்தளித்தாலும் கூட.. 5ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்ய நிதி இல்லாமல் தவித்தாலும் கூட.. வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ளும் நோக்கத்தின் கீழ்.. புதிய கஸ்டமர்களை ஈர்க்கும் திட்டங்களை வழங்குவதில் எந்த குறையும் வைப்பதில்லை. அப்படியான ஒரு 3 திட்டங்களை பற்றித்தான் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.
வோடாபோன் ஐடியா நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) மற்றும் சோனி லைவ் ஆகிய ஓடிடி நன்மைகளை வழங்கும் 3 டேட்டா வவுச்சர்களை கொண்டுள்ளது. சுவாரசியமாக இந்த 3 திட்டங்களுமே இந்தியா முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. அதென்ன திட்டங்கள்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன நன்மைகளை வழங்குகின்றன? இதோ விவரங்கள்:

முதல் திட்டம் - வோடாபோன் ஐடியா ரூ.151 டேட்டா வவுச்சர். இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு மொத்தம் 4 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். கூடவே 3 மாதங்களுக்காண டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும். இரண்டாவது திட்டம் - வோடாபோன் ஐடியா ரூ.169 டேட்டா வவுச்சர். அதாவது நீங்கள் ரூ.18 அதிகமாக செலுத்தினால், ரூ.169 திட்டத்தின் கீழ் உங்களுக்கு அதே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்ருக்கான சந்தா 3 மாதங்களுக்கு கிடைக்கும். ஆனால் டேட்டா பலன் 4 ஜிபி டேட்டாவில் இருந்து 8 ஜிபி என இரட்டிப்பாகும்.
மேற்கண்ட 2 திட்டங்களுமே உங்களுடைய மெயின் ரீசார்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது உங்களிடம் ஏற்கனவே ஒரு ஆக்டிவ் பிளான் இருந்தால் மட்டுமே இந்த திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்ய முடியும் மற்றும் ஓடிடி நன்மைகளுக்கான பிரத்யேக வேலிடிட்டியானது டேட்டா வவுச்சருக்கும் அதன்கீழ் கிடைக்கும் டேட்டாவிற்கும் பொருந்தாது.
இந்த பட்டியலில் கடைசியாக உள்ள திட்டம் - வோடாபோன் ஐடியா ரூ.95 டேட்டா வவுச்சர் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் 14 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் உங்களுக்கு 4 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை இதன்கீழ் 28 நாட்களுக்கான சோனி லைவ் மொபைல் சந்தா (Sony LIV Mobile Subscription) முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
வோடாபோன் ஐடியாவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்ற டேட்டா பிளான்களை பொறுத்தவரை.. ரூ.48 திட்டமானது 3 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.145 திட்டமானது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.22 திட்டமானது 1 நாள் என்கிற வேலிடிட்டி உடன் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ரூ.89 திட்டமானது 7 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.208 திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் டெய்லி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.139 திட்டமானது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.33 திட்டமானது 2 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ரூ.348 திட்டமானது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.488 திட்டமானது 56 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் 100 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.1189 திட்டமானது 356 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








