Home
News

இந்த 3 விஷயமும் தெரியாம.. 2024-ல் புது போன் எதுவும் வாங்கிடாதீங்க.. அப்புறம் நாங்க பொறுப்பு இல்ல!

இந்திய வாடிக்கையாளர்கள் முன்பை போல் இல்லை, குறிப்பாக புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது! பளபளப்பான டிசைனை பார்த்தும், பிராண்டிங் பெயரை பார்த்தும், மலிவான விலைக்கு 200எம்பி குவாட் ரியர் கேமரா செட்டப்பை பார்த்து.. புதிய போன்களை வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது.

இது எங்களுடைய கணிப்பல்ல. உலகளாவிய தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனமான (Global technology market research firm) கவுன்டர்பாயின்ட்டின் (Counterpoint) சமீபத்திய ஆய்வாகும். இந்த ஆய்வு, புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது பெரும்பாலான இந்தியர்கள் எந்தெந்த விஷங்களை கருத்தில் கொள்கிறார்கள் என்கிற விஷயத்தை புட்டுப்புட்டு வைத்துள்ளது.

இந்த 3 விஷயமும் தெரியாம.. 2024-ல் புது போன் எதுவும் வாங்கிடாதீங்க!

கவுன்டர்பாயின்ட் ஆய்வின்படி, 76% பேர் தாங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன்களின் பெர்ஃபார்மென்ஸில் (Performance) கவனம் செலுத்துகிறார்கள். அதாவது குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் என்ன சிப்செட்டை (Chipset) பேக் செய்கிறது? அது லேட்டஸ்ட் ப்ராசஸரா அல்லது பழையதா? போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள்.

அடுத்ததாக 66% பேர் கிராபிக்ஸ் மற்றும் கேமிங் திறன்களை (Graphics and gaming capabilities) கருத்தில் கொள்கிறார்கள். அதாவது தாங்கள் வாங்கும் ஸ்மார்ட்போனின் ப்ராசஸரை மட்டுமின்றி, அதன் ரேம் (RAM), இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal Storage) மற்றும் ஸ்மார்ட்போனின் ஹீட்டிங் மேனேஜ்மேண்ட் (Heating Management) போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள்.

இந்த 3 விஷயமும் தெரியாம.. 2024-ல் புது போன் எதுவும் வாங்கிடாதீங்க!

கடைசியாக 62% பேர் புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் போது அது 5ஜி கனெக்டிவிட்டி ஆதரவுடன் (5G Connectivity Support) வருகிறது என்பதை உறுதிசெய்து கொள்கிறார்கள். அதாவது இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் அணுக கிடைக்கும் ஜியோ 5ஜி (Jio 5G) மற்றும் ஏர்டெல் 5ஜி (Airtel 5G) நெட்வொர்க்கை தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன்கள் சப்போர்ட் செய்கிறது என்பதை உறுதிப்படுத்தி கொள்கிறார்கள்

கவுன்டர்பாயின்ட்டின் இந்த சமீபத்திய ஆய்வின் வழியாக, மொபைல் நிறுவனங்களில் ஏமாற்று வேலைகளில் சிக்கிகொள்ளாத அளவிற்கு இந்தியர்கள் மிகவும் முதிர்ச்சியடைந்து வருகிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது. ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்ல, இயர்போன்ஸ் / டிடபுள்யூஎஸ் (TWS), ஸ்மார்ட் டிவிகள் போன்ற பல்வேறு ஸ்மார்ட் டிவைஸ்களிலும் கூட சிப்செட்களின் முக்கியத்துவத்தை இந்தியர்கள் அறிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்.

இந்த 3 விஷயமும் தெரியாம.. 2024-ல் புது போன் எதுவும் வாங்கிடாதீங்க!

கவுன்டர்பாயின்ட்டின் கூற்றுப்பதோ, இந்த ஆய்வில் கலந்துகொண்ட 61% பேர் மீடியாடெக் நிறுவனத்தின் சிப்செட்களை (MediaTek Chipsets) பற்றி அறிந்திருக்கிறார்கள். கவுன்டர்பாயின்ட்டின் சமீபத்திய குளோபல் ஸ்மார்ட்போன் ஏபி ஷிப்மென்ட்களின்படி (Global smartphone AP Shipments), மீடியாடெக் நிறுவனம் தான் 2023 காலாண்டில், 31% சந்தைப் பங்குடன் உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் சிப்செட் பிராண்ட் (World's top smartphone chipset brand) ஆக இருந்தது.

எந்தவொரு ஸ்மார்ட் டிவைஸிலும் சிப்செட் ஏன் முக்கியம்? சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு புதிய ஸ்மார்ட் எலக்ட்ரானிக் டிவைஸையுமே ஹை-என்ற சிப்செட்கள் (High-end Chipsets) தான் இயக்குகின்றன. ஆப்பிளின் உறுதியான பெர்ஃபார்மென்ஸிற்கும் (Apple's Solid Performance) சிப்செட்கள் தான் காரணம்.

இந்த 3 விஷயமும் தெரியாம.. 2024-ல் புது போன் எதுவும் வாங்கிடாதீங்க!

அதேபோல கூகுள் பிக்சல் (Google Pixel) ஸ்மார்ட்போன்களின் ஏஐ திறன்களுக்கும் (AI Capabilities) சிப்செட் தான் காரணம் மற்றும் சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) போன்களில் உள்ள தொழில்துறை-முன்னணி அம்சங்களுக்கும் (Industry-leading features) கூட சிப்செட்கள் தான் காரணம்.. ஒட்டுமொத்தமாக ஒரு ஸ்மார்ட்போனின் இதயமே அது பேக் செய்யும் சிப்செட் தான்!

கவுன்டர்பாயின்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குனர் ஆன தருண் பதக் (Director Tarun Pathak), "எந்தவொரு எலெக்ட்ரானிக் டிவைஸ் ஆக இருந்தாலும் சரி, அது வழங்கும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்கள் (Personalised experiences) தான் அதை வாங்க தூண்டும் முக்கியமான காரணமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறி உள்ளார்.

"இது, அதிவேக இணைப்பில் (Ultra-fast connectivity) இடைவிடாத கவனம் செலுத்தி, தடையற்ற, நம்பகமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்திற்காக, செயற்கை நுண்ணறிவை (Artificial intelligence ) மேம்படுத்தும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் ஆழமான ஒருங்கிணைப்பை (Integration of advanced technologies) குறிக்கிறது" என்றும் தருண் பதக் கூறி உள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 features indian customers consider very important while buying new smartphone counterpoint report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X