ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?

|

பூமியின் மேற்பரப்பில் கடல் 70 சதவிகிதம் சூழ்ந்துள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் மனிதர்கள் ஒட்டுமொத்த கடல் பரப்பில் வெறும் 5 சதவிகிதத்தை மட்டுமே ஆராய்ந்துள்ளனர். பூமியின் ஆழ்கடல் ரகசியங்கள் இன்னும் கடலின் ஆழங்களில் கண்டுபிடிக்க முடியாத இரகசியமாகவே இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகள் மீது மனிதர்கள் காட்டும் ஆர்வத்தைப் போல், ஆழ்கடல் ஆராய்ச்சியிலும் நீண்ட காலமாக மனிதர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விண்வெளியை விட ஆழ்கடல் ஆராய்ச்சி கூடுதல் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்கடலில் நடத்தப்பட்ட கிரேட் கேட்டர் பரிசோதனை (Great Gator Experiment)

ஆழ்கடலில் நடத்தப்பட்ட கிரேட் கேட்டர் பரிசோதனை (Great Gator Experiment)

இந்த ரகசியங்கள் கட்டவிழ்க்கும் பணியில் சில ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் சில பல வினோதமான ஆராய்ச்சிகளை எப்போதும் மேற்கொள்ள ஆர்வமாக உள்ளனர். இந்த வரிசையில், லூசியானா பல்கலைக்கழகத்தின் கடல்சார் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகளான கிரேக் மெக்லைன் மற்றும் கிளிஃப்டன் நுன்னலி, நீருக்கடியில் உள்ள உணவு வலை சங்கிலியைப் பற்றி அறியவும் ஆழமான நுண்ணறிவுகளைப் பெறவும் ஒரு வருடத்திற்கு முன்பு, கிரேட் கேட்டர் பரிசோதனை (Great Gator Experiment) எனப்படும் ஒரு பரிசோதனையை மேற்கொண்டனர்.

கடல் தரையில் வசிக்கும் மர்மமான உயிரினங்கள்

கடல் தரையில் வசிக்கும் மர்மமான உயிரினங்கள்

இரண்டு விஞ்ஞானிகள் கடலின் அடித்தட்டில் கடல் தரையில் வசிக்கும் மர்மமான உயிரினங்களுக்கு ஒரு விருந்தை கடலின் மேற்பரப்பில் இருந்து வழங்க திட்டமிட்டனர். இந்த விருந்தில் மூன்று இறந்த முதலைகளின் உடல்கள் விருந்தாகப் படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லூசியானாவின் இந்த இறந்த முதலையின் உடல்களை எப்படி, ஆழ்கடல் உயிரினங்களால் சாப்பிடப்படும் என்பதை அறிய அவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளனர். உண்மையில், இவர்கள் எதிர்பார்த்ததை விட ஆராய்ச்சியின் முடிவுகள் அவர்களைத் திகைப்படையச் செய்துள்ளது.

பூமியின் அல்ட்ரா பிளாக் நிற மீன் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு! ரகசியத்தையும் அவிழ்த்துவிட்ட விஞ்ஞானி!பூமியின் அல்ட்ரா பிளாக் நிற மீன் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு! ரகசியத்தையும் அவிழ்த்துவிட்ட விஞ்ஞானி!

எடை கற்றைகள் கட்டி 3 முதலையின் உடலை விருந்தாக்கிய விஞ்ஞானிகள்

எடை கற்றைகள் கட்டி 3 முதலையின் உடலை விருந்தாக்கிய விஞ்ஞானிகள்

இந்த இரண்டு விஞ்ஞானிகள் கடலில் விடப்பட இறந்த முதலையின் உடலில் எடை கற்றைகள் கட்டி அதை ஆழ்கடலில் தரையில் சென்று சேரும் படி செய்திருந்தனர். இதற்காக அவர்கள் மூன்று இறந்த முதலைகளின் உடல்களை ஒரு கப்பலில் எடுத்துச் சென்று கடலில் இறக்கியுள்ளனர். மெக்சிகோ வளைகுடாவில் சுமார் இரண்டு கிலோமீட்டர் நீரில் மூழ்கிய பிறகு, முதலையின் உடல்கள் கடலின் தரை பகுதியில் விழுந்து, ஆழ்கடலில் புழுதியையும் தூசியையும் கிளப்பியுள்ளன.

ஆழ்கடலில் பிணந்தின்னி கழுகலாக இந்த ஐசோபாட்கள் (isopods)

ஆழ்கடலில் பிணந்தின்னி கழுகலாக இந்த ஐசோபாட்கள் (isopods)

கடலின் தரைப் பகுதியை அடைந்த முதலையின் உடல்களில் முதல் அலிகேட்டரின் உடல் வெறும் 24 மணி நேரத்திற்குள் கடலின் தரையில் வாழும் உயிரினங்களால் சாப்பிட்டு முடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஆராய்ச்சியாளர்கள் முதலையைக் கடல் தரையில் விட்டு வெளியேறியவுடன், அதை ராட்சத ஐசோபாட்கள் (isopods) சூழ்ந்துள்ளன. விஞ்ஞானி நுன்னாலியின் கூற்றுப்படி, ஐசோபாடுகள் என்பது ஆழ்கடல் பிணந்தின்னி கழுகுகளைப் போன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாய்க்குட்டி சைசில் கண்டுபிடிக்கப்பட்ட கடல் வண்டு! ஆழ்கடலில் சிக்கிய புதிய உயிரினம் இது தான்!நாய்க்குட்டி சைசில் கண்டுபிடிக்கப்பட்ட கடல் வண்டு! ஆழ்கடலில் சிக்கிய புதிய உயிரினம் இது தான்!

அடையாளம் காண முடியாத ஆழ்கடல் கருப்பு மீன்கள்

அடையாளம் காண முடியாத ஆழ்கடல் கருப்பு மீன்கள்

ஆழ்கடலில் நடந்த இந்த விருந்தில் ஐசோபாட்களுடன், சில ஆம்பிபோட்ஸ்களும் (amphipods) சேர்ந்து முதலையின் உடலை வேட்டையாடியுள்ளன. இத்துடன் சில கிரெனேடியர்கள் (grenadiers) மற்றும் சில மர்மமான, அடையாளம் காண முடியாத ஆழ்கடல் கருப்பு மீன்கள் (deep sea black fish) போன்ற பிற அரிய வகை ஆழ்கடல் உயிரினங்கள் முதலையின் உடலை முழுமையாக உண்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இராட்சஸ ஐசோபாட்கள் எதிர்பார்த்ததை விட வேகமாகவே முதலையின் உடலைப் பிரித்து உள்ளே சென்று சாப்பிட்டதைக் கண்டு விஞ்ஞானிகள் மிரண்டுள்ளனர்.

இரண்டாவது முதலையின் உடலிற்கு என்ன ஆனது தெரியுமா?

இரண்டாவது முதலையின் உடலிற்கு என்ன ஆனது தெரியுமா?

இரண்டாவது முதலையின் உடல் நீண்ட காலத்திற்குக் கடலின் தரையில் விடப்பட்டிருந்தது. விஞ்ஞானி 51 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முதலையின் உடலைப் பார்வையிட்டபோது, ​​அவர்கள் கண்டது வெறும் எலும்புகளை மட்டும் தான். அதிலும் முதலையின் எலும்புகளில் சிவப்பு நிற சாயலுடன் எஞ்சிய எலும்புக்கூட்டின் பாகங்களாக மட்டுமே காணப்பட்டது. இது உண்மையில் விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியது. முதலையின் சடலத்தில் ஒரு அளவுகோல் அல்லது ஸ்கூட் கூட எதுவும் எஞ்சியிருக்கவில்லை என்று மெக்லைன் அட்லஸ் கூறியுள்ளார்.

மனிதர்களை பிரமிக்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்?மனிதர்களை பிரமிக்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்?

எலும்புகளை உண்ணும் ஓசெடாக்ஸ் கடல் புழுக்கள்

எலும்புகளை உண்ணும் ஓசெடாக்ஸ் கடல் புழுக்கள்

எஞ்சி இருந்த முதலையின் எலும்புகளில் சில எலும்புகள் உடைக்கப்பட்டிருந்தது. இதற்குப் பின்னணியில் ஒசெடாக்ஸ் இனத்தின் ஒரு புதிய இனத்தால் முதலையின் எலும்பின் பிணைப்புகள் உடைக்கப்பட்டது என்று பரிசோதனையில் கண்டறியப்பட்டது. ஓசெடாக்ஸ் என்பது எலும்புகளை உண்ணும் புழுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்லைனின் கூற்றுப்படி, மெக்சிகோ வளைகுடாவில் ஒசெடாக்ஸ் உறுப்பினர் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

ஓசெடாக்ஸ் கடல் புழு இனங்களின் புதிய இனம் கண்டுபிடிப்பு

ஓசெடாக்ஸ் கடல் புழு இனங்களின் புதிய இனம் கண்டுபிடிப்பு

ஏற்கனவே அறியப்பட்ட ஓசெடாக்ஸ் இனங்களின் டிஎன்ஏவை ஒப்பிடுகையில், இது ஒரு புதிய இனத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய ஒசெடாக்ஸ் இனத்தின் ஆச்சரியமான கண்டுபிடிப்பு இருந்தபோதிலும், இது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், மூன்றாவது முதலையின் தடமே காணப்படவில்லை, மூன்றாவது முதலை கீழே விழுந்த இடத்திற்கு அவர்கள் சென்றபோது, ​​அவர்கள் பார்த்தது வெறும் மணலை மட்டும் தான். முதலை விடப்பட்ட தளத்திலிருந்து மறைந்தது அவர்கள் அதிர்ச்சியடையச் செய்தது.

யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு....யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு....

மூன்றாவது முதலையின் உடல் முழுமையாக காணாமல் போனதா?

மூன்றாவது முதலையின் உடல் முழுமையாக காணாமல் போனதா?

குழு உடனடியாக சுற்றியுள்ள பகுதியைத் தேடியது, ஆனால் முதலையின் ஒரு தடயத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், தளத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் விஞ்ஞானிகள் முதலையுடன் இணைக்கப்பட்ட எடையை மட்டும் அவர்கள் கண்டுபிடித்தனர். இது நிச்சயமாக எதோ ஒரு உயிரினம் செய்த வேலையாகத் தான் இருக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் கணித்தனர். அவர்களின் கூற்றுப்படி, முதலையை அடித்துச் சென்ற வேட்டையாடும் திறன் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்.

எடை கற்களுடன் முதலையை இழுத்து சென்றது இராட்சஸ ஸ்க்விட்டா அல்லது இராட்சஸ சுறாவா?

எடை கற்களுடன் முதலையை இழுத்து சென்றது இராட்சஸ ஸ்க்விட்டா அல்லது இராட்சஸ சுறாவா?

இந்த செயலை செய்த அந்த ஆழ்கடல் குற்றவாளி நிச்சயமாக ஒரு பெரிய முதலையை முழுவதுமாக இழுக்கும் அளவிற்கு பெரியதாக இருந்திருக்க வேண்டும் மற்றும் முதலியுடன் இணைக்கப்பட்ட எடையை இழுக்கும் அளவிற்கு போதுமான சக்தியுடன் இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த உயிரினம் நிச்சயமாக ஒரு பெரிய இராட்சஸ ஸ்க்விட் அல்லது கண்டுபிடிக்கப்படக் காத்திருக்கும் ஒரு பெரிய இராட்சஸ சுறாவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

ஆழ்கடலில் இராட்சஸ உயிரினங்கள் மறைந்திருக்க வாய்ப்பு

ஆழ்கடலில் இராட்சஸ உயிரினங்கள் மறைந்திருக்க வாய்ப்பு

ஆழ்கடலில் இராட்சஸ உயிரினங்கள் மறைந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. இதுவரை ஒரு முதலை முழுவதையும் உட்கொள்ளக்கூடிய ஒரு இராட்சஸ ஸ்க்விட்டை நான் இன்னும் நேரில் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒன்றை நேரில் கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை உருவானால், அந்த கப்பலில் இருக்க நான் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்து திமிங்கிலங்களை வைத்து ஆராய்ச்சியா?

அடுத்து திமிங்கிலங்களை வைத்து ஆராய்ச்சியா?

இரண்டு விஞ்ஞானிகளும் இந்த ஆராய்ச்சியின் மூலம் எதிர்பாராத பல அதிர்ச்சி தகவலைக் கண்டறிந்துள்ளனர். அடுத்த முறை இவர்கள் திமிங்கில ஆராய்ச்சியைச் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி பற்றி உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுடன் கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள். அறிவியல், பூமி, விண்வெளி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சுவாரசியமான தகவல்களுக்கு எங்களின் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
3 Dead Alligators Were Dropped On Ocean Floor And The Experiment Results Stunned Scientists : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X