டிஸ்கவுண்ட் தரலாம்.. அதுக்காக இப்படியா? இதுக்கு ரூ.10000, அதுக்கு ரூ.25000.. 3 iQOO போன்கள் மீது திடீர் ஆஃபர்!
"வந்த வரை லாபம்.. அள்ளிக்க வேண்டியது தான்" என்று நினைக்க வைக்கும்படியாக, ஐக்யூ நிறுவனம் ஒரு தரமான சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்திய சந்தைக்குள் நுழைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் நோக்கத்தின் கீழ் ஐக்யூ தேர்ட் அனிவர்சரி சேல் (iQOO Third Anniversary Sale) அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ நிறுவனமானது, விவோ (Vivo) நிறுவனத்தின் துணை பிராண்டாக கடந்த மார்ச் 2019 இல் இந்தியாவிற்குள் நுழைந்தது. அப்போதில் இருந்து தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததன் விளைவாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் (Best-selling Smartphone Brands) ஒன்றாகவும் உருமாறியுள்ளது.

இதற்கிடையில் தான் ஐக்யூவின் மூன்றாமாண்டு சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த சிறப்பு விற்பனை வருகிற ஏப்ரல் 24 வரை நடக்கவுள்ளது. இதன் கீழ் ஐக்யூவின் சமீபத்திய மற்றும் கடைசி ஜெனரேஷனை சேர்ந்த 3 பிளாக்ஷிப் போன்களின் மீது நம்பமுடியாத தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்யூ.காம் (iQOO.com) மற்றும் அமேசான் இந்தியா (Amazon India) ஆகிய 2 தளங்களின் வழியாகவும் அணுக கிடைக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது, ஐக்யூ 11 (iQOO 11) ஸ்மார்ட்போனை வெறும் ரூ.49,999 க்கு வாங்கலாம். இது கடந்த ஜனவரில் ரூ.59,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது; அதாவது இதன் மீது முழுதாக ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது.
இதே போல ஐக்யூ 9 ப்ரோ (iQOO 9 Pro) மற்றும் ஐக்யூ 9 (iQOO 9) மீதும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.64,999 க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ 9 ப்ரோவானது ரூ.25,000 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.39,990 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் ஐக்யூ 9 ரூ.12,000 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.30,990 க்கு வாங்க கிடைக்கிறது.
ஐக்யூ 11 முக்கிய அம்சங்கள்: இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் இ6 அமோஎல்இடி குவாட் எச்டி+ டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், 16ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (ஃபன்டச்ஓஎஸ் 13), 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ஐக்யூ 11 ஸ்மார்ட்போனானது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அதில் 50எம்பி சாம்சங் ஜிஎன்5 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 13எம்பி டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.
ஐக்யூ 9 முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் 6.56-இன்ச் ஃபுல்எச்டி+ அமோஎல்இடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட், 12ஜிபி வரை ரேம், 48எம்பி + 13எம்பி + 13எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4350mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
ஐக்யூ 9 ப்ரோ முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் 6.78-இன்ச் 2கே அமோஎல்இடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட், 50எம்பி மெயின் + 50எம்பி அல்ட்ரா-வைட் + 16எம்பி போர்ட்ரெய்ட் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 4,700mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








