Home
News

Google Maps நம்பி சென்றதால் நடந்த விபரீதம்.. 3 பேர் உயிரிழந்த பரிதாபம்.. நடந்தது இதுதான்..

கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை இந்தியா முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து செல்வோருக்கு மிகப் பெரிய உதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். ஆனால் இந்த கூகுள் மேப்ஸ் செயலியை ஒரு சில இடங்களில் கவனமான பயன்படுத்த வேண்டும்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் கூகுள் மேப்ஸ்-ஐ நம்பி உடைந்த பாலத்தின் மீது காரை ஓட்டிச்சென்று, ஆற்றில் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சோக சம்பவம் சனிக்கிழமை அன்று நிகழ்ந்தது.

கூகுள் மேப்ஸ் நம்பி சென்றதால் நடந்த விபரீதம்.. நடந்தது இதுதான்..

அதாவது வாகன ஓட்டிகள் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்கு சென்றுள்ளனர். அதுவும் திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர். அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களை உடைந்த மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது. அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், சுமார் 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்துள்ளது.

அதேபோல் விபத்து நடந்த போது போதிய சூரிய வெளிச்சம் இல்லை என்பதும் ஒரு காரணமாகக் கூறப்பட்டுள்ளது. சேதமடைந்த காரையும், இறந்த கிடந்த அந்த மூன்று பேரையும் உள்ளூர் வாசிகள் கண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணை கூறுகிறது.

என்ன தான் அதிநவீன தொழில்நுட்பம் இருந்தால் அதை கவனமாகத் தான் பயன்படுத்த வேண்டும். முன்பின் தெரியாத இடத்துக்குச் செல்லும் போது கூகுள் மேப்ஸ் மற்றும் வழியில் வரும் உள்ளூர் மக்களிடம் சரியான பாதைகளைக் கேட்டு தெரிந்து கொண்டு அதன்பின்பு பயணம் செய்வது மிகவும் நல்லது. அதேசமயம் கூகுள் மேப்ஸ் செயலியில் கூட அவ்வப்போது பயனுள்ள புதிய அம்சங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. மேலும் இந்த செயலியில் உள்ள சில முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

வேக எச்சரிக்கை (Speed ​​Alert): அதாவது போக்குவரத்து விதியில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை விட வேகமாக வாகனம் ஓட்டினால், கூகுள் மேப்ஸின் வேக எச்சரிக்கை உங்களை எச்சரிக்கும். இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய கூகுள் மேப்ஸ் செயலியில் செட்டிங்க்ஸ் பிரிவுக்குச் சென்று வேக எச்சரிக்கையை ஆன் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறுகலான பாதையைத் தவிர்க்கவும் (Avoiding Narrow Roads): நீங்கள் வழக்கமான பாதையில் செல்லாமல் ஒரு புதிய பாதையில் செல்லும் போது சில நேரம் குறுகலான பாதைகளில் நாம் மாட்டிக் கொள்ள நேரிடும். இதனைத் தவிர்க்க தான் சமீபத்தில் ஒரு புதிய வசதியைக் கூகுள் மேப்ஸ் கொண்டுவந்தது. அதாவது இந்த வசதியின் மூலம் நாம் செல்லும் பாதையில் குறுகலான இடம் இருக்கிறதா என்பதைக் கணித்து மேப்ஸ் நமக்குச் சொல்லும்.

கூகுள் மேப்ஸ் நம்பி சென்றதால் நடந்த விபரீதம்.. நடந்தது இதுதான்..

குறிப்பாக இந்த வசதியை ஏஐ (AI) மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறது கூகுள். அதாவது ஏஐ வசதியானது சாட்டிலைட் மேப்ஸ், ஸ்ட்ரீட் வியூ படங்கள் மற்றும் ஒரு சாலை குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரித்து அது குறுகலான பாதையா இல்லையா என்பதனை பயனாளர்களுக்குக் கணித்துச் சொல்லுமாம். மேலும் இந்த வசதி இந்தியாவில் சில முக்கியமான நகரங்களில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நகரங்களிலும் அறிமுகமாகும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிளைஓவர் அலர்ட் (Flyover Alerts): நெரிசல் அதிகமாக உள்ள நகரச் சாலைகளில் பயணம் செய்யும் போது, ஒரு ஃபிளைஓவர் வந்தால் மேலே செல்ல வேண்டுமா அல்லது கீழே செல்ல வேண்டுமா என்ற குழப்பம் வரும். சில சமயங்களில் இந்த சிறிய தவறான முடிவால் பல கிமீ கூடுதல் பயணம் செய்த நிகழ்வுகளும் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். இந்த மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்க கூகுள் மேப்ஸ் செயலியில் ஃபளைஓவர் அலர்ட் என்ற வசதியைச் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது கூகுள். இந்த ஃபிளைஓவர் வசதி மூலம் நாம் மேலே செல்ல வேண்டுமா அல்லது ஃபிளைஓவருக்கு கீழே செல்ல வேண்டுமா என்பதனை மேப்ஸே கூறிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்க.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 killed in Uttar Pradesh after driving on incomplete flyover using Google Maps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X