Home
News

விட்டுக்கொடுத்த அம்பானி.. மாதம் ரூ.112-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. கோபத்தை மறந்த Jio கஸ்டமர்ஸ்.. ஆனால் செக்!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் நம்ப முடியாத சலுகைகளை கொடுத்து அதன் கஸ்டமர்களை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைள் என்று அனைத்தும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மலிவாக கிடைக்கின்றன. ஜூலை 3ஆம் தேதிக்கு பிறகு இந்த திட்டங்களின் சலுகைகள் ஜியோ கஸ்டமர்களின் கோபத்தை குறைத்து இருக்கிறது. ஆனால், அதில் ஒரு செக் இருக்கிறது. விவரம் இதோ.

ஜியோ ரூ 123 திட்ட விவரங்கள் (Jio Rs 123 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 300 எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கிறது. இந்த 14 ஜிபி டேட்டா சலுகை வருகிறது.

விட்டுக்கொடுத்த அம்பானி.. மாதம் ரூ.112-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி!

இந்த 14 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சேவையை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகள் எல்லாமே போக, ஜியோ ரூ 123 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோ சாவன் (Jio Saavn), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகியவற்றின் சந்தா கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 234 திட்ட விவரங்கள் (Jio Rs 234 Plan Details): இந்த ஜியோ ரூ 234 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 28 நாட்கள் வீதம் 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் 28 ஜிபி டேட்டா சலுகை வருகிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

ஜியோ ரூ 1234 திட்ட விவரங்கள் (Jio Rs 1234 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நம்ப முடியாத வகையில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த ஜியோ ரூ 1234 திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த வேலிடிட்டி நாட்களில் 28 நாட்கள் வீதம் 11 மாதங்களுக்கான சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையை ஜியோ கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது.

இந்த சலுகைகள் போக ஜியோ சாவன், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி ஆகியவற்றின் சந்தா கிடைக்கிறது. இந்த ஜியோ ரூ 1234 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ.112 மட்டுமே செலவாகிறது. ஆகவே, இந்த திட்டம் எப்படி பார்த்தாலும் அதிகபட்ச சலுகைகளை கொண்ட திட்டமாகவே இருக்கிறது.

மேற்கண்ட 3 திட்டங்களும் ஜூலை 3ஆம் தேதிக்கு பிறகும் விலை ஏற்றம் செய்யப்படாமல் கிடைக்கின்றன. ஜியோபாரத் போன் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டங்கள் பொருந்தும். மேலும், ஜியோபோன் பிரைமா, ஜியோ போன் ஆகியவற்றின் திட்டங்களிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜியோபோன் கஸ்டமர்களுக்கு ரூ 895 விலையில் 336 நாட்கள் வேலிடிட்டி உடன் வாய்ஸ் கால்கள், 24 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வீதம் 50 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இதேபோல ரூ 223, ரூ 186, ரூ 152 போன்ற பல்வேறு விலையில் திட்டங்கள் இருக்கின்றன. இதே விலையில் ஜியோபோன் பிரைமா கஸ்டமர்களுக்கும் திட்டங்கள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 Jio Plans Offers Same Benefits Even After July 3 Price Rs 123, Rs 234 And Rs 1234
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X