Home
News

கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் 3 ஸ்பெஷல் ரீசார்ஜ்களை நிரந்தரமாக்கிய BSNL!

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்கிற கட்டுப்பாட்டுடன், அதாவது லிமிடெட் டைம் திட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்ட 3 ஸ்பெஷல் பிஎஸ்என்எல் (BSNL) பிளான்கள் ஆனது தற்போது நிரந்தரமாக்கப்பட்டு உள்ளன. அதென்ன திட்டங்கள்? என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் ஆனது பொங்கல், தீபாவளி, ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் சிறப்பு திட்டங்களை (Special Plans) அறிமுகம் செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளது. மேலும் அந்த திட்டங்கள் ஆனது குறிப்பிட்ட சில காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்படும். எடுத்துக்காட்டிற்கு ரம்ஜான் திருநாளிற்காக அறிமுகமான திட்டம் அடுத்த 30 நாட்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவிக்கப்படும்.

அதிக நன்மைகளை வழங்கும் 3 ஸ்பெஷல் ரீசார்ஜ்களை நிரந்தரமாக்கிய BSNL!

அப்படியாக கடந்த 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின் (Independence Day) போது அறிமுகப்படுத்தப்பட்ட 3 ஸ்பெஷல் பிஎஸ்என்எல் திட்டங்கள் ஆனது, தற்போது நிரந்தரமாக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த திட்டங்களின் கிடைக்கும் தன்மை (Availability) நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இனிமேல் பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்யும் வரையிலாக (அதாவது இந்த 3 திட்டங்களும் அதிகாரபூர்வமாக நீக்கப்படும் வரையிலாக) பயனர்கள் இதை இஷ்டம் போல ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

நாம் இங்கே பேசும் 3 ஸ்பெஷல் திட்டங்கள் ஆனது ரூ.275, மறுபடியும் ரூ.275 மற்றும் ரூ.775 ரீசார்ஜ்கள் ஆகும். இந்த மூன்றுமே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் பிராட்பேண்ட் (Fiber broadband) சேவைகளின் கீழ் அணுக கிடைக்கும் பாரத் ஃபைபர் (Bharat Fibre) திட்டங்கள் ஆகும். மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் சற்றே கூடுதல் நன்மைகளை வழங்கும் இந்த 3 திட்டங்களுமே 75 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகின்றன.

ரூ.275 மதிப்பிலான 2 திட்டங்களையும் பொறுத்தவரை, ஒன்று 60 Mbps என்கிற இண்டர்நெட் ஸ்பீடை வழங்குகிறது; இன்னொன்று 30 Mbps என்கிற இணைய வேகத்தை வழங்குகிறது. இருப்பினும் இந்த இரண்டு திட்டங்களுமே 3.3TB என்கிற அளவிலான (அதாவது 3300ஜிபி என்கிற) டேட்டாவை வழங்குகின்றன. குறிப்பிட்ட டேட்டா லிமிட்டை தாண்டியதும் இந்த திட்டங்களின் இண்டர்நெட் ஸ்பீட் 4 Mbps ஆக குறைக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டேட்டா நன்மைகளை தவிர்த்து, இந்த 2 திட்டங்களும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் வழங்கும். மறுகையில் உள்ள BSNL ரூ.775 திட்டமானது 100 எம்பிபிஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் மொத்தம் 2TB என்கிற அளவிலான டேட்டாவை வழங்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டம் பல வகையான ஓடிடி (OTT) நன்மைகளையும் வழங்கும். இதன் கீழ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், லயன்ஸ்கேட், ஷீமாரூ, ஹங்காமா, சோனிலிவ், ஜீ5, வூட் சந்தாக்கள் அணுக கிடைக்கும்

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த மூன்று திட்டங்களுமே 75 நாட்கள் செல்லுபடியாகும், அதாவது ஒரே ஒரு ரீசார்ஜ்ஜில் இரண்டரை மாதங்களுக்கான வேலிடிட்டியை வழங்கும். தற்போது வரையிலாக, இந்த 3 திட்டங்களுக்கும் எந்த வகையான "கடைசி தேதியும்" அறிவிக்கப்படவில்லை. அதற்காக இந்த 3 திட்டங்களும் அடுத்த 365 நாட்களுக்கும் அணுக கிடைக்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்த திட்டங்கள் எப்போது வேண்டுமானாலும் பிஎஸ்என்எல் சேவையில் இருந்து நீக்கப்படலாம்.

ஆக, நீங்கள் ஏற்கனவே ஒரு பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் யூசராக இருந்தாலும் சரி, அல்லது BSNL நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைகளை மலிவு விலையில் முயற்சிக்க விரும்பும் ஒரு புதிய வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, நாம் மேற்கண்ட மூன்று திட்டங்களில் ஏதேனும் ஒன்றை - கண்களை மூடிக்கொண்டு - தேர்வு செய்யலாம். ஏனென்றால் 75 நாட்களுக்கு 60 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்கும் ரூ.275 திட்டமானது வேறு எந்த நிறுவனத்திடமும் இல்லாத ஒரு பிராட்பேண்ட் திட்டமாகும்.

Best Mobiles in India

English summary
3 Limited Time Recharges From BSNL Changed Into Permanent Plans Check Rs 275 and Rs 775 Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X