காயத்துக்கு மருந்து போட்ட Whatsapp! 3 முக்கிய அம்சம் அறிமுகம்.. இது தெரிந்தால் வேற எதையும் தொடமாட்டீங்க.!

|

மெட்டாவுக்கு சொந்தமான செய்தியிடல் தளமான Whatsapp, மூன்று புதிய அம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக பீட்டா பதிப்புகளில் இருந்த இந்த அம்சங்கள் தற்போது அனைத்து பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 3 முக்கிய அம்சங்களின் விவரத்தை பார்க்கலாம்.

மன உளைச்சலில் இருந்து பயனர்கள்

மன உளைச்சலில் இருந்து பயனர்கள்

Whatsapp நிறுவனம் பயனர்களை தேவை அறிந்து தொடர்ந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமூகவலைதளங்களில் பிரதான நிறுவனங்களாக இருப்பது வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகும். ட்விட்டரை சமீபத்தில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான மஸ்க் கைப்பற்றினார். கைப்பற்றிய தினம் முதல் ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக இதை சொல்லலாம்.

அதிரடி நடவடிக்கையில் வாட்ஸ்அப்

அதிரடி நடவடிக்கையில் வாட்ஸ்அப்

எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய உடன் ப்ளூடிக் சேவைக்கு கட்டண முறையை அறிவித்தார். இந்த அறிவிப்பால் பலரும் அதிருப்தியில் இருக்கினர். ட்விட்டரை விட்டு வெளியேறி மாற்று சமூகவலைதளங்களுக்குள் நுழைந்துவிடலாம் என பயனர்கள் சிந்தித்து வரும் நேரத்தில் மெட்டா நிறுவனம் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

3 முக்கிய அம்சங்கள்

3 முக்கிய அம்சங்கள்

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் இல் மிகவும் முக்கிய அம்சங்கள் மொத்தமாக களமிறக்கப்பட்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக பீட்டா பதிப்பில் சோதனையில் இருந்த இந்த அம்சங்கள் தற்போது மொத்தமாக அனைத்து மக்களுக்குமானதாக மாற்றப்பட்டிருக்கின்றன. முக்கிய மூன்று அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். அது இன்-சேட்டிங் வாக்கெடுப்பு உருவாக்கும் திறன், 32 பேர் வீடியோ காலிங் லிமிட், 1024 பேர் வரை க்ரூப் லிமிட் ஆகும்.

மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு

மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இந்த புதிய அம்சங்களை அறிவித்தார். வாட்ஸ்அப் இல் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த அம்சம், உலகளவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாகக் கிடைக்கத் தொடங்கும் எனவும் அடுத்த சில மாதங்களில் அனைவருக்கும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1024 குரூப் மெம்பர்கள்

1024 குரூப் மெம்பர்கள்

வாட்ஸ்அப் இல் குரூம் மெம்பர்கள் லிமிட் 256 என இருந்த நிலையில் சமீபத்தில் இது 512 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த குழு எண்ணிக்கை 512 இல் இருந்து 1024 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இனி க்ரூப் இல் 1024 பேர் வரை இணைக்கலாம். உங்களுக்கு ஒரு விஷயம் பலரிடம் பரவ வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த 1024 பேர் உள்ள குழுவில் பதிவிட்டாலே போதுமானதாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

வாட்ஸ்அப் வீடியோ கால் இல் 32 பேர்

வாட்ஸ்அப் வீடியோ கால் இல் 32 பேர்

வாட்ஸ்அப் இல் இனி காலிங் லிங்க் உருவாக்கலாம். அதேபோல் வீடியோகால் அழைப்பு லிமிட் 32 பேராக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சமானது பயனர்களை புதிய அழைப்பிற்கு அழைக்கவோ அல்லது முன்னதாகவே உள்ள அழைப்பில் சேரவோ அனுமதிக்கும். வாட்ஸ்அப் காலிங் இணைப்புகள் மூலம் ஒரே நேரத்தில் 32 பேர் வரை அழைப்பில் சேர அனுமதிக்கும்.

அதேபோல் இந்த இணைப்புகள் ஆனது 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. காலிங் இணைப்பு மேற்கொள்வதற்கான விருப்பம் கூகுள் மீட், ஜூம் மீட் போன்று இருக்கிறது.

வீடியோ கால் லிங்க்

வீடியோ கால் லிங்க்

காலிங் பயன்பாட்டில் "அழைப்பு இணைப்பு உருவாக்கு" என்ற விருப்பம் காட்டப்படுகிறது. இதை கிளிக் செய்தால் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் தனித்துவமான அழைப்பு இணைப்பு உருவாக்கப்படும். நீங்கள் உருவாக்கப்படும் காலிங் லிங்க்கை வாட்ஸ்அப் சேட்டிங் மூலமாகவும் பகிரலாம் அல்லது பிற தளங்கள் மூலமாகவும் இணைப்பை நகலெடுத்து பகிரலாம்.

வாட்ஸ்அப் போலிங் அம்சம்

வாட்ஸ்அப் போலிங் அம்சம்

வாட்ஸ்அப் போலிங் அம்சம் என்பது சேட்டிங் பயன்பாட்டில் கருத்துக் கணிப்புகளை உருவாக்கும் திறன் ஆகும். வாட்ஸ்அப் க்ரூப் இல் இனி நீங்கள் போலிங்க சிஸ்டத்தை உருவாக்கலாம். இந்த போலிங் இல் நீங்கள் 12 ஆப்ஷனை வைக்கலாம். இந்த 12 இல் ஏதாவது ஒன்றுக்கு உறுப்பினர்கள் வாக்களிக்கலாம். பயனர்கள் வாக்களித்த பிறகு வாக்கெடுப்பின் முடிவுகளை பார்க்கலாம். இந்த அனைத்து அம்சங்களை பெறுவதற்கு பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.

இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் சென்றடைய சிறிது காலம் எடுக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
3 Important Features Announced in Whatsapp: Now Whole experience is about to change

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X