ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. Jio-வின் இந்த 3 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?

|

ஒரு வருடத்திற்கு ஒரே ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும், 365 நாட்களுக்கும் போதும்-போதும் என்கிற அளவிற்கு நன்மைகளை வழங்கும் திட்டங்கள் ரிலையன்ஸ் ஜியோவிடம் உள்ளன என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒரு வருட வேலிடிட்டி என்றதுமே நாம் இங்கே Jio-வின் பிராட்பேண்ட் திட்டங்களை பற்றி பார்க்கப்போகிறோம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நாம் இங்கே பார்க்க போவது முழுக்க முழுக்க ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெயிட் திட்டங்களை பற்றியே ஆகும்!

அதென்ன திட்டங்கள்? அதன் விலை நிர்ணயங்கள் என்ன? அது என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

தொல்லைகள் பல.. ஆனால் தப்பிக்க ஒரு ஒரே வழி!

தொல்லைகள் பல.. ஆனால் தப்பிக்க ஒரு ஒரே வழி!

ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறையும் ரீசார்ஜ் செய்வது எப்போதுமே ஒரு தொந்தரவான வேலை தான். ஏனென்றால், எப்போவதாவது நீங்கள் ரீசார்ஜ் செய்ய மறந்து விட்டால் - அவுட்கோயிங் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை இழந்து விடுவீர்கள்.

அதுமட்டுமா? ரீசார்ஜ் முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே, அது தொடர்பான நோட்டிஃபிக்கேஷன்கள் உங்களை தொல்லை செய்ய ஆரம்பிக்கும்! இதுபோன்ற இம்சைகளில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது!

வாய் உள்ள புள்ள பொழச்சிக்கும்! ஒரே ஒரு கோரிக்கை.. அரசாங்கத்தை வைத்தே அம்பானிக்கு ஸ்கெட்ச் போட்ட BSNL!வாய் உள்ள புள்ள பொழச்சிக்கும்! ஒரே ஒரு கோரிக்கை.. அரசாங்கத்தை வைத்தே அம்பானிக்கு ஸ்கெட்ச் போட்ட BSNL!

கட்டண உயர்வுகளிலிருந்தும் கூட தப்பிக்கலாம்!

கட்டண உயர்வுகளிலிருந்தும் கூட தப்பிக்கலாம்!

மேற்கண்ட தொல்லைகளில் இருந்து தப்பிக்க விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ரிலையன்ஸ் ஜியோவின் 3 வருடாந்திர திட்டங்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, அதை ரீசார்ஜ் செய்து கொள்வது மட்டுமே ஆகும்.

ஜியோவின் வருடாந்திர திட்டங்கள் ஆனது 365 நாட்கள் என்கிற மிகப்பெரிய வேலிடிட்டியை மட்டுமின்றி - டெய்லி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் சில கூடுதல் நன்மைகளையும் வழங்குகின்றன.

அதுமட்டுமின்றி, ஜியோவின் சாத்தியமான கட்டண உயர்வுகளிலிருந்து தப்பிக்க விரும்புபவர்களும் கூட இந்த 3 திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்துகொண்டால் அடுத்த 1 வருடத்திற்கு எந்த கவலையும் இருக்காது!

ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் அந்த வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் இதோ:

01. ஜியோ ரூ 2,545 ரீசார்ஜ்:

01. ஜியோ ரூ 2,545 ரீசார்ஜ்:

இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 504ஜிபி டேட்டா கிடைக்கும்; அதாவது தினமும் 1.5 அளவிலான ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். 1.5 ஜிபி என்கிற தினசரி டேட்டா வரம்பை மீறினால், இண்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறையும்.

டேட்டா நன்மையை தவிர்த்து, இது தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையையும் வழங்குகிறது. கடைசியாக இந்த பேக் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.

Google Pay, Paytm யூசர்களுக்கு RBI-யின் அலெர்ட்! உடனே செய்யணும்.. அப்போ தான் உங்க பணத்தை காப்பாற்ற முடியும்!Google Pay, Paytm யூசர்களுக்கு RBI-யின் அலெர்ட்! உடனே செய்யணும்.. அப்போ தான் உங்க பணத்தை காப்பாற்ற முடியும்!

 02. ஜியோ ரூ 2,879 ரீசார்ஜ்:

02. ஜியோ ரூ 2,879 ரீசார்ஜ்:

இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் உடன் 2ஜிபி அளவிலானா டெய்லி டேட்டாவையும் வழங்கும்.

இந்த திட்டத்தின் கீழும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தாக்கள் அணுக கிடைக்கும்!

03. ஜியோ ரூ 2,999 ரீசார்ஜ்:

03. ஜியோ ரூ 2,999 ரீசார்ஜ்:

ஜியோவின் இந்த திட்டம் மொத்தம் 912.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது தினமும் 2.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மேலும் இது 75ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவையும் வழங்கும்.

365 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தாவை வழங்குகிறது. உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
3 Jio Annual Plans Which Save Your Money From Potential Tariff Hikes In Upcoming Days

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X