Home
News

அப்போ.. மும்பை ஃபைனல் வர்றது கன்ஃபார்ம்-ஆ.. அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!

2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வருகிற மே 26 ஆம் தேதி வரையிலாக நடக்க உள்ளன. ஒருவேளை உங்கள் வீட்டில் பிராட்பேண்ட் கனெக்ஷன் இல்லை என்றால்.. அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் காண உங்களுக்கு நிச்சயம் கூடுதல் ரீசார்ஜ்கள் தேவைப்படும்.

ஆம் என்றால்.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த 3 கிரிக்கெட் திட்டங்களும் (Cricket Plans) உங்களுக்கானது தான். குறிப்பாக 200ஜிபி மொத்த டேட்டாவை வழங்கும் ஒரு திட்டத்தை பார்க்கும் போது.. "மும்பை இந்தியன்ஸ் ஃபைனல் வந்துடும்ன்ற ஓவர் கான்பிடென்ஸ்ல கொடுக்குற பிளான்-ஆ இது!" என்று உங்களுக்கு தோன்றலாம்!

அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!

அதென்ன திட்டங்கள்? ஜியோவின் கிரிக்கெட் பிளான்கள் தொகுப்பின் கீழ் மொத்தம் 3 திட்டங்கள் மட்டுமே உள்ளன: ரூ.749. ரூ.222 மற்றும் ரூ.49. இதில் ரூ.49 ரீசார்ஜ் ஆனது மிகவும் சமீபத்தில் அறிமுகமான திட்டமாகும். இதில் 200ஜிபி டேட்டாவுடன் வருவது ரூ.749 திட்டமாகும்.

ரூ.749 திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இது 3 மாதங்கள் அல்லது சரியாக 90 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் திட்டமாகும். இதன் கீழ் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது செல்லுபடியாகும் காலம் முழுவதுமாக மொத்தம் 180ஜிபி டேட்டா கிடைக்கும். கூடுதலாக, இந்த திட்டத்தின் மீது 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா ஆபரும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இது மொத்தமாகா 200ஜிபி டேட்டாவை வழங்கும்.

அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!

டேட்டா நன்மையை தவிர்த்து செல்லுபடியாகும் முழு காலத்திற்கும் (90 நாட்களுக்கும்) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (Dialy 100 Free SMS ) நன்மைகளும் கிடைக்கும். கூடவே ஜியோ டிவி (Jio TV) , ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ க்ளவுட் (Jio Cloud) ஆப்களுக்கான இலவச சந்தாக்களும் கிடைக்கும்.

சுவாரசியமாக ரூ.749 திட்டத்தின் கீழ் தகுதியான.. அதாவது 5ஜி போன் (5G Phone) வைத்து இருக்கும்; 5ஜி நெட்வொர்க் (5G Network) கிடைக்கும் பகுதியில் இருக்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கான.. அன்லிமிடெட் 5ஜி டேட்டா பலனும் (Unlimited 5G Data Benefit) கிடைக்கும்.

அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!

ரூ.222 திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இதுவொரு டேட்டா பேக் ஆகும். இதன் கீழ் 50ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்திற்கென தனியாக எந்த வேலிடிட்டியும் இல்லை. அதாவது இதை ரீசார்ஜ் செய்ய உங்களிடம் ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள ஒரு மெயின் ரீசார்ஜ் தேவைப்படும் என்று அர்த்தம்.

ரூ.49 திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இதுவும் ஒரு டேட்டா பேக் ஆகும். ஜியோவின் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் உங்களுக்கு 25ஜிபி ஹைஸ்பீட் டேட்டா (25GB High Speed Data) கிடைக்கும். டேட்டா நன்மையை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ் வேறு எந்த நன்மைகளும் கிடைக்காது. அதாவது அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான நன்மைகள், ஜியோ ஆப்ஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மைகள் என எதுவும் கிடைக்காது.

மேலும் இந்த திட்டம் 1 நாள் என்கிற வேலிடிட்டி (1 Day Validity) உடன் வருகிறது. அதாவது இதுவொரு டேட்டா வவுச்சராக இருந்தாலும் கூட, இதற்கு வேலிடிட்டி உள்ளது. இருந்தாலும் கூட இதை வெறுமனே ரீசார்ஜ் செய்ய முடியாது. உங்கள் ஜியோ நம்பரில் ஆக்டிவ் ஆக ஒரு பேஸிக் ரீசார்ஜ் (Active Basic Recharge) இருந்தால் மட்டுமே ரூ.49-ஐ ரீசார்ஜ் செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 Cricket Plans From Jio To Watch All IPL 2024 Matches Including Final Without any Interruption
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X