30 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை: வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி.!

|

வாட்ஸ்அப் நிறுவனத்தின் ஒவ்வொரு புதிய அம்சங்களும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் இந்நிறுவனம் புதிய புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் 30 லட்சம் பயனாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்படுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மான வாடிக்கையாளர்களை

அதாவது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனங்கள், புகார்கள் மற்றும் அது தொடர்பாக நடவடிக்கைகளை 45 நாட்களுக்கு ஒருமுறை வெளியிட வேண்டும்.

ற்போது வாட்ஸ்அப் நிறுவனம்

எனவே தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஜூலை 16 ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை 30,27,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்காலகட்டத்தில் 594 புகார்கள் வந்ததாகவும், 74 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த 5 புதிய திட்டங்கள்.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த 5 புதிய திட்டங்கள்.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில்

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்த அம்சம் எப்படி வேலைசெய்யும் என்றால், நாம் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பெறுநரால் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்.

ஒரே சீரிஸ் மொத்தமும் க்ளோஸ்- ஹாட்ஸ்டாரை அன்-இன்ஸ்டால் செய்யும் மக்கள்: அதில் அப்படி என்ன இருக்கு?ஒரே சீரிஸ் மொத்தமும் க்ளோஸ்- ஹாட்ஸ்டாரை அன்-இன்ஸ்டால் செய்யும் மக்கள்: அதில் அப்படி என்ன இருக்கு?

ட்ஸ்அப் வியூ ஒன்ஸ் அம்சம் கிட்டத்த

அதாவது வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் அம்சம் கிட்டத்தட்ட காணாமல் போகும்(Disappearing) மெசேஜ்களைப் போன்றது தான். குறிப்பாக இதன் மூலம் அனுப்பப்பட்ட புகைப்படங்களை ரீசரிவர் ஒருமுறை பார்த்தவுடன் அது சாட்டில் இருந்து மறைந்து விடும்.

SpaceX மூலம் விண்வெளிக்கு சென்ற எறும்புகள்.. எதற்காக எறும்புகள் இறால் உடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?SpaceX மூலம் விண்வெளிக்கு சென்ற எறும்புகள்.. எதற்காக எறும்புகள் இறால் உடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?

ப் செயலியில் பயனர்கள் வியூ ஒன்ஸ்

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் வியூ ஒன்ஸ் என்ற விருப்பத்தை இயக்கியவுடன் அனுப்பப்பட்ட வீடியோ அல்லது புகைப்படங்கள் மற்றவர்களால் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். ஏற்கனவே இன்ஸ்டா பக்கத்தில் இதேபோன்று வேனிஷ் மோட் எனும் ஒரு அம்சம்உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Vivo X70 மாடல்களை பயன்படுத்தி சினிமாவே எடுக்கலாம் போலயே? அப்படியொரு கேமரா வசதி.! அறிமுகம் தேதி எப்போது?Vivo X70 மாடல்களை பயன்படுத்தி சினிமாவே எடுக்கலாம் போலயே? அப்படியொரு கேமரா வசதி.! அறிமுகம் தேதி எப்போது?

வியூ ஒன்ஸ் மீடியா ஃபைல்களை

மேலும் இந்த வியூ ஒன்ஸ் மீடியா ஃபைல்களை பெறுநரால் ஒருமுறை மட்டும் தான் பார்க்க முடியும். மீண்டும் அதைப் பார்க்க விரும்பினால் அனுப்புனர் அதை மீண்டும் ஒரு முறை அனுபப்பினால் மட்டுமே பார்க்க முடியும். பின்பு வியூ ஒன்ஸ் மீடியா ஃபைல்களை அனுப்பவோ, அதை சேமிக்கவோ முடியாது. குறிப்பாக நீங்கள் 14 நாட்களுக்குள் வியூ ஒன்ஸ் ஃபைலை திறக்காவிட்டால் அது தானாகவே சாட்டில்
இருந்து மறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வியூ ஒன்ஸ் அம்சத்தை பயன்படுத்தினாலும் கூட புகைப்படத்தை பெறுநரால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியும் மற்றும் வீடியோவை ஸ்க்ரீன்ரெக்கார்டிங் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
3 million WhatsApp accounts banned in India: What is the reason?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X