பூமிக்கு வந்திருப்பாங்களோ?- 3மீட்டர் வளையம், உருளை குண்டு: வானத்தில் இருந்து இந்தியாவில் விழுந்த மர்ம பொருள்!
மகாராஷ்டிராவில் வானத்தில் இருந்து விழுந்த 3 மீட்டர் உலோக வளையம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை தெஹ்சிலின் பவன்பூர் கிராமத்தில் குண்டு போன்ற பொருள் ஒன்றும், 3 மீட்டர் அளவிலான உலகோம் சிண்டேவாஹி தாலுகாவில் உள்ள லட்போரி கிராமத்திலும் கண்டுபிடிக்கப்பட்டது.
வைரலான வீடியோ காட்சி
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தின் இரண்டு கிராமங்களில் இருந்து ஒரு உலோக வளையம் மற்றும் குண்டு போன்ற உருளை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து நீண்ட நேரம் ஒளியுடனான ஒரு மர்ம பொருள் பயணிக்கும் வீடியோ காட்சியும் பெரிதளவு வைரலானது.

3 மீட்டர் வளையம்
சனிக்கிழமை இரவு சிந்தேவாஹி கிராமத்தில் 3 மீட்டர் வளையம் ஒன்று கிடப்படதாக தகவல் கிடைத்தது. அந்த பொருள் மிகவும் சூடாக இருந்தது, வானத்தில் இருந்து விழுந்தது போல் அந்த பொருள் இருந்தது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை மற்றொரு கிராமத்தில் இருந்து ஒரு உருளையான குண்டு போன்ற பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என சந்திராபூர் தாசில்தார் கணேஷ் ஜக்டேல் ஏஎன்ஐ செய்தித் தளத்தில் குறிப்பிட்டார்.
உருளை போன்ற பொருள், 3 மீட்டர் அளவுள்ள ரிங்
சந்திராபூர் மாவட்ட ஆட்சியர் அஜய் குல்ஹானே கூறுகையில், சனிக்கிழமை இரவு சிந்தேவாஹி தாலுகாவில் உள்ள லட்போரி கிராமத்தில் சுமார் 3 மீட்டர் அளவுள்ள ரிங் ஒன்றும் ஞாயிற்றுக்கிழமை காலை தெஹ்சிலின் பவன்பர் கிராமத்தில் உருளை போன்ற பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. உலோக ரிங் முன்பு முன்பு அந்த இடத்தில் இருந்ததில்லை, வானத்தில் இருந்து விழுந்திருக்கலாம். 1 முதல் 1.5 அடி விட்டம் கொண்ட உருளை போன்ற பொருள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
வேறு ஏதேனும் சிதறிக் கிடக்கிறதா என ஆய்வு
மும்பையில் உள்ள பேரிடம் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை குழு சந்திராபூர் மாவட்டத்திற்கு சென்று பொருட்களை சரிபார்க்கும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார். மேலும் இதுபோன்ற பொருட்கள் வேறு ஏதேனும் சிதறிக் கிடக்கின்றவா என்பதை கண்டறிய மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் இளநிலை வருவாய்த்துறை அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.
அடையாளம் தெரியாத எரியும் பொருள்
சனிக்கிழமையன்று, வளிமண்டலத்தில் இருந்து அடையாளம் தெரியாத எரியும் பொருட்களின் வீடியோக்களை பலர் சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும் மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களிலும் எரியும் ஒளிக் கோடுகள் காணப்பட்டன. மர்மமான ஒளியானது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் விண்கற்களாக இருக்கலாம் அல்லது செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு பிரிக்கப்படும் ராக்கெட் பூஸ்டர்களின் துண்டுகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கணித்தனர். இது செயலிழந்த ராக்கெட் குப்பைகளாகவோ, செயற்கைக்கோள் துண்டுகளாகவோ இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடலில் கிடந்த மர்மப் பந்து
இதுபோன்ற சில பொருட்கள் ஆங்காங்கே கண்டறியப்பட்டு வருகிறது. கடந்தாண்டு கடற்கரையில் மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ உலோக பந்து கண்டுபிடிக்கப்பட்டது. உலோக பந்து தோற்றம் மற்றும் அது எப்படி கடற்கரைக்கு வந்தது என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும் இது செயற்கைகோள் அல்லது விண்கலத்தின் பாகமாக இருக்கலாம் என விண்வெளி வல்லுநர்கள் தெரிவித்தனர். கடற்கரை நடுவில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத உலோக பந்து பலரின் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும் அதன் குறித்து முழுமையாக அறியப்படாத நிலையில் இந்த உலோக பந்து குறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

41 கிலோ எடையுள்ள உலோக பந்து
பஹாமாவில் உள்ள ஹார்பர் தீவில் பிரிட்டிஷ் பெண் மனோன் கிளார்க் என்பவர் உலோக பந்து ஒன்று மணலில் இருந்து வெளியேறுவதை கண்டார். சுமார் 41 கிலோ எடையுள்ள இந்த உலோக பந்தின் மேற்பரப்பில் ரஷ்ய உரை ஒன்று இருந்தது. இந்த உலோக பொருள் மிகவும் கனமாக இருந்ததன் காரணமாக அந்த பொருளை அவரால் நகர்த்த முடியவில்லை. இதையடுத்து இந்த உலோக பொருளை புகைப்படம் எடுத்த அந்த பெண் தனது குடும்பத்தார் மற்றும் பிறரிடம் தெரிவித்தார். பின் இந்த பொருள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
Image Source: Social Media


Click it and Unblock the Notifications